பலே ஆளுங்க சிஎம் விஜய்.. கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது! தவெக கையில் 3 ப்ளான்! என்னென்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: காங்கிரஸ் மூத்த தலைவரும் தர்மபுரி எம்எல்ஏ சௌமியா அன்புமணியின் தந்தையுமான கிருஷ்ணசாமிக்கு தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டிருக்கிறது. இந்த விருதுக்கு பின்னால் மூன்று கணக்குகளை விஜய் போட்டு வைத்திருக்கிறார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

தமிழ்நாட்டிற்கும், தமிழ் இனத்துக்கும், தமிழ் மொழிக்கும், அதன் வளர்ச்சிக்கும் அளப்பரிய பங்காற்றும் தமிழ் பெருமக்களை கவுரவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சார்பில் தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

ஆண்டுதோறும் சுதந்திர தினத்தன்று இந்த விருது வழங்கப்படுகிறது. 2021 ஆம் ஆண்டு முதல் இந்த விருது ஒவ்வொரு சுதந்திர தினத்தன்றும் வழங்கப்படுகிறது. பாராட்டு சான்றிதழ், 10 லட்சம் ரொக்க பரிசு ஆகியவை இந்த விருதோடு வழங்கப்படுகிறது.

Vijay

தகைசால் தமிழர் விருது

இதற்கு முன்பு தோழர் சங்கரய்யா, தோழர் ஆர் நல்லக்கண்ணு, ஆசிரியர் கி வீரமணி, குமரி அனந்தன், கேஎம் காதர் மொகிதீன் ஆகியோருக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ள நிலையில், 6வது ஆண்டாக காங்கிரஸ் மூத்த தலைவர் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டு இருக்கிறது. நீண்ட நெடிய காங்கிரஸ் பாரம்பரியம் கொண்ட குடும்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணசாமி மட்டுமல்லாது அவரது முன்னோர்கள் நான்கு தலைமுறைகளாக காங்கிரஸ் கட்சியில் பயணிப்பது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணசாமி

2006 - 2008ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பணியாற்றிய இவர், 1991 மக்களவைத் தேர்தலில் வந்தவாசி தொகுதி எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2009இல் ஆரணி மக்களவை தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது தாய் வழி தாத்தா சுதந்திரப் போராட்ட வீரர் விநாயகம் திருத்தணி எம்எல்ஏ என்பதும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவராக பணியாற்றி குறிப்பிடத்தக்கது.

அன்புமணி ராமதாஸ்

எம்பிபிஎஸ் படித்த மருத்துவரான கிருஷ்ணசாமி செய்யாறு தொகுதி எம்எல்ஏவாகவும் பணியாற்றி இருக்கிறார். தொடர்ந்து 2019 முதல் 2024 வரை ஆரணி மக்களவைத் தொகுதியில் எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவியும், தர்மபுரி எம்எல்ஏமான சௌமியா அன்புமணியின் தந்தை தான் கிருஷ்ணசாமி என்பது குறிப்பிடத்தக்கது.

3 கணக்குகள்

இந்த நிலையில் கிருஷ்ணசாமிக்கு தகைசால் தமிழர் விருது வழங்கப்பட்டதில் மூன்று கணக்குகளை விஜய் போட்டு இருக்கிறார் என்கின்றனர் தமிழக வெற்றிக்கழகத்தினர். அதில் இரண்டு கூட்டணி கணக்கு. ஒன்று சாதி ஓட்டு கணக்கு. கடந்த சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் தனித்துப் போட்டியிட்டது. வட மாவட்டங்களிலும் குறிப்பாக சென்னையில் கட்சி பெரு வெற்றி பெற்றது.

வன்னியர் வாக்குகள்

தென்மாவட்டங்களில் ஓரளவு வெற்றி கட்டியது. ஆனால் வன்னியர்கள் அதிகமாக வாழும் மேற்கு, வடமேற்கு மாவட்டங்களான, அரியலூர், விழுப்புரம், கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய தொகுதிகளில் வன்னியர் வாக்குகள் கிடைக்கவில்லை. பாமக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் அந்த கூட்டணிக்கு பெறுவாரியான வாக்குகள் சென்றுவிட்டது. இதை அடுத்து வன்னியர் வாக்குகளை குறித்து கிருஷ்ணசாமிக்கு இந்த விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

காங்கிரஸ் கட்சி

மற்றொன்று காங்கிரஸ் கட்சி உடனான கூட்டணி கணக்கு. கடந்த பல ஆண்டுகளாக திமுகவுடன் கூட்டணி அமைத்திருந்த காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு பிறகு தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைத்தது. தேர்தல் முடிவு வந்த அடுத்த நாளே தமிழக வெற்றிக் கழகத்திற்கு தானாக முன்வந்து ஆதரவு கொடுத்தது. இதற்கு பலனாக அமைச்சரவையிலும் காங்கிரஸ் கட்சி பல ஆண்டுகளுக்குப் பிறகு இடம் பெற்றுள்ளது. அந்த வகையில் காங்கிரஸ் தவெக இடையேயான கூட்டணியை உறுதி செய்வதற்காக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கிருஷ்ணசாமிக்கு விருது வழங்கப்பட்டிருக்கலாம் என்கின்றனர்.

2026 தமிழக சட்டசபை தேர்தல்

மற்றொன்று பாமக உடனான கூட்டணி கணக்கு. 2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதும் முற்போக்கு, சாதி மறுப்பு, இடதுசாரி கொள்கை கொண்ட கட்சிகளை நாடி ஆட்சியை அமைத்திருக்கிறார் விஜய். அதே நேரத்தில் இடதுசாரிகளும் விடுதலை சிறுத்தைகளும் அவ்வப்போது அரசுக்கு எதிராக பேசி வருகின்றன. குறிப்பாக நான்கு எம்.எல்.ஏக்களை வைத்திருக்கும் இடதுசாரிகள் தொடர்ந்து அரசுக்கு குடைச்சல் கொடுத்து வரும் நிலை எப்போது வேண்டுமானாலும் ஆதரவை வாபஸ் பெற்றுக் கொள்ளலாம்.

பாமக கூட்டணி

அதனை ஈடுகட்ட 4 எம்எல்ஏக்களை வைத்திருக்கும் பாமக உடன் இணக்கமாகவே சென்று வருகிறார் விஜய். பாமக தலைவரும் எம்பியுமான அன்புமணி ராமதாஸ், எம்எல்ஏ சௌமியா அன்புமணி ஆகியோர் தொடர்ந்து தமிழக வெற்றிக்கழக அரசை பாராட்டி வருகின்றனர். அதனால் எதற்கும் முன்னேற்பாடாக இருக்கட்டும் என சௌமியா அன்புமணியின் தந்தைக்கு விருதை வழங்கி மகிழ்ச்சிப்படுத்தி இருக்கிறார் விஜய் என்றும் சொல்லப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+