விஜய் பதவியேற்புக்கு.. ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு! சைலண்ட் மோடில் கழக தலைவர்கள்
சென்னை: நீண்ட இழுபறிக்கு பின்னர் தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். இன்று காலை 10 மணிக்கு அவருக்கு ஆளுநர் பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும் இருவரும் பங்கேற்பது குறித்து உறுதியான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.
தமிழ்நாட்டில் 1967க்கு பிறகு முதல் முறையாக திராவிட கட்சி இல்லாத ஆட்சி அமைந்திருக்கிறது. கடந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் மிகப்பெரிய மேஜிக்கை நடத்தி காட்டியிருக்கிறார்.

விஜய்யின் மேஜிக்
தனியாக போட்டியிட்ட அவரது தமிழக வெற்றிக் கழகம், 108 இடங்களில் வென்றிருக்கிறது. விஜய் போட்டியிட்டிருந்த திருச்சி கிழக்கு மற்றும் பெரம்பூர் என இரண்டு தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தார்.
இருப்பினும் ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை என்பதால், திமுக கூட்டணியில் இருந்த இடதுசாரிகள் மற்றும் விசிகவுக்கு அழைப்பு விடுத்திருந்தார். அழைப்பின் பேரில், சிபிஐ (2), சிபிஎம் (2), விசிக (2) என ஆதரவளித்திருந்தன. இது தவிர ஐயுஎம்எல் கட்சியும் (2) ஆதரவு தெரிவித்திருந்தது. இதனையடுத்து 120 எம்எல்ஏக்கள் ஆதரவை ஆளுநரிடம் விஜய் நேற்றிரவு சமர்ப்பிக்க, விஜய்யை முதலமைச்சராக நியமனம் செய்து ஆணையை வெளியிட்டார் ஆளுநர் அர்லேக்கர்.
பதவியேற்பு விழா
இதனையடுத்து இன்று காலை 10 மணியளவில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் விஜய்யின் பதவியேற்பு விழா நடக்கிறது. இந்த விழாவில் பங்கேற்க மு.க.ஸ்டாலின் மற்றும் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அவர்கள் பங்கேற்பது குறித்த அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. எனவே அவர்கள் பங்கேற்கமாட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
திராவிட சாம்ராஜ்ஜியம்
கிட்டதட்ட 60 ஆண்டுகால திராவிட கட்சிகளின் சாம்ராஜ்ஜியத்தை விஜய் ஒற்றை ஆளாய் உடைத்து காட்டியிருக்கிறார். எனவே மொத்த சிஸ்டமும் தற்போது அப்படியே ஸ்டாப் ஆகியிருக்கிறது.
ஒப்பந்ததாரர்கள், அரசு ஊழியர்கள், வங்கிகள் அனைவரும் அடுத்து என்ன நடக்கும் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். மாற்றம் குறித்து பேசிய விஜய், உண்மையில் மாற்றத்தை கொண்டுவருவரா? ஊழலை ஒழிப்பாரா? அல்லது திராவிட கட்சி ஆட்சி போல இதுவும் இருக்குமா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே விஜய் பதவியேற்பு மீது எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
முதல் கையெழுத்து
அதேபோல மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது, ஆவின் பால் விலை குறைப்பு, மகளிர் இலவச பேருந்து பயணம் என 5 திட்டங்களுக்காக முதல் கையெழுத்து போட்டிருந்தார். அதேபோல விஜய்யின் முதல் கையெழுத்து எந்த உத்தரவுக்கானது? என்பது குறித்து எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
-
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
விஜய் விதித்த 6 மாத கெடு.. உடனே வேலையை முடிங்க.. அதிகாரிகளுக்கு பறந்த அந்த உத்தரவு.. பின்னணி -
"எந்தவொரு தியாகமும் செய்யாத கூட்டம் ஆட்சிக்கு வந்துவிட்டது.." விஜய் அரசை நேரடியாக விளாசிய ஆ ராசா -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
ஒன்று சேர்ந்த எடப்பாடி - ஸ்டாலின் குடும்பம்.. அதிமுக உடைந்ததே அதனால் தான்! போட்டுடைத்த சிடிஆர்! -
இந்த லட்சணத்துல உங்களுக்கு பொ.செ பதவி வேற வேணுமா? தேர்தல் தோல்விக்குப் பின் ஸ்டாலின் ஆவேசம் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி












Click it and Unblock the Notifications