Vijay: சென்னை டூ திருச்சிக்கு பறந்த விஜய்! ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேரால் டிராக் செய்யப்பட்ட விமானம்!
சென்னை: சென்னையிலிருந்து திருச்சிக்கு தவெக தலைவரும் நடிகருமான விஜய் சென்ற VT TSG விமானத்தை அதிகம் டிராக் செய்யப்பட்ட விமானம் என சொல்லப்படுகிறது. இந்த விமானத்தை ஒரே நேரத்தில் சுமார் 8 ஆயிரம் பேர் டிராக் செய்ததாக கூறுகிறார்கள்.
நடிகர் விஜய் தனி விமானம் வைத்துள்ளார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இந்த பிரைவேட் ஜெட்டில் அவர் ஹைதராபாத், திருவனந்தபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்கிறார். அது போல் சென்னை டூ திருச்சி செல்லவும் இந்த விமானத்தை அவர் பயன்படுத்தியுள்ளார்.

விஜய் வைத்திருக்கும் தனி விமானத்தின் பெயர் VT TSG Hawker 800XP ஆகும். இது ஒரு சொகுசு விமானம் என சொல்லிவிட முடியாது. இதில் உள்ள வசதிகள் நடுத்தரத்தில் இருக்கும். இந்த விமானம் ரூ 100 கோடி கொடுத்து வாங்கப்பட்டது என சொல்லப்படுகிறது. விஜய் விமானத்தில் செல்கிறார் என்றால் இந்த விமானம் சென்னை விமான நிலையத்தில் தயார் நிலையில் இருக்கும்.
இந்த விமானத்தில் 8 பேர் முதல் 13 பேர் வரை பயணிக்கலாம். இதில் இரு விமானிகள் இருப்பார்கள், ஒரு பணிப்பெண் இருப்பார். இதில் உடலை வருத்திக் கொள்ளாத அளவிற்கு சொகுசு சீட்டுகள், சேட்டிலைட் போன், மீட்டிங் பேசுவதற்கான அறை என இருக்கும். இந்த விமானத்தால் 4000 கி.மீ. வரை கூட பறக்க முடியும் என்பதால் ஓய்வறையும் உள்ளது.
இந்த விமானத்தை அவர் சிங்கப்பூருக்கு செல்ல பயன்படுத்தியுள்ளார். இந்த விமானம் குறித்து தொடர்ந்து ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. இணையத்தில் தேடினாலும் இதன் உரிமையாளர் பெயர் தெரியவில்லை.
இந்த விமானம் நேற்றைய தினம் சென்னையிலிருந்து திருச்சிக்கு சென்றது. விஜய் நேற்று பிரச்சாரத்தை தொடங்க இந்த விமானத்தை பயன்படுத்தினார். அப்போது அவரது விமானத்தை பலர் டிராக் செய்தனர். இந்த விமானம் நேர்று காலை சென்னையிலிருந்து காலை 8.55 மணிக்கு புறப்பட்டு திருச்சிக்கு 9.34 மணிக்கு வந்தடைந்தது. மொத்தம் 39 நிமிடம் பயண நேரமாக இருந்தது.
இந்த விமானம் திருவனந்தபுரம், மும்பை, டெல்லி உள்ளிட்ட இடங்களுக்கு சென்றுள்ளது. இந்த நிலையில் நேற்று விஜய்யின் விமானத்தை பலர் டிராக் செய்ததால் அதிகம் டிராக் செய்யப்பட்ட விமானம் என்ற பெயரை பெற்றுள்ளது. ஒரே நேரத்தில் 8 ஆயிரம் பேர் இந்த விமானத்தை டிராக் செய்துள்ளனர். திருச்சியில் அவரை விட்ட விமானம் மீண்டும் சென்னைகே வந்துவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.












Click it and Unblock the Notifications