முதல்வராகும் முன்.. விஜய் தலையில் இடி போல் இறங்கிய செய்தி.. அப்போ 118 நிலைமை?

Subscribe to Oneindia Tamil

தமிழ்நாட்டின் முதல்வராக கடைசிக்கட்ட முடிவு விசிக கையில் இருக்கிறது, இன்று கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் விஜயின் தவெக கட்சிக்கு ஆட்சி அமைக்க ஆதரவு அளித்துள்ளதாகவும், இது கூட்டணி இல்லை என்றும், கொள்கை அடிப்படையில் திராவிடத்தையே பாலோ செய்யப்போவதாக தெளிவாக தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளது.

இதன் மூலம் தவெகவின் 107, காங்கிரஸின் 5, கம்யூனிஸ்ட் மற்றம் மார்க்சிஸ்ட் தலா என மொத்தம் 116 எம்எல்ஏ-க்களின் ஆதரவு கிடைத்திருக்கும் நிலையில், 2 இடங்கள் கிடைத்தால் விஜய்க்கு முதல்வர் பதவியும், ஆட்சியும் கிடைக்கும். இதை விசிக தலைவர் திருமாவளவன் முடிவு செய்யும் நிலைக்கு உயர்ந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் ஐயூஎம்எல் உடன் தவெக மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி 2 MLA-க்களின் ஆரவை பெற்றுள்ளது. இதன் மூலம் விஜய் முதல்வராகி ஆட்சி அமைக்கிறார்.

Vijay TVK Politics Vijay TVK CM challenge TVK minority government risks Tamil Nadu government formation 2026 Vijay needs more than 118 MLAs TVK coalition stability issues CPI CPM support to TVK VCK decision on TVK government minority government dangers Tamil Nadu additional MLA support for Vijay TVK government till 2031 Vijay policy conflicts with coalition central government policies TVK Tamil Nadu political instability TVK bare minimum majority Vijay chief minister survival challenge 2026 118 2031

விஜய்-க்கு சவால்

தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவி ஏற்கும் வாய்ப்பு உருவாகியுள்ள நிலையில், அவருக்கு முன்பு பல்வேறு சவால்கள் காத்திருக்கின்றன. வெறும் தேர்தல் வெற்றி பெற்றால் மட்டும் போதாது. ஆட்சி அமைத்த பிறகு தினசரி நிர்வாகம், கொள்கை முடிவுகள், மத்திய அரசுடனான உறவு உள்ளிட்ட பல விஷயங்கள் அவரது அரசின் நிலைதன்மையை தீர்மானிக்கும். இது கூட்டணி கட்சியின் இணக்கத்தை நேரடியாக பாதிக்கும் விஷயம்.

முக்கிய எச்சரிக்கை

இதனால் அரசியல் வல்லுநர்கள் ஒரு முக்கிய எச்சரிக்கையை விஜய் முதல்வராக பதவியேற்பதற்கு முன்பே விடுத்துள்ளனர். இது விஜய் தலையில் இடியாய் இறங்கியுள்ளது. வெறும் 118 ஆதரவுடன் மட்டும் அரசு அமைப்பது பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும், கூடுதலாக 4 அல்லது 5 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெற்று பாதுகாப்பான பெரும்பான்மையை உறுதி செய்வது அவசியம் என்றும் வலியுறுத்துகின்றனர்.

118 ஆதரவு கடிதங்கள்

விஜய் முதல்வராக பதவி ஏற்கும் போது 118 எம்எல்ஏக்களின் ஆதரவுக் கடிதங்களை ஆளுநரிடம் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும். தவெகவுக்கு ஏற்கனவே காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ளது. இன்னும் சில கட்சிகளின் ஆதரவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்த ஆதரவு வெறும் குறைந்தபட்ச எண்ணிக்கையில் (bare minimum) மட்டும் இருந்தால், அது நீண்டகால ஸ்திரத்தன்மையை உறுதி செய்ய முடியாது.

மைனாரிட்டி அரசின் பெரும் அபாயங்கள்

ஒரு மைனாரிட்டி அரசு (minority government) அமைந்தால் பல்வேறு சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு அதிகம். ஒரு எம்எல்ஏ கட்சியை விட்டு விலகினாலோ அல்லது கூட்டணி கட்சி ஆதரவை திரும்பப் பெற்றாலோ உடனடியாக அரசு கவிழும் அபாயம் உள்ளது. மேலும், ஒரு எம்எல்ஏ திடீரென மரணமடைந்தாலும் அல்லது அவரது குற்றப்பின்னணி காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும் அரசின் பெரும்பான்மை இழக்கப்படும்.

இத்தகைய சூழலில் தினமும் அரசை காப்பாற்றுவதற்காகவே போராட வேண்டிய நிலை ஏற்படும். இது ஆட்சியின் செயல்திறனை பாதிக்கும்.

கூடுதல் 4-5 எம்எல்ஏ ஆதரவு அவசியம் - ஏன்?

இந்த அபாயங்களைத் தவிர்க்க, வெறும் 118 ஆதரவுடன் நிற்காமல் கூடுதலாக 4 அல்லது 5 எம்எல்ஏக்களின் ஆதரவைப் பெறுவது அவசியம் என்று அரசியல் நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர். இது அரசுக்கு வலுவான பாதுகாப்பை அளிக்கும். ஒரு அல்லது இரண்டு எம்எல்ஏக்கள் விலகினாலும் அரசு நிலைத்து நிற்கும். இது தவெகவுக்கு மட்டுமல்ல, தமிழக மக்களின் நலனுக்கும் முக்கியமானது. ஏனெனில் நிலையான அரசு மட்டுமே நல்லாட்சியை வழங்க முடியும்.

இதேபோல் தற்போது தவெக உடன் இணைந்துள்ள காங்கிரஸ் கடுமையான நிபந்தனைகள் உடன் கூட்டணி சேர்ந்துள்ளது. இதேபோல் கம்யூனிஸ்ட் மற்றம் மார்க்சிஸ்ட் கட்சியினர் திராவிட கொள்கையை பின்பற்றுவதாக அறிவித்துள்ளனர். இத்தகைய சூழ்நிவையில் தவெக கூட்டணி கட்சிகளின் நலனுக்காக கட்டுப்பட்ட அரசாக இயங்க வேண்டியிருக்கும்.

மத்திய அரசு கொள்கைகளுக்கு ஆதரவு

குறிப்பாக மத்திய அரசின் சில கொள்கைகளுக்கு தவெக ஆதரவாக நடந்து கொண்டால், கூட்டணி கட்சிகளுக்கு அதிருப்தி ஏற்பட வாய்ப்பு அதிகம். இந்த அதிருப்தி வெளிப்படையாக மாறினால், அந்தக் கட்சிகள் ஆதரவைத் திரும்பப் பெற்றுவிடும் நிலை உருவாகலாம். அப்போது விஜய் அரசு மீண்டும் சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

கூடுதல் ஆதரவு யாரிடம் இருந்து வரும்?

தற்போது விஜய்க்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவு கிடைத்துள்ள நிலையில், இன்னும் சில எம்எல்ஏக்களின் ஆதரவு எப்படி கிடைக்கும் என்பது அடுத்த முக்கிய கேள்வியாக உள்ளது. இந்தக் கூடுதல் ஆதரவு யாரிடமிருந்து வரும் என்பது அடுத்த சில நாட்களில் தெளிவாகும் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2031 வரை ஆட்சி நீடிக்குமா?

இந்த அரசியல் சூழலில், தவெக தலைமையிலான அரசு 2031 ஆம் ஆண்டு வரை முழுமையாக நீடிக்குமா என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் எழுந்துள்ளது. ஒரு சிறுபான்மை அரசாக அமைந்தால், தினமும் சிறு சிறு பிரச்சனைகளை சமாளித்தபடியே ஆட்சியை நடத்த வேண்டிய நிலை ஏற்படலாம். மேலும், விஜய் தேர்தலின்போது அறிவித்த பல்வேறு நலத்திட்டங்கள் விரைவில் செயல்படுத்தப்படாவிட்டால், மக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

விஜய் தலைமையிலான தவெக அரசு எப்படி இந்த சவால்களை சமாளிக்கப் போகிறது என்பது தான் இனி வரும் நாட்களின் முக்கிய விவாத பொருளாக இருக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+