'விசில்'.. டெல்லியிலிருந்து கிரீன் சிக்னல்! தவெகவுக்கு சின்னம் கிடைத்தது எப்படி? விஜய் எடுத்த மூவ்!
சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் முழு பலத்துடன் களமிறங்க திட்டமிட்டிருந்தது. இப்படி இருக்கையில்தான் தற்போது தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த சின்னத்தை பெற தவெக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரசியல் கட்சியை தொடங்குவதை விட, அதன் சின்னத்தை மக்களிடத்தில் கொண்டு சேர்ப்பதுதான் சவாலான பணி. இந்த பணியை எளிதாக்க, சிம்பிளான சின்னத்தை தேர்ந்தெடுக்க வேண்டும். அந்த வகையில் விசில் சின்னம், பெரும்பாலான மக்கள் மத்தியில் எளிதில் சென்று சேரும் என சொல்லப்படுகிறது.

சின்னம் பெறுவது லேசுபட்ட விஷயமா?
சின்னம் பெறுவது சாதாரண விஷயம் கிடையாது. அதுவும் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகள் பொது சின்னத்தை பெறுவது லேசுபட்ட விஷயம் கிடையாது. இதற்கு தேர்தல் ஆணையம் பல கடுமையான விதிமுறைகளை வகுத்திருக்கிறது. இந்தியாவை பொறுத்தவரை அரசியல் கட்சிகள் இரண்டு வகைகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது.
1. அங்கீகரிக்கப்பட்ட கட்சி
2. பதிவு செய்யப்பட்ட அங்கீகரிக்கப்படாத கட்சி
அங்கீகரிக்கப்படாத கட்சி தவெக
இதில் தவெக இரண்டாவது வகை. அதாவது அந்த கட்சி பதிவு செய்திருக்கிறது. ஆனால், இன்னும் அங்கீகாரம் பெறவில்லை. அப்படிப்பட்ட கட்சிக்கு நிரந்தர சின்னம் என்பது ஈஸியாக கிடைக்காது. கடந்த 2005ல் கட்சியை தொடங்கிய தேமுதிக, 2006 சட்டமன்ற தேர்தலில் போட்டியிட முரசு சின்னத்தை பொது சின்னமாக கேட்டிருந்தது. ஆனால், தேர்தல் ஆணையம் முரசை பொது சின்னமாக கொடுக்கவில்லை. புதுசா தொடங்கிய கட்சிக்கெல்லாம் பொது சின்னம் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது.
தேமுதிக போராட்டம்
பொது சின்னம் எனில், மாநிலம் முழுவதும் இந்த கட்சி வேட்பாளர்கள் ஒரே சின்னத்தில் போட்டியிட முடியும் என்பதுதான். விஜயகாந்துக்கு அப்படியான பொதுச்சின்னம் ஒதுக்கப்படவில்லை. எனவே அவர் நீதிமன்றத்தை நாடி, பின்னர் பொதுச்சின்னம் பெற்றார்.
விஜய்க்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?
அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சி, பொது சின்னத்தை பெற வேண்டும் எனில், சின்னம் கேட்டு விண்ணப்பிப்பதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்னர் வரை தணிக்கை செய்யப்பட்ட கணக்கு வழக்கை சமர்ப்பிக்க வேண்டும். தேர்தலில் போட்டியிட்டு இருந்தால், அதன் செலவுகளை காண்பிக்க வேண்டும். கட்சியின் தற்போதைய நிர்வாகிகள் தொடர்பான அத்தனை விவரங்களையும் முழுமையாக ஆணையத்திடம் கொடுக்க வேண்டும்.
தவெக எத்தனை இடங்களில் போட்டி?
இது தவிர வேறு சில நிபந்தனைகளும் இருக்கின்றன. அதாவது புதியதாக தொடங்கப்பட்ட கட்சி, தேர்தலில் மொத்தமுள்ள தொகுதிகளில் குறைந்தது 5% இடங்களில் போட்டியிட வேண்டும். அதாவது, தமிழகத்தில் 234 தொகுதிகள் எனில், தவெக குறைந்தது 12 இடங்களில் போட்டியிடுவோம் என்று உறுதியளிக்க வேண்டும்.
விஜய்க்கு சிக்கல்
மட்டுமல்லாது தேர்தல் ஆணையம் வைத்திருக்கும் சின்னங்களில், ஏதேனும் ஒன்றைதான் கேட்டு வாங்க முடியும். விஜய்க்கு கிரிக்கெட் பிடிக்கும், அதனால் கிரிக்கெட் பேட் சின்னம் கொடுங்கள் என்றெல்லாம் கேட்க முடியாது. லிஸ்டில் இருக்கும் சின்னங்களை, வேறு யாராவது கேட்டால் போட்டி ஏற்படும். அப்போது குலுக்கல் முறையில்தான் சின்னம் ஒதுக்கப்படும்.
ஜெஸ்ட் மிஸ்ஸில் தப்பிய விஜய்
இது தவிர தேர்தல் அறிவிப்பதற்கு முன்னரே, சின்னம் கோரி விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தில் சிறு பிழைகள் இருந்தாலோ அல்லது, போதுமான தகவல்கள் இல்லை என்றாலோ, விண்ணப்பம் நிராகரிக்கப்படும். சின்னம் ஒதுக்கப்படாது.
இதையெல்லாம் தவெக சரியாக செய்ததால், தேர்தல் சின்னங்கள் (ஒதுக்கீடு மற்றும் பங்கீடு) ஆணை, 1968-இன் பத்தி 10B-இன் கீழ் பொதுச் சின்னம் கோரி விண்ணப்பித்த தவெகவின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு, தற்போது விசில் சின்னம் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
-
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
கொங்கு மண்டல பிரச்சாரத்தின் போது செங்கோட்டையன் வீட்டில் தங்கும் விஜய்.. புலம்பும் ஆதவ் அர்ஜுனா! -
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
'ஜெ' வின் பூர்வீக பூமி ஸ்ரீரங்கம்..! 'ஜெயா'வுக்கு மறுவாழ்வு அளித்த திருச்சி- விஜய் கணக்குப் புரிகிறதா? -
Election history: இந்திரா டூ மோடி.! ‘இரட்டைத் தொகுதிகள்’: யார்? எங்கே? நின்றார்கள்.. வென்றார்கள்? -
திருச்சியில் விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே சரிந்த பெண்கள்! பரப்புரை கூட்டத்தில் நடத்த சம்பவம்! -
TVK Vijay in Trichy LIVE: மகளிருக்கு மாதம் ரூ.2,500.. சொன்ன மாதிரி கொடுப்போம்.. விஜய் பேச்சு -
நல்ல நேரத்திற்காக அரை மணி நேரம் காத்திருந்த விஜய்.. திருச்சி கிழக்கில் வேட்பு மனு தாக்கல் செய்தார் -
‘ஜனநாயகன்’ டிக்கெட்டை அதிக விலைக்கு விற்று மோசடி செய்தவர் தவெக வேட்பாளரா? சொந்த கட்சியினரே எதிர்ப்பு -
ஆதவ் அர்ஜுனா கார் மோதி போலீஸ்காரர் கால் முறிந்தது.. திருச்சி விஜய் பிரச்சாரத்தில் அதிர்ச்சி -
Seeman: என்னாது 150 கட்சிகளுடன் விஜய் கூட்டணியா? சீமான் சொன்ன அந்த வார்த்தை!












Click it and Unblock the Notifications