என்ன யாரையுமே காணோம்.. கூட்டணி கதவை தட்டாத கட்சிகள்! விஜய் ஆசையில் விழுந்த மண்! வாய்ப்பில்லை ராஜா!
சென்னை: 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு திமுக கூட்டணி கிட்டத்தட்ட உறுதியாக இருக்கும் நிலையில், அதிமுக கூட்டணி ஊசலாடிக் கொண்டிருக்கிறது. அதே நேரத்தில் நான் தான் முதல்வர் வேட்பாளர் என விஜய் பிடிவாதம் பிடிக்கும் நிலையில் அவருக்கான கூட்டணி வாய்ப்புகள் தற்போதைக்கு 10 சதவீதம் கூட இல்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
2026 தேர்தலை முன்னிட்டு தமிழகத்தின் அரசியல் கட்சிகள் வேலையை துவக்கி விட்டன. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆண்டு தேர்தல் தொடர்பாக ஒரு குழுவை ஆரம்பித்ததோடு, தமிழ்நாடு முழுவதும் ஆய்வோடு பொதுமக்களையும் சந்தித்து வருகிறார்.
எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி பழனிச்சாமியும் தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என கோவையில் பிரச்சார சுற்றுப்பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். ஏறக்குறைய தமிழகத்தின் பிரதான மாவட்டங்களில் அவரது சுற்றுப்பயணம் நிறைவு பெற்றுவிட்டது.

தமிழ்நாடு தேர்தல்
மறுபுறம் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் என பலரும் அடுத்தடுத்து பிரச்சார சுற்றுப்பயணங்களை தொடங்கி இருக்கின்றனர். இன்னும் சில நாட்களில் பாஜகவும் பிரச்சாரத்தை மேற்கொள்ள இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி பலம் தான் வெற்றி தோல்வியை தீர்மானிக்கும் முக்கிய சக்தியாக இருக்கும் என்பது நிச்சயம்.
திமுக கூட்டணி
திமுகவை பொருத்தவரை ஆளுங்கட்சி என்ற பலத்தோடு, அசுர கூட்டணி பலமும் இருக்கிறது. அந்த கட்சியின் கூட்டணியில் காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல கட்சிகள் இருக்கிறது. அதிமுக கூட்டணியை பொறுத்தவரை தற்போதைக்கு பாஜக, தமிழ் மாநில காங்கிரஸ் ஆகியவை இருக்கின்றனர். மேலும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம், இந்திய ஜனநாயக கட்சி, புதிய நிதி கட்சி, தமிழ்நாடு மக்கள் முன்னேற்ற கழகம் உள்ளிட்ட கட்சிகளும், தேமுதிக, பாமக ஆகிய கட்சிகளையும் கூட்டணிக்கு அழைத்து வர வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கிறது.
அதிமுக கூட்டணி
பாமக இணைவது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கும் நிலையில், பிரேமலதா விஜயகாந்த் திட்டம் என்ன என்று தெரியவில்லை. இது ஒரு புறம் இருக்க நாம் தமிழர் கட்சி சீமான் தனித்து தான் போட்டி என உறுதியாக சொல்லிவிட்டார். இந்த நிலையில் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் புதிய வரவாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தேர்தலை சந்திக்க இருக்கிறது. ஆனால் நான்தான் முதலமைச்சர் வேட்பாளர், ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூட்டணிக்கு தயார் எனவும் கூறியிருக்கிறார்.
நடிகர் விஜய்
தற்போதைக்கு திமுக கூட்டணியில் இருந்து எந்த கட்சியும் வெளியே வருவதாக தெரியவில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ் உடன் விஜய் மறைமுக பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக சொல்லப்படுகிறது. தமிழக காங்கிரஸ் அல்லாமல் டெல்லி தலைமையுடன் விஜய் தொடர்பில் இருக்கிறார் என்கின்றனர் தமிழக வெற்றி கழகத்தினர். அதே நேரத்தில் அதிமுகவுடனும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்
அதிமுகவிடம் துணை முதல்வர் பதவி கேட்ட நிலையில் தற்போது முதல்வர் வேட்பாளர் விஜய் என்ற பிரச்சாரத்தை தமிழக வெற்றிக் கழகத்தினர் முன்னெடுத்துள்ளதால் அதிமுக கூட்டணியில் இணைவது சாத்தியமில்லை. அதே நேரத்தில் காங்கிரஸ், பாமக, ஓபிஎஸ் உள்ளிட்டோருடன் விஜய் கூட்டணி அமைக்கலாம் என சொல்லப்பட்டாலும் அதற்கான வாய்ப்பு தற்போது பிரகாசமாக இல்லை என்கின்றனர்.
தமிழக வெற்றிக் கழகம்
தமிழகத்தில் நான்குமுனை போட்டி உறுதியாகி இருக்கும் நிலையில் விஜயின் கூட்டணி வாய்ப்பு 10 சதவீதம் கூட இல்லை எனவும், இந்த தேர்தலில் ஒரு சில சிறிய அமைப்புகளுடன் வேண்டுமானால் கூட்டணி அமைத்து வாக்கு சதவீதத்தை நிரூபித்து, வருகின்ற தேர்தல்களில் விஜய் தனது தலைமையில் கூட்டணியை அமைக்க வாய்ப்பாக இந்த தேர்தல் அமையும் எனவும், தமிழகத்தின் பிரதான கட்சிகளும் பிரதான தேசிய கட்சிகளும் விஜய் உடன் கூட்டணி அமைக்க விரும்பினாலும், தற்போது அதற்கான சூழல் அமையவில்லை என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு! -
மீண்டும் டெல்லி செல்லும் விஜய்! அதுவும் 3 நாள் பயணம்.. முக்கிய அஜெண்டா என்ன? ராகுலை சந்திப்பாரா? -
எச்டி ஹூண்டாய் தூத்துக்குடி திட்டம் இன்னும் ‘கன்பார்ம்’ ஆகல! குண்டை போட்ட கொரிய தலைவர் KIM! -
சிங்கப்பெண் அதிரடி படைக்கு ரூ.354 கோடி ஒதுக்கீடு.. 2500 புதிய பணியிடங்கள் உருவாகிறது! முதல்வர் விஜய் -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Vijay vs CBN: அக்கட மாநிலத்தை கொஞ்சம் பாருங்க விஜய் சார்.. ஒரேநேரத்தில் 9 விமான நிலையமாம்.. ஆனா தமிழ்நாட்டில்? -
தாம்தக்க.. தையத்தக்க.. திருச்சி கிழக்கில் ராகவா லாரன்ஸ் போட்டி? விஜய் போட்டு வைத்த கணக்கு! என்ன? -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
பாஜக கோபத்திற்கு ஆளாக நேரிடும்! இந்தியா கூட்டத்திற்கு தவெக போகாதது ஏன்? விஜய் எடுத்த பயங்கர முடிவு? -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
தலைக்கு மேல் தொங்கும் கத்தி.. தவெகவுக்கு தாவிய அதிமுக மாஜி எம்.எல்.ஏ.க்கள்! சுப்ரீம் கோர்ட்டில் கேஸ் -
தப்பித்தது தம்பிரான் புண்ணியம்.. 21 அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை இல்லை! 4 பேருக்கு தான் சிக்கலே!












Click it and Unblock the Notifications