Jananaayagan vs Parasakthi:பராசக்தியா? ஜனநாயகனா? விஜயை வீழ்த்திய சிவகார்த்திகேயன்! ஆச்சர்யமளித்த Oneindia Poll முடிவுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வரும் பொங்கலை முன்னிட்டு, தமிழ் சினிமாவில் பெரிய போட்டி உருவாகியுள்ளது. நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படமும், சிவகார்த்திகேயன் நடித்த 'பராசக்தி' திரைப்படமும் ஒரே நேரத்தில் வெளியாக உள்ளதால், ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில், வரும் பொங்கலுக்கு எந்த திரைப்படத்தை பார்க்க போகிறீர்கள்? என ஒன்இந்தியா தமிழ் வாக்கெடுப்பு நடத்தியது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் அதில் வாக்களித்திருந்த நிலையில், முடிவுகள் ஆச்சர்யமளிக்கும் வகையில் உள்ளது.

அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வரும் தவெக தலைவர் விஜய், கடைசித் திரைப்படமாக அறிவித்துள்ள படம் தான் 'ஜனநாயகன்'. போலீஸ் அதிகாரியாக விஜய் நடித்திருக்கும் இந்த படத்தை இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கியிருக்கிறார். கேவிஎன் நிறுவனம் தயாரித்த இந்த படம் ஜனவரி 9ஆம் தேதி திரைக்கு வர உள்ளது.

மறுபுறம், சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'பராசக்தி' படத்தை இயக்குநர் சுதா கொங்கரா இயக்கியுள்ளார். 1950-60களின் பின்னணியில் உருவான இந்த படத்தில், மொழி தொடர்பான பிரச்சனைகள் கதை மையமாக இருக்கின்றன. டான் பிக்சர்ஸ் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்த இந்த படம், முதலில் ஜனவரி 14ஆம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.

Vijay Sivakarthikeyan Pongal

ஆனால், தற்போது தயாரிப்பு நிறுவனம் வெளியீட்டு தேதியை மாற்றி, படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளது. இதனால், ஜனவரி 9ஆம் தேதி 'ஜனநாயகன்'... அதற்கு அடுத்த நாளே 'பராசக்தி' ஆகிய இரண்டு படங்களும் திரைக்கு வர உள்ளன. இரண்டு பெரிய ஹீரோக்களின் படங்களும் இடைவெளியின்றி வெளியாக இருப்பதால், திரையரங்குகள் பங்கீடு எப்படி இருக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, விஜயின் கடைசி படமாக இருப்பதால், வசூலில் பெரிய அளவிலான தாக்கம் இருக்கும் என ரசிகர்கள் நம்புகின்றனர். அதேசமயம், சிவகார்த்திகேயனின் 25வது படமாக இருக்கும் 'பராசக்தி'க்கும் பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

திரையுலக வட்டாரங்களின் தகவல்படி, இரண்டு படங்களுக்கும் தனித்தனி ரசிகர் பட்டாளம் இருப்பதால், இரண்டும் நல்ல வசூல் பெறும் வாய்ப்பு அதிகம். மேலும், விடுமுறை காலம் என்பதால், குடும்பத்துடன் திரையரங்குகளுக்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், "பொங்கலுக்கு நீங்கள் எந்த படத்தை பார்க்கப் போகிறீர்கள்?" என்ற கேள்வியுடன், ஒன்இந்தியா தமிழ் வாக்கெடுப்பு நடத்தியது. இந்த வாக்கெடுப்பில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். உண்மையில் அதில் பந்த முடிவுகள் ஆச்சர்யம் அளிக்கும் வகையில் இருந்தது. இரு படங்களுக்கும் வாக்குகள் நல்ல அளவில் கிடைத்துள்ளன. ஆனால், விஜயை முந்தியிருக்கிறார் சிவகார்த்திகேயேன்.

முன்னரே சொன்னது போல கிட்டத்தட்ட 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வாக்கெடுப்பில் பங்கேற்றிருந்தனர். அதில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்க்கப் போகிறோம் என 24 சதவீதம் பேர் கூறியுள்ளனர். இது கிட்டத்தட்ட 2400 என்ற எண்ணிக்கை குறிப்பிடத்தக்கது. ஆச்சரியமும் அதிர்ச்சியும் அளிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி திரைப்படத்தை பார்க்க போகிறோம் என 34 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்திருக்கின்றனர். மேலும் இரண்டு படத்தையுமே பார்க்க மாட்டோம் என 35 சதவீதம் பேரும், இரண்டு படத்தையுமே பார்ப்போம் என 6 சதவீதம் பேரும் கூறி இருக்கின்றனர்.

வாக்கெடுப்பு எண்ணிக்கை அடிப்படையில் இரண்டு படங்களையும் பார்க்க மாட்டோம் என சொல்பவர்கள் 35 சதவீத பேர் இருந்தாலும், பராசக்தி படத்தை பார்ப்போம் என 34 சதவீதம் பேர் கூறி இருக்கும் நிலையில், ஜனநாயகன் படம் 24 சதவீதம் பேரின் ஆதரவை பெற்று இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 'கேரியரின் உச்சத்தில்' இருந்தேன் என சொல்லும் விஜய், சிவகார்த்திகேயனின் பராசக்தியை சமாளிப்பாரா? என்பது பொங்கல் பண்டிகையின் போது தெரிந்து விடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+