தவெகவில்தான் ரவுடிகள் அதிகம்! வெளியான ஷாக் லிஸ்ட்! என்ன விஜய் இதெல்லாம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில், குற்ற பின்னணியை கொண்டவர்கள் எத்தனை பேர்? எந்த கட்சியை சேர்ந்த வேட்பாளர்கள் அதிக குற்ற பின்னணியை கொண்டிருக்கிறார்கள் என்பது குறித்த புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, திமுகவை விட, தமிழக வெற்றிக் கழகத்தில்தான் அதிக குற்ற பின்னணியை கொண்ட வேட்பாளர்கள் இருப்பது தெரிந் வந்திருக்கிறது.

லிஸ்டு படி பார்த்தால், அதிமுக 35%, பாமக 33%, பாஜக 27%, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 20%, தவெக 19%, திமுக 18%, காங்கிரஸ் 18%, தேமுதிக 10%, சிபிஎம் 0% என கட்சி வாரியாக வேட்பாளர்கள் குற்ற பின்னணியை கொண்டவர்களக இருக்கிறார்கள்.

Vijay

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் தவெகவில், திமுகவை விட அதிக வேட்பாளர்கள் குற்ற பின்னணியை கொண்டிருக்கிறார்கள் என்பதுதான். முதலிடத்தில் இருக்கும் அதிமுக, அதை தொடர்ந்து இருக்கும் பாமக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் நீண்ட கால அரசியல் களத்தில் இருப்பவை. இதன் வேட்பாளர்கள் மீது குற்ற பின்னணி இருப்பது வழக்கமான ஒன்றாகதான் இருக்கிறது.

ஆனால், புதியதாக அரசியலுக்கு வந்த விஜய், தனது கட்சியை தூய்மையான கட்சி என்று மேடைக்கு மேடை பேசி வருகிறார். அப்படிப்பட்ட தூய்மையான கட்சியிலா இத்தனை வேட்பாளர்கள் குற்ற பின்னணியை கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

வழக்கமாக புதியதாக ஒரு கட்சி தொடங்கப்படுகிறது எனில், மற்ற கட்சியில் இரண்டாம் இடத்தில் இருப்பவர்கள், புதிய கட்சியில் சேர்ந்து முதலிடத்திற்கு வருவார்கள். அப்படித்தான் தவெகவிலும் நடந்திருக்கிறது. ஆனால் இப்படி கட்சி மாறியவர்களில் பலரும் குற்ற பின்னணியை கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்கிற விமர்சனங்களும் அதிகரித்திருக்கின்றன.

அதிலும் துறைமுகம் சட்டமன்றத் தொகுதியின் தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சினோரா பி.எஸ்.அசோக், சமீபத்தில் கட்சி பொதுக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்த பெண்ணை, அவரது அனுமதியின்றி வாயை மூடி, பேசவிடாமல் தடுத்து அனுப்பிய சம்பவம் பெரும் விவாதங்களை ஏற்படுத்தியிருந்தது. அதேபோல ஆர்.கே.நகர் தவெக வேட்பாளர் மரிய வில்சனின் தாக்குதல் வீடியோவும் சோஷியல் மீடீயாவில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது.

தன்னையும், தனது கட்சியையும் தூய சக்தி என்று அழைத்துக்கொள்ளும் விஜய், ஏன் இப்படியானவர்களுக்கு போட்டியிட அனுமதி வழங்க வேண்டும்? என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியிருக்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+