மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாங்கன்னா! கொள்ளையடிக்கிறீங்க? ஜனநாயகனில் சாட்டை சுழற்றிய விஜய்!
சென்னை: நடிகர் விஜய்யின் கடைசி படமான ஜனநாயகன் படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இதில் விஜய்யின் தவெக தொடர்பாக ஒரு விஷயம் இருக்கிறது. மேலும் அரசியல் வசனங்கள் நிறைய உள்ளன.
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசி படம் "ஜனநாயகன்". இந்த படம் வரும் 9ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்த நிலையில் இந்த படத்தின் டிரெய்லர் இன்று வெளியாகியுள்ளது.

அந்த டிரெய்லரில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி சின்னமான இரட்டை யானை இடம் பெற்றுள்ளது. மேலும் அரசியல் வசனங்கள் ஏராளமாக உள்ளன. "I am coming, திரும்பி போறதா ஐடியா இல்ல" , "மக்களுக்கு நல்லது செய்ய அரசியலுக்கு வாங்கன்னா, கொல்றதுக்கு வர்றீங்க" என சில அரசியல்வாதிகளை பெல்ட்டில் அடிப்பது போல் காட்சி இடம்பெற்றுள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பின் தொடக்கத்திலேயே மமிதா பைஜு, ஒரு விஷயத்தை சொல்லி பரபரப்பை கிளப்பினார். அதாவது வரும் தேர்தலில் விஜய் கட்சிக்கு கிடைக்கும் ஆதரவை பொருத்து அவர் மீண்டும் நடிப்பது குறித்து முடிவு செய்வார் என தன்னிடம் கூறியதாக பைஜு தெரிவித்திருந்தார்.
இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இதுவரை 4 பாடல்கள் வெளியாகியுள்ளது. இதில் "தளபதி கச்சேரி" எனும் பாடல் பட்டையை கிளப்பி வருகிறது. மேலும் நேற்றைய தினம் "ராவண மகன்டா" என்ற பாடல் வெளியானது. கடந்த வாரம் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டமாக தொடங்கியது. இந்த நிகழ்ச்சி நாளை ஜீ தமிழில் ஒளிபரப்பாகிறது.
இந்த நிலையில் விஜய்யிந் கதாபாத்திரத்தின் பெயர் தளபதி வெற்றிக் கொண்டான். "மக்கள் அவனைக் கொண்டாடிட்டு இருக்காங்க, இப்போ கொன்னா கடவுள் ஆக்கிடுவாங்க" என்ற வசனங்கள் ஹைலைட்டாக உள்ளன. இந்த படத்தின் டிரெய்லர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளிலும் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
இந்த படம் 9-ஆம் தேதி வெளி வரவுள்ள நிலையில் இன்னும் தணிக்கை சான்றிதழ் கிடைக்கவில்லை என சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக த.வெ.க நிர்வாகி சி.டி.ஆர். நிர்மல் குமார் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது; "ஜனநாயகன் படத்தை சென்சார் உறுப்பினர்கள் பல வாரங்களுக்கு முன்பே பார்த்து 'U/A' சான்றிதழைப் பரிந்துரைத்தனர். ஆயினும், தற்போது வரை சென்சார் சான்றிதழ் அதிகாரப்பூர்வமாக வழங்கப்படவில்லை. இதனைத் தடுப்பது யாரோ?" என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
மேலும் தனது பதிவில், "தடைகள் பல வரலாம், தட்டிப் பறிக்க சில கூட்டமும் வரலாம்; அனைத்து தடைகளையும் தகர்த்து வெற்றி வாகை சூடுவோம்" என ஆவேசமாகத் தெரிவித்துள்ளார். இதனால் படம் சொன்ன தேதியில் வெளியாகுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
-
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
விஜய் Vs உதய் Vs அண்ணாமலை? திராவிடக் கடப்பாரைகளை வளைத்த Gen Z! இளைஞர்களால் மாறும் அரசியல் களம்! -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
வாயில் இருந்து நல்லா வருமா?.. என்ன வரும் சிஎம் சார்?.. விஜய்க்கு உதயநிதி கேள்வி! -
விஜய் ஸ்டைல் அரசியல்! கச்சிதமாக காய் நகர்த்தும் அண்ணாமலை.. உருவாகும் புது அரசியல் சக்தி? -
தமிழக சட்டசபை 18 ஆம் தேதி கூடுகிறது.. “தமிழ்த்தாய் வாழ்த்து” பற்றி சஸ்பென்ஸ் வைத்த சபாநாயகர்! -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
முதல்வர் விஜய் குறித்து அம்மா ஷோபா சொன்ன ஒரு வரி... நடிகர் விவேக் குறித்தும் உருக்கம்.. விஷயம் இதுதானாம்! -
கதறி அழுத சத்யராஜ்.. "கொளத்தூரில் ஸ்டாலின் ஜெயிச்சு இருக்கணும்.." பேசவே முடியாமல் கண்ணீர்! -
"விஜய், ஆர்.ஜே. பாலாஜிக்காகவே அந்த பதிவு?"... ‘கருப்பு’ சர்ச்சைக்கு நடுவே சூர்யா கொடுத்த சைலண்ட் சிக்னல்!












Click it and Unblock the Notifications