அரசியல் கட்சிக்கு விண்ணப்பித்தது நான் தான்.. எஸ்ஏ சந்திரசேகர் அதிரடி விளக்கம்
சென்னை: அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன் என நடிகர் விஜய்யின் தந்தையும், பிரபல இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் விஜய் விஜய் மக்கள் இயக்கத்தை அரசியல் இயக்கமாக மாற்றி உள்ளதாகவும் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சி ஆரம்பக்க உள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவின,
அத்துடன் அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் கட்சியின் பெயரை, அகில இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நடிகர் விஜய் பதிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவின.

விஜய் பிஆர்ஓ மறுப்பு
இதை விஜய்யின் பிஆர்ஓ ரியாஸ் அகமது இந்த செய்தி பொய் என்று திட்டவட்டமாக மறுத்தார். நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றார். அதேநேரம் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் விஜய்யின் பெயரில் அரசியல் கட்சி இயக்கத்திற்கு விண்ணபிக்கப்பட்டிருப்பது உண்மை என்றே டெல்லி தரப்பு ஊடகவியலாளர்கள் சொன்னார்கள்.

விஜய்யின் தந்தை விளக்கம்
இந்த சூழலில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது என்னுடைய முயற்சி தான்: என நடிகர் விஜய்யின் தந்தையும் பிரபல இயக்குனருமான எஸ்ஏ சந்திரசேகர் விளக்கம் அளித்துள்ளார். விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்க வேண்டும் என்று, அரசியலில் ஈடுபட வேண்டும் என்று ஆரம்பம் முதலே கூறி வந்த அவர் இப்படி ஒரு பதில் அளித்துளளார்.

நான் ஆரம்பித்த கட்சி
இது தொடர்பாக ஊடகங்களுக்கு அவர் அளித்த விளக்கத்தில், அகில இந்திய தளபதி மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சிக்கு நான் தான் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்துள்ளேன். இது என்னுடைய முயற்சி. இது விஜயின் அரசியல் கட்சி அல்ல என்று கூறினார்.

பார்வையை திருப்பும் கட்சிகள்
இதன் மூலம் நடிகர் விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கவில்லை என்றாலும் அவரது தந்தை ஆரம்பித்துள்ளது உறுதியாகி உள்ளது. இதில் விஜய்யின் தலையீடு இல்லை என்று சொன்னாலும், அவரது தந்தை அரசியல் இயக்கத்திற்கு பதிவு செய்திருப்பது அரசியல் கட்சிகளின் கவனத்தை விஜய்யின் பக்கம் திருப்பி உள்ளது என்பது உண்மை. விஜய் ஒருவேளை அரசியலில பிற்காலத்தில் இறங்கினால் ஆச்சர்யப்பட தேவையில்லை என்பதை உணர்த்தும் வகையில் தான் எஸ்ஏசியின் பதில்கள் தெரிகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
ராஜ்யசபா சீட்.. ஓகே சொன்ன விஜய்! 3 மாதங்களில் 2 எம்பிக்கள்! கணக்கு போட்டு தூக்கிய காங்கிரஸ்! -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
தவெக-வின் 'யு-டர்ன்' அரசியல்.. வெளுத்து வாங்கிய அன்புமணி -
அதிகாலை 7 மணிக்குள் கள ஆய்வு பண்ணுங்க.. விஜய் அசத்தல்! மாநகராட்சி ஆணையர்களுக்கு அரசு உத்தரவு -
"இது அதுல்ல?.. ஜனநாயகத்தை சிதைப்பதில் பாஜகவும் தவெகவும் ஒண்ணு” - திமுக சரமாரி அட்டாக்! -
அடித்து ஆடும் விஜய்! லஞ்சம் வாங்குனா காலி! சென்னை மாநகராட்சி நகரமைப்பு அதிகாரிகள் கூண்டோடு இடமாற்றம் -
விஜய் தலைமையில் நாளை முதல் அமைச்சரவை கூட்டம்.. ரெடியாகும் ஃபைல்ஸ்.. எடுக்கப்படும் முக்கிய முடிவு? -
மம்தாவுக்கு புது பிரச்சனை.. இரண்டாக உடையும் திரிணாமுல் காங்கிரஸ்! யார் அந்த கருப்பு ஆடு? -
மிஸ்ஸான செம சான்ஸ்.. தவெக தங்கள் ராஜ்யசபா எம்.பியை டெல்லிக்கு அனுப்ப இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகும்? -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு?











Click it and Unblock the Notifications