கேரவன் போன்று தவெக விஜய்யின் பிரச்சார வாகனம் தயார்! என்னென்ன வசதிகள்? ஹைடெக் வண்டி!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டசபை தேர்தல் 2026ஐ முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை முதல் பிரச்சார பயணத்தை தொடங்கவுள்ள நிலையில் அவருக்கான பிரச்சார வாகனம் தயார் நிலையில் உள்ளது. இந்த வாகனத்தில் என்னென்ன வசதிகள் உள்ளன என்பதை பார்க்கலாம்.

திருச்சியில் நாளை எம்ஜிஆர் சிலை அருகே விஜய் பரப்புரை மேற்கொள்கிறார். வாரந்தோறும் சனிக்கிழமை என தொடங்கி டிசம்பர் மாதம் வரை தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஏதுவாக பிரச்சார வாகனம் தயாராகியுள்ளது.

vijay tvk chennai

இந்த வாகனம் தற்போது பனையூரில் உள்ளது. அந்த வாகனம் தவெக கட்சி நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. அதில் கட்சியின் கொடி இடம்பெற்றுள்ளது. மேலும் விஜய்யின் கொள்கை தலைவர்களான வேலுநாச்சியார், காமராஜர், பெரியார், அம்பேத்கர், வேலு நாச்சியார் ஆகியோருடன் விஜய் இருப்பது போல் படங்கள் உள்ளன. அது போல் அண்ணா, எம்ஜிஆருடன் விஜய் நிற்பது போன்று படம் உள்ளது.

மேலும் உங்கள் விஜய் நா வரேன், வாகை சூடும் வரலாறு திரும்புகிறது என்ற வாசகங்களுடன் 1967, 1977, 2026 என்ற ஆண்டுகளும் இடம்பெற்றுள்ளன. மேலும் அந்த வாகனத்தை சுற்றி கேமராக்களும் உள்ளன. விஜய் பேசுவதற்கான மைக்கும் அதில் இடம் பெற்றுள்ளது. கேரவனில் இருக்கும் அனைத்து வசதிகளும் இந்த வாகனத்தில் உள்ளன.

தமிழக வெற்றிக் கழகம் எனும் கட்சியை கடந்த ஆண்டு விஜய் தொடங்கினார். அரசியல்வாதிகள் பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில் இருப்பதுதான் இத்தனை ஆண்டுகளாக இருந்த வரலாறு. ஆனால் விஜய்யோ பொதுமக்களை சந்திக்காமல் அறிக்கை மூலமாகவே மத்திய மாநில அரசுகளை விமர்சித்து வந்தார்.

அப்படியே மாநாடு, பொதுக் கூட்டம் என போனாலும் பவுன்சர்களுடன் போவதால் பொதுமக்களுடன் அவருக்கு ஒரு கனெக்ட்டிவிட்டி இல்லாமல் இருப்பதாகவே திமுக, நாதக, பாஜக, அதிமுக உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்திருந்தன.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு விஜய்யின் பிரச்சார பயணம் குறித்த அட்டவணை வெளியானது. நாளை 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார். அதன் பிறகு வரும் 20ஆம் தேதி நாகை, திருவாரூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

அக்டோபர் 4ஆம் தேதி, அக்டோபர் 5ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், அக்.25 ஆம் தேதி தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விஜய் பரப்புரை நடத்துகிறார்.

அது போல் நவம்பர் 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூரி மாவட்டங்களிலும் நவம்பர் 8 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 15 ஆம் தேதி தென்காசி, விருதுநகர், நவம்பர் 22 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.

நவம்பர் 29-ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 6-ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டிசம்பர் 13-ஆம் தேதி சேலம், நாமக்கல் , கரூர் மாவட்டங்களிலும் டிசம்பர் 20-ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையிலும் சுற்றுப் பயணத்தை முடிக்கிறார் விஜய்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+