"சீமான், விஜய் 0".. இந்த முறை தவெகவுக்கு நோ சான்ஸ்.. புட்டுப் புட்டு வைக்கும் மூத்த பத்திரிகையாளர்!
சென்னை: திமுகவை பொறுத்தவரை 2026ல் இதே கூட்டணி தொடரும் நிலை உள்ளது. மற்றொரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளது. தவெக 2026 சட்டசபை தேர்தலை குறி வைத்து களமிறங்கிய நிலையில் தற்போது கூட்டணி சூழல் கேள்விக்குறி ஆகியுள்ளது. தவெகவுக்கு இந்த முறை சான்ஸ் இல்லை எனக் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் மணி.
ஒருபக்கம் திமுக கூட்டணி, இன்னொரு பக்கம் அதிமுக - பாஜக கூட்டணி என வலுவாக களமிறங்க உள்ள சூழலில் இந்த முறையும் தனித்து நிற்போம் என அறிவித்திருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். சீமானின் தேர்தல் வாய்ப்பு குறித்து பத்திரிகையாளர் மணி நமது ஒன் இந்தியா தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

சீமான் தோல்வியை தவிர்க்க முடியாது
மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், "நாம் தமிழர் கட்சி இந்த முறையும் தனியாக நின்றால் அவர்கள் ஜீரோ தான். தொடர்ந்து 5வது தேர்தலில் தோற்கப் போகிறார் சீமான். முதலில் ஒரு அடிப்படை உண்மையை சீமான் புரிந்துகொள்ள வேண்டும். தனியாக நின்று ஜெயிக்க முடியாது. யாருமே தனியாக நின்று ஜெயித்ததும் இல்லை. இந்த அடிப்படை உண்மையை சீமான் புரிந்துகொள்ள வேண்டும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, நரேந்திர மோடி தொடங்கி ஸ்டாலின் வரை, ராகுல் காந்தி முதல் சந்திரபாபு நாயுடு வரை எந்தத் தலைவரும் தனியாக நின்று வென்றதே இல்லை. தேர்தல் வெற்றி என்றாலே கூட்டணி தேவை என்பது எழுதப்படாத விதி. இந்த எளிய உண்மை புரியாமல் வறட்டு அரசியல் செய்யும் சீமான் தோல்வியைத் தவிர்க்க முடியாது.
கூட்டணி இல்லாமல் தேர்தல் அரசியலில் வெற்றி பெறமுடியாது என்ற அடிப்படையை புரிந்து கொள்ளாத வரை சீமான் இன்னும் எத்தனை தேர்தல் வந்தாலும் திரும்பத் திரும்பத் தோல்வியைத் தழுவுவார்." எனக் கூறியுள்ளார்.
விஜய்க்கு வாய்ப்பு இல்லை
விஜய் கட்சியின் வெற்றி வாய்ப்பு குறித்து மூத்த பத்திரிகையாளர் மணி பேசுகையில், "2026 சட்டசபை தேர்தல் விஜய்க்கான தேர்தல் அல்ல. 2031 வேண்டுமானால் இருக்கலாம். அதிமுக - பாஜக கூட்டணியால் தவெக மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்திருக்கிறது. விஜய்க்கு செல்ல இருந்த சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்குத் தான் போகும். விஜய்க்கு ஓட்டு போட்டால் பாஜகவை தோற்கடிக்க முடியாது என்பது சிறுபான்மை மக்களுக்குத் தெரியும். தவெக நிலை மோசமாகத்தான் இருக்கிறது. அதில் மிகப்பெரிய தோல்வியைச் சந்திக்கவே வாய்ப்பு உள்ளது." எனக் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications