விஜய்யை எதிர்த்து போட்டி போட்டவர்களின் பரிதாப நிலை.. அதே டெய்லர், அதே வாடகை!
தமிழ்நாட்டில் சுமார் 60 ஆண்டு கால திராவிட கட்சிகளின் ஆதிக்கத்தையும் , ஆட்சியையும் தகர்த்து நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் (தவெக) ஆட்சி அமைக்க தயாராகி வருகிறது. 108 இடங்களில் வெற்றிப்பெற்ற தவெக 118 பெரும்பான்மை உடன் ஆட்சியை அமைக்க கூட்டணிக்கு தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்த நிலையில் சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவரும், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் இரு தொகுதிகளின் வேட்பாளருமான விஜய் மிகப்பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளார். இந்த நிலையில் விஜய்யை எதிர்த்து போட்டிப்போட்டவர்களின் நிலை என்ன..?

பெரம்பூர் தொகுதி
பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி வாக்கு எண்ணிக்கை 23 சுற்றுகளின் முடிவில், தமிழக வெற்றி கழகத்தின் விஜய் 1,20,365 வாக்குகளைப் பெற்று 58.89 சதவீத வாக்கு சதவீதத்துடன் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார். EVM இயந்திரத்தில் 1,19,785 வாகுகளும், தபால் வாயிலாக 580 வாக்குகளும் பெற்றுள்ளார்.
விஜய்-க்கு அடுத்தபடியாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஆர்.டி.சேகர் 66,650 வாக்குகளைப் பெற்று 32.61 சதவீத வாக்குகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தார். இதனால் விஜய்க்கும் அவருக்கும் இடையே 53,715 வாக்குகள் பெரிய வித்தியாசம் ஏற்பட்டுள்ளது.
இவரை தொடர்ந்து பட்டாளி மக்கள் கட்சியின் வேட்பாளர் எம். திலகபாமா 8,561 வாக்குகளையும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் எஸ்.வெற்றித்தமிழன் 5,114 வாக்குகளையும் பெற்றுள்ளனர். NOTA-விற்கு 601 வாக்குகள் செலுத்தப்பட்டு உள்ளது. 5 இடத்தில் NOTA இருக்கும் காரணத்தால் பெரம்பூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்ட 47 பேரில் 42 பேர் NOTA-வுக்கு பின் உள்ளனர்.
திருச்சிராப்பள்ளி (கிழக்கு) தொகுதி
திருச்சிராப்பள்ளி (கிழக்கு) சட்டமன்றத் தொகுதியில் 28 சுற்று வாக்கு எண்ணிக்கைக்கு பின்பு ஜோசப் விஜய் 91,381 வாக்குகளைப் பெற்று 50.07 சதவீத வாக்கு சதவீதத்துடன் வெற்றி பெற்றுள்ளார். இங்கு திமுக வேட்பாளர் எஸ்.இனிகோ இருதயராஜ் 63,965 வாக்குகளுடன் 35.05 சதவீத வாக்குகளைப் பெற்று இரண்டாவது இடத்தைப் பிடித்தார்.
அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் ஜி.ராஜசேகரன் 19,715 வாக்குகளுடன் 10.8 சதவீத வாக்குகளைப் பெற்றார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர்.வி.கிருஷ்ணசாமி 4,790 வாக்குகளைப் பெற்றுள்ளார். நோட்டா-வுக்கு 514 வாக்குகள் வந்துள்ளது.
திருச்சி கிழக்கில் சுமார் 20 பேர் போட்டிப்போட நிலையில் 16 பேர் நோட்டாவுக்கு பின் உள்ளனர்.
-
பயமா இருக்கு அண்ணே.. அப்பவே அப்படி! விஜய் குறித்து மீண்டும் சர்ச்சை பேச்சு... பிக் பாஸ் ஜூலியின் புதிய வீடியோ -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
திமுகவை குறை கூறுவதால்.. சட்டம் ஒழுங்கு பிரச்சனையை மக்கள் மறக்க மாட்டார்கள்.. கனிமொழி கொடுத்த பதில்! -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியா? திருமாவளவன் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு! -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்!












Click it and Unblock the Notifications