அரசு பேருந்தில்.. வழித்தட டிஸ்ப்ளேவில் 'தவெக' என ஓடியதால் ஷாக்! போக்குவரத்துக் கழகம் விளக்கம்
சென்னை: அரசு பேருந்து ஒன்றில், வழித்தடத்தை அறிவிக்க வைக்கப்பட்டிருக்கும் டிஸ்ப்ளேவில், திடீரென தமிழக வெற்றிக் கழகம் என பெயர் ஓடியதால் பயணிகள் அதிர்ச்சியடைந்திருக்கின்றனர். இதனையடுத்து நடந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து கழகம் விளக்கமளித்திருக்கிறது.
அதாவது, TN45 M4853 என்கிற பதிவெண் கொண்ட அரசு பேருந்தில், கட்சி பெயர் டிஸ்ப்ளேவில் தெரிவதாக சோஷியல் மீடியாக்களில் புகார்கள் வந்தன. வழக்கமாக இந்த டிஸ்ப்ளேவில், பேருந்து எந்த வழித்தடத்தில் பயணிக்கிறது? என்பதுதான் அறிவிக்கப்படும். ஆனால், கட்சியின் பெயர அறிவிக்கப்பட்டிருந்ததால் பயணிகள் புகார் அளித்திருந்தனர்.

இது குறித்து 'அரசு பஸ்' தரப்பில் விளக்கமளிக்கப்பட்டிருக்கிறது. அதாவது, "சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் உள்ள பேருந்தானது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பேருந்து ஆகும். இப்பேருந்தில் உள்ள மின்னணு வழித்தடப் பலகையில் (Electronic Route Board) சில வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகையை (Motherboard) ஹேக் (Hack) செய்து, இத்தகைய தவறான வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்:
• இச்சம்பவம் நேற்று கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு (Motherboard) மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன.
• இது போன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும், மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு (Service Provider) அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
தவெக தலைவர் விஜய் விஜயகாந்த் போல தாக்கத்தை ஏற்படுத்துவார்.. மதுரையில் டிடிவி தினகரன் பேட்டி -
2026 தேர்தல் களம்.. மக்களுக்கு அட்வைஸ்! ரஜினிகாந்த் கொடுத்த ரியாக்ஷன்.. அடுத்த பஞ்சாயத்து -
TN 2026 ட்ரெய்லரை பார்த்து கொளுத்தி போட்ட ஆதவ்.. விஜயை வைத்து பதிலடி கொடுத்த தம்பி ராமையா மகன் உமாபதி! -
விஜய் தேர்தலில் தோல்வி அடைந்த பின்.. அந்த விஷயம் நடக்கும் பாருங்க.. அடித்து சொல்லும் பியூஷ் கோயல்! -
இனி நீங்க முதல்வரா? உங்க ஜோடி நடிகை முதல்வரா? கேள்விக்கு விஜய் கேரக்டரில் நடித்த நட்டி ஓபன் -
வேட்புமனு விஷயத்தில் பயங்கரமாக சொதப்பும் விஜய்.. எக்கச்சக்க பிழைகள்! நிராகரிக்க நிறைய வாய்ப்பு -
தவெக தலைவர் வயது 51ஆ, 52ஆ? திருத்தப்பட்ட பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்த விஜய்.. பலே -
என்.ஆர்.காங்கிரஸ் - பாஜக கூட்டணி ஒரு சோர்ந்துபோன கூட்டணி.. புதுச்சேரியில் விஜய் பிரச்சாரம்! -
விஜய் மனதில் பாஜக இருக்கிறது.. அடித்து சொல்லும் குஷ்பூ.. காரணம் தெரியுமா? -
இலவச திட்டங்களுக்கு எத்தனை கோடி செலவாகும்? திமுக.. அதிமுக.. தவெக..? யார் டாப்? -
Vijay: புதுச்சேரியிலும் திருந்தாத ரசிகர்கள்! விஜய்யை பார்க்க சாலை விதிகளை மீறும் தவெகவினர்! -
வேட்புமனுவை கரெக்டா நிரப்பி கொடுங்க.. தவெக வேட்பாளரை திருப்பி அனுப்பிய தேர்தல் அதிகாரி!












Click it and Unblock the Notifications