#1YearOfMasterSelfie ட்விட்டரில் டிரென்டாகும் விஜயின் செல்பி.. ஓராண்டாகியும் மாஸ் குறையாத "மாஸ்டர்"

Subscribe to Oneindia Tamil

சென்னை: மாஸ்டர் படப்பிடிப்பின்போது ரசிகர்களுடன் விஜய் எடுத்த செல்பி இன்றுடன் ஓராண்டு ஆகிறதை அடுத்து அந்த புகைப்படம் மீண்டும் ட்விட்டரில் டிரென்டாகி வருகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான படம் மாஸ்டர். இதன் படப்பிடிப்பு டெல்லி, சென்னை, நெய்வேலி உள்ளிட்ட பல பகுதிகளில் நடைபெற்று வந்தது. இதை கண்டித்து பாஜகவினர் போராட்டம் நடத்தினர். எனினும் தொடர்ந்து படப்பிடிப்பு நடந்தது.

இந்த படம் பொங்கலுக்கு வெளியாகி தியேட்டர்களில் இன்னமும் ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித் துறையினர் ரெய்டு நடத்தினர்.

பைனான்சியர்

பைனான்சியர்

விஜய்யின் வீடு, பைனான்சியர் அன்பு செல்வனின் வீடு உள்ளிட்ட இடங்களில் ரெய்டு நடந்தது. இதையடுத்து விஜயிடம் விசாரணை நடத்த வருமான வரித் துறை அதிகாரிகள் முற்பட்டனர். பாஜகவினர் போராட்டம், ஐடி ரெய்டால் பரபரப்பு அடைந்த நிலையில் விஜய்யை பார்க்க ரசிகர்கள் நெய்வேலிக்கு படையெடுத்தனர். அப்போது விஜய் படப்பிடிப்பு தளத்தில் இருந்த பேருந்தின் மீது ஏறி ரசிகர்களுடன் செல்பி எடுத்துக் கொண்டார். இதை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

ரீட்வீட்

ரீட்வீட்

இது வைரலானது. 2020-ஆம் ஆண்டு அதிகமாக ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையையும் இந்த நெய்வேலி செல்பி பெற்றது. இந்த நிலையில் கடந்த ஆண்டு இதே தினத்தில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதை அடுத்து தற்போது ட்விட்டரில் மீண்டும் டிரென்டாகி வருகிறது.

அக்கறை

அக்கறை

#1YearOfMasterSelfie என்ற ஹேஷ்டேக்கில் இந்த புகைப்படத்தை டிரென்டாக்கி வருகிறார்கள். ஓராண்டான நிலையிலும் மாஸ் காட்டும் மாஸ்டர் என இந்த புகைப்படம் அழைக்கப்படுகிறது. இதற்கு காரணமாக ரசிகர்கள் மீதான அன்பு, அக்கறையே காரணம் என்கிறார்கள்.

ஸ்டென்ட் கலைஞர்கள்

ஸ்டென்ட் கலைஞர்கள்

படப்பிடிப்பு தளத்திலும் சண்டை காட்சி கலைஞர்கள் மீது மிகவும் அக்கறை காட்டுவார் விஜய். மேலும் நேற்று முன் தினம் விஜயின் பனையூர் அலுவலகத்தில் அவரது வருகையை அறிந்த ரசிகர்கள் அங்கு கூடினர். இதையடுத்து அவர் வந்ததும் காரை ரசிகர்கள் சூழ்ந்தனர். இவரை பார்க்கும் ஆர்வ மிகுதியால் ரசிகர்கள் இருந்த போதிலும் அவர்களுடைய பாதுகாப்பிலேயே விஜய் குறியாக இருந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+