கோட்டு போட்டாச்சு.. முதல்வர் சீட்டை பிடிசாச்சு.. அடுத்து விஜய் செய்ய வேண்டிய முக்கிய வேலை இதுதான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில், நம்பிக்கை வாக்கெடுப்பு என்ற மிகப்பெரிய கடலை தாண்டியுள்ளது. இந்த நிலையில் அமைச்சர்களுக்கு துறை ஒதுக்கீடு செய்யும் பணி முக்கியமான கட்டத்தில் உள்ளது. விஜய் தலைமையிலான அரசுக்கு தமிழ்நாட்டு மக்கள் மீதும், முதலீட்டாளர்கள் மீதும் நம்பிக்கை கொண்டு வருவதற்கு இதுதான் முக்கிய கட்டம்.

இந்தியாவில் எந்த மாநிலமாக இருந்தாலும் சரி வளர்ச்சியையும், மக்கள் நலனையும், எதிர்காலத்தையும் தீர்மானிக்கும் நான்கு முக்கிய துறைகள் உள்ளன. தொழில் துறை, சுகாதாரம், கல்வி மற்றும் சுற்றுச்சூழல் ஆகிய துறைகள் தான் வளர்ச்சிக்கு அடித்தளம்.

Vijay Government TVK Government Tamil Nadu Politics Cabinet Allocation Industries Minister Vijay CM TVK government Tamil Nadu cabinet Vijay ministers list Tamil Nadu industries minister Tamil Nadu economy 1 trillion dollar economy Tamil Nadu Vijay political news TVK latest news Tamil Nadu investment growth Chennai political updates Tamil Nadu development plan Tamil Nadu healthcare policy Tamil Nadu education reforms AIADMK split support 1

இந்த நான்கு துறைகளும் மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு, மக்கள் வாழ்க்கைத் தரம் மற்றும் நீண்டகால நிலைத்தன்மையை நேரடியாக பாதிக்கும் காரணத்தால் இத்துறை மேம்பட்டால் நிதி துறை தானாக வளர்ச்சி பாதைக்கு திரும்பும். கோட்டு போட்டாச்சு.. முதல்வர் சிட்டை பிடிசாச்சு.. அடுத்து விஜய் செய்ய வேண்டிய முக்கிய வேலை இதுதான்.

தொழில் துறை அமைச்சர் தேர்வு மிக முக்கியம்

இந்த நான்கு துறைகளில் தொழில் துறை மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. ஏனெனில், இந்தத் துறை தான் மாநிலத்தின் புதிய தொழில் துவங்கவும், உற்பத்திக்கு தேவையான முதலீடுகளை ஈர்க்கும், தொழில் வளர்ச்சியை ஊக்குவிக்கும், வேலைவாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் மொத்த பொருளாதார வளர்ச்சியை தீர்மானிக்கும்.

தமிழ்நாடு தற்போது முக்கியமான வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளது. தமிழ்நாடு 1 டிரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைய வேண்டுமானால், வலுவான, முனைப்பான செயல்பாடுதள் உடன் முடிவுகளை விரைவாக எடுக்கும் தொழில் துறை அமைச்சர் தேவை.

இதேபோல் இப்பதவியில் அமைக்கப்படும் அமைச்சர் தொழில்துறைக்கு நட்பு மனப்பான்மை கொண்டவராகவும், உலகளாவிய தொடர்புகள் உள்ளவராகவும், தமிழ்நாட்டை முதலீட்டாளர்களுக்கு விருப்பமான இடமாக மாற்றும் திறன் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.

தமிழ்நாடு ஏற்கனவே "இந்தியாவின் டெட்ராய்ட்" என்று அழைக்கப்படும் அளவுக்கு வாகனத் தொழில், தகவல் தொழில்நுட்பம், மின்னணு, ஆடை உள்ளிட்ட பல துறைகளில் வலுவான அடித்தளத்தை அமைத்துள்ளது. சரியான தொழில் துறை அமைச்சர் நியமிக்கப்பட்டால், தமிழ்நாடு ஆசியாவின் முன்னணி முதலீட்டு இடங்களில் ஒன்றாக உருவாகும் வாய்ப்பு உள்ளது என கிஷோர் சந்திரன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

சுகாதாரம், கல்வி, சுற்றுச்சூழல் துறைகளின் பங்கு

சுகாதாரத் துறையில் வலுவான தலைமை இருந்தால், பொதுச் சுகாதார உள்கட்டமைப்பு வலுப்பெறும். அனைத்துத் தரப்பு மக்களுக்கும் தரமான மருத்துவச் சேவை கிடைக்கும்.

கல்வித் துறையில் தொலைநோக்கு பார்வையுள்ள அமைச்சர் இருந்தால், எதிர்கால தலைமுறையை வடிவமைக்கும் திறன் பெருகும். தரமான கல்வி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மாநிலம் முழுவதும் விரிவடையும்.

சுற்றுச்சூழல் துறையில் திறமையான அமைச்சர் இருந்தால், தொழில் வளர்ச்சியுடன் இயற்கை வளங்களைப் பாதுகாக்கும், மாசுக் கட்டுப்பாட்டை மேம்படுத்தி, தமிழ்நாட்டில் நிலையான பொருளாதார வளர்ச்சியை உறுதி செய்ய முடியும்.

TVK அரசு சிக்சர் அடிக்குமா?

தமிழக வெற்றிக் கழக அரசு இந்த முக்கிய துறைகளுக்கு திறமையான மற்றும் தகுதியான உறுப்பினர்களைத் தேர்வு செய்து ஒதுக்கப்படுமானால், மாநிலத்தின் நீண்டகால வளர்ச்சி மற்றும் மக்கள் நலன் உறுதி செய்யப்படும். தமிழ்நாட்டின் பொருளாதார இலக்குகளை அடையும் பயணத்தில் இந்த நான்கு துறைகளின் அமைச்சர்களின் பங்கு மிக முக்கியமானது.

கணிப்பு

ஏற்கனவே வெளியான உத்தேச பட்டியலின்படி, பொது நிர்வாகம், காவல் மற்றும் உள்துறை ஆகியவை முதலமைச்சர் விஜயின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், பொதுப்பணித் துறை செங்கோட்டையன் கட்டுப்பாட்டிலும், நகராட்சித் துறை என்.ஆனந்த் கட்டுப்பாட்டிலும், மின்சாரத் துறை சி.டி.ஆர். நிர்மல் குமார் கட்டுப்பாட்டிலும், விளையாட்டு மற்றும் மதுவிலக்குத் துறை ஆதவ் அர்ஜுனா கட்டுப்பாட்டிலும், பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அருண்ராஜ் கட்டுப்பாட்டிலும், சிறுபான்மையினர் நலத்துறை முஸ்தபா கட்டுப்பாட்டிலும், பள்ளிக்கல்வித் துறை வெங்கட்ராமன் கட்டுப்பாட்டிலும், ஆதிதிராவிடர் நலத்துறை ராஜ்மோகன் கட்டுப்பாட்டிலும் இருக்கும் என்று உத்தேச பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதிமுக பிளவு

இந்த நிலையில் அதிமுக-வில் பிளவு ஏற்பட்டு விஜய்-யின் தவெக கட்சிக்கு சுமார் 25 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில், முதல்வர் விஜய் தனது அமைச்சரவையில் 5 அமைச்சர்கள் பதவிகள் தர ஒப்புக்கொண்டு உள்ளதாகவும், இதற்கு சிவி சண்முகம் தரப்பினர் 8 அமைச்சர்கள் பதவிகள் வேண்டும் என கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+