WFH டூ வீக் என்ட் பாலிடிக்ஸ்! தவெக விஜய்யின் சூறாவளி சுற்றுப்பயண விவரம் வெளியானது!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்யின் சுற்றுப்பயண விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. இதனால் தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அதே வேளையில் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மனு கொடுத்துள்ளார்.
விஜய் வரும் 13 ஆம் தேதி முதல் கட்ட அரசியல் சுற்றுப்பயணத்தை திருச்சியில் இருந்து தொடங்குகிறார். இதற்கான அனுமதி கோரி திருச்சி மாநகர போலீஸ் ஆணையரிடம் புஸ்ஸி ஆனந்த் விண்ணப்பித்திருந்தார். ஆனால் இந்த சுற்றுப்பயணத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயணத்திற்கு அனுமதி கோரி டிஜிபி அலுவலகத்தில் புஸ்ஸி ஆனந்த் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் விஜய்யின் சுற்றுப்பயண விவரம் வெளியாகியுள்ளது.
இவருடைய சுற்றுப்பயணம் வரும் 13 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 20ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மொத்த சுற்றுப்பயணமும் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறுகிறது.
வரும் 13 ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் விஜய் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார்.
அதன் பிறகு வரும் 20ஆம் தேதி நாகை, திருவாரூர் , மயிலாடுதுறை மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
அக்டோபர் 4ஆம் தேதி, அக்டோபர் 5ஆம் தேதியும் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு மாவட்டங்களிலும் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அது போல் அக்டோபர் 11 ஆம் தேதி குமரி, நெல்லை, தூத்துக்குடி, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களிலும், அக்.25 ஆம் தேதி தென் சென்னை, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் விஜய் பரப்புரை நடத்துகிறார்.
அது போல் நவம்பர் 1 ஆம் தேதி கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர் மாவட்டங்களிலும் நவம்பர் 8 ஆம் தேதி திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் நவம்பர் 15 ஆம் தேதி தென்காசி, விருதுநகர், நவம்பர் 22 ஆம் தேதி கடலூர் மாவட்டத்திலும் சுற்றுப்பயணம் நடைபெறுகிறது.
நவம்பர் 29ஆம் தேதி சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் டிசம்பர் 6ஆம் தேதி தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களிலும் டிசம்பர் 13 ஆம் தேதி சேலம், நாமக்கல் , கரூர் மாவட்டங்களிலும் டிசம்பர் 20ஆம் தேதி திண்டுக்கல், தேனி, மதுரையிலும் சுற்றுப்பயணத்தை முடிக்கிறார் விஜய்.
நடிகர் விஜய் அரசியலுக்கு வந்ததும் அவர் பொதுமக்களை சந்திக்காமல் வெறும் அறிக்கைகளை மட்டுமே வெளியிட்டு வந்தார். இதனால் அவரை எதிர்க்கட்சிகள் வொர்க் பிரம் ஹோம் பாலிடிக்ஸை விட்டு வெளியே வர வேண்டும். பொதுமக்களை சந்திக்க வேண்டும் என்றனர்.
வெள்ளத்தால் பாதித்த மக்களையும், தூய்மை பணியாளர்கள் போராட்டக் குழுவினரையும் தன் பனையூர் கட்சி அலுவலகத்திற்கு வரவழைத்தார் விஜய். இதுவும் விமர்சனத்திற்குள்ளானது. இந்த நிலையில் விஜய்யின் சுற்றுப்பயண அட்டவணையில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அவர் பிரச்சாரம் செய்வது போன்ற அமைக்கப்பட்டுள்ளது. இதை திமுக உள்ளிட்ட கட்சிகள் வீக் என்ட் பாலிடிக்ஸ் என்கிறார்கள்.
-
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஒரு வார்த்தையில் நடிகையின் பெயரை மாற்றிய விஜய்.. பல வருடங்களுக்கு பிறகு பிரபலம் பகிர்ந்த சுவாரஸ்யம்! -
விஜய் ‘இன்னும் மாறவில்லை’.. சீறும் திமுக, அதிமுக! திருச்சியில் வெடித்த அடுத்தகட்ட அரசியல் போர்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
மதுரை மக்கள் அதிர்ச்சி.. திடீரென உயர்ந்த தனியார் பஸ் கட்டணம்! டீசல் விலை உயர்வு வேலையை காட்டியது -
விஜய் அரசுக்கு டெல்லி வைக்கும் செக்? ரகசிய ஃபைல்களை திரட்டும் பாஜக.. அமித் ஷா கையில் குடுமி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
இதாம்லே ட்விஸ்டு.. துண்டை போட்ட உடன்பிறப்புகள்! நழுவிய தவெக நிர்வாகிகள்! விஜய் காதுக்கு போன மேட்டர்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
திருச்சியில் விஜய்யை சிரித்தபடி ஓடிச்சென்று வரவேற்ற மதிமுக துரை வைகோ! -
குறை பிரசவத்தில் தவெக வெற்றி.. ஆட்சி நீடிக்காது.. திமுக சிவசங்கர் கணிப்பு












Click it and Unblock the Notifications