ஆளுநர் மாளிகைக்கு வந்த விஜய்யின் Vellfire கார்! பாதிவழியில் ரிங்கான போன்! அடையாறிலேயே யூடர்ன்!
சென்னை: தமிழ்நாடு ஆளுநர் அர்லேகர், விஜய்க்கு நேரம் கொடுக்காத காரணத்தால் ஆளுநர் மாளிகைக்கு வந்து கொண்டிருந்த விஜய்யின் கார் யூடர்ன் போட்டதால் பரபரப்பு எழுந்துள்ளது.
120 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதங்களுடன் விஜய், ஆளுநரை சந்திக்க ஆளுநர் மாளிகைக்கு சென்றிருந்த நிலையில் ஆளுநர் கேரளம் செல்வதாக விஜய்க்கு நேரம் கொடுக்கவில்லை என்பதால் விஜய்யின் வாகனம் பாதி வழியிலேயே யூடர்ன் அடித்து திரும்புகிறது. இதனால் பரபரப்பு எழுந்துள்ளது.

தமிழக அரசியலில் பெரும் திருப்பமாக, கம்யூனிஸ்ட்கள், விசிக, ஐயூஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவு கிடைத்ததால், தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் அறுதிப் பெரும்பான்மையுடன் முதலமைச்சராகப் பதவியேற்பது உறுதியாகியுள்ளது.
120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவு: மெஜாரிட்டியை எட்டிய விஜய்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் 116 இடங்களைக் கைப்பற்றிய தவெகவுக்கு, ஆட்சி அமைக்க மேலும் 2 இடங்கள் தேவைப்பட்டன. ஏற்கனவே காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு அளித்திருந்த நிலையில், இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் தனது கட்சியின் 2 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவை அதிகாரப்பூர்வமாகக் கடிதம் மூலம் அறிவித்தார். இதன் மூலம் பலம் 118 ஆக உயர்ந்த நிலையில், எதிர்பாராத திருப்பமாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐ.யூ.எம்.எல்) கட்சியும் தனது நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியது. தற்போது மொத்தம் 120 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவுடன் தவெக வலுவான நிலையில் உள்ளது.
திருமாவளவன் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
"தமிழகத்தில் நிலையான ஆட்சி அமையவும், ஜனநாயகத்தை உறுதிப்படுத்தவும் தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்கிறோம்" என விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
ஆளுநர் மாளிகையில் ஏமாற்றம்
ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்காகத் தலைவர் விஜய் இன்று ஆளுநர் மாளிகைக்குச் சென்றார்.
இருப்பினும், தமிழக பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேக்கர் இரவு 7.10 மணிக்கு கேரளா செல்லவிருந்ததால், விஜய்க்குச் சந்திப்புக்கான அனுமதி வழங்கப்படவில்லை.
இதனால், அடையாறு வரை வந்து, ஆளுநரைச் சந்திக்க முடியாமல் விஜய் ஏமாற்றத்துடன் பட்டினப்பாக்கம் இல்லத்திற்குத் திரும்பினார். தற்போது நிலவும் சூழலால் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்பதில் காலதாமதம் ஏற்பட்டாலும், பெரும்பான்மை பலம் இருப்பதால் அவரது ஆட்சி அமைவது உறுதியாகியுள்ளது.
-
விஜய் - ராகுல் சந்திப்பு நடக்காமல் போனதற்கான உண்மைக் காரணம் என்ன? அதிர்ச்சி தரும் பின்னணி -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
பெங்களூரை பாருங்க பாஸ்! பரந்தூர் திட்டம் நிறுத்தப்பட்டால் தமிழ்நாடு இழக்கப்போவது என்ன? பெரிய லிஸ்ட்! -
திருச்சி கிழக்கில் வெல்லமண்டி நடராஜன் போட்டி? அமைச்சர் புஸ்ஸி ஆனந்த் கொடுத்த க்ரீன் சிக்னல்! -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தவெகவில் கவுன்சிலர் சீட்டுக்கு ரூ.15 லட்சம்.. கட்சித் தலைமை தெரிந்துதான் வசூல் நடக்கிறதா? -
நள்ளிரவு சர்ப்ரைஸ் ரெய்டு விட்ட அமைச்சர்.. கோவை அரசு மருத்துவமனையில் ட்விஸ்ட்












Click it and Unblock the Notifications