கப்பு முக்கியம் பிகிலு.. சின்னத்திலும் சினிமாத்தனமா? விஜய் டிக் செய்த சின்னம் இதுதானா? வெளியான தகவல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய் தேர்தல் ஆணையத்திடம் முக்கிய கோரிக்கை ஒன்றை விடுத்திருக்கிறார். கட்சிக்கு பொதுச் சின்னம் வேண்டுமென நேற்று தேர்தல் ஆணையத்தில் அக்கட்சியின் இணை பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் மனு அளித்திருந்தார். விசில், பேட், ஆட்டோ உள்ளிட்ட சின்னங்கள் கேட்கப்பட்டிருந்த நிலையில் கூடுதலாக சில சின்னங்கள் வரைந்து கொடுக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. குறிப்பாக வெற்றி கோப்பையை விஜய் கேட்டதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

2026 தேர்தலில் நான்கு முறை போட்டி இருப்பது கிட்டத்தட்ட உறுதியாக இருக்கிறது. ஆளுங்கட்சியான திமுக தலைமையிலான கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர் கட்சி, தமிழக வெற்றி கழகம் என களம் அமைந்திருக்கிறது.

காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் ஆதரவோடு அசுர பலத்துடன் திமுக கூட்டணி இருக்கிறது. அதிமுகவோ பாஜகவை தவிர்த்து வேறு எந்த கட்சியும் கூட்டணிக்கு வராததால் அதிருப்தியில் இருக்கிறது.

Vijay TVK Tamilaga Vetri Kazhagam

2026 தமிழக தேர்தல்

கம்யூனிஸ்ட் தொடங்கி காங்கிரஸ் வரை எவ்வளவோ பேசி பார்த்தும் எந்த கட்சியும் அதிமுகவுடன் கூட்டணி சேர முன் வரவில்லை. அதே நேரத்தில் பாமக, தேமுதிக அதிமுக கூட்டணிக்கு இறுதி நேரத்தில் வரலாம் எனவும் சொல்லப்படுகிறது. கடந்த பல தேர்தல்களை தனித்தே சந்தித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் 2026 தேர்தலையும் தனித்து சந்திக்க போவதாக கூறியதோடு பல தொகுதிகளுக்கு வேட்பாளரையும் அறிவித்துவிட்டார்.

விஜய் அரசியல்

இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்ட விஜய், தனி கூட்டணி அமைத்து தான் போட்டி என்பதில் உறுதியாக இருக்கிறார். அதற்கு முன்னேற்பாடாக மகாபலிபுரத்தில் நடந்த பொதுக்குழுவில் விஜய் தான் முதல்வர் வேட்பாளர் என தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில் தேர்தலில் போட்டியிட சின்னம் அவசியம் என்பதை உணர்ந்த விஜய் அது தொடர்பான முன் ஏற்பாடு பணிகளில் கடந்த சில தினங்களாக ஈடுபட்டிருந்தார். அந்த வகையில் நேற்று தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொது செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார் டெல்லி சென்று தேர்தல் ஆணையத்தில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு பொதுச்சின்னத்தை ஒதுக்க கோரி மனு அளித்திருந்தார்.

விஜய் தேர்தல் சின்னம்

குறிப்பாக விசில், ஆட்டோ, கிரிக்கெட் பேட் உள்ளிட்ட சின்னங்களை கேட்டதாக சொல்லப்படுகிறது. 10 சின்னங்கள் வரை தமிழக வெற்றி கழகத்தின் தரப்பில் கேட்கப்பட்ட நிலையில் சில சின்னங்களை வரைந்து கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு மட்டுமே வரைந்து கொடுக்கப்பட்ட சின்னம் ஏற்றுக் கொள்ளப்படும். நாம் தமிழர் கட்சி கூட விவசாய சின்னத்தை வரைந்து கொடுத்து தான் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் கூடுதலாக சில சின்னங்களை விஜய் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் வெற்றிக் கோப்பை

அந்த வகையில் வெற்றி கோப்பை சின்னத்தை விஜய் தேர்தல் ஆணையத்திடம் கேட்டதாக சொல்லப்படுகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட பொது சின்னங்கள் தேர்தல் ஆணையத்திடம் இருக்கும் நிலையில் வெற்றி கோப்பை சின்னத்தை விஜய் தரப்பினர் வரைந்து கொடுத்ததாகவும் சொல்லப்படுகிறது. தனி வெற்றி கோப்பை, வீரர் ஒருவர் வெற்றிக்கொப்பையை வைத்திருப்பது போல என மூன்று ஓவியங்களை வரைந்து கொடுத்து அதனை சின்னமாக அங்கீகரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.

'வி' சென்டிமென்ட்

பிகில் படத்திலும், கில்லி படத்தில் விஜய் வெற்றி கோப்பையை கையில் ஏந்துவது போல ஸ்டில்கள் சமூக வலைதளங்களில் பிரபலமானது. மேலும் விஜய், வெற்றிக் கழகம், வெற்றி கோப்பை, என 'வி' சென்டிமென்ட் காரணமாக வெற்றிக் கோப்பை சின்னத்தை விஜய் தேர்ந்தெடுப்பதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அதிகார பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையத்திடம் இருந்து வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+