Exclusive: திருமாவளவனின் 40% ஓட்டு விஜய்க்கு மாறியாச்சு.. அடித்துச் சொல்லும் மூத்த பத்திரிகையாளர்!
சென்னை: "விஜய்யின் அரசியல் வருகை விசிகவின் வாக்கு வங்கியில் பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. விசிகவின் வாக்குகளில் 40% - 50% வாக்குகள் கரையும். அதுதான் திருமாவுக்கு இருக்கும் மிகப்பெரிய சவால்." என மூத்த பத்திரிகையாளர் மணி, நமது ஒன் இந்தியாவுக்கு அளித்துள்ள சிறப்பு பேட்டியில் தெரிவித்துள்ளார்.
தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கியது முதலே, 2026ல் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வலுவான கூட்டணியை அமைப்பதில் தீவிரம் காட்டி வருகிறார் விஜய். முதல் அரசியல் மாநாட்டிலேயே, கூட்டணி கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு அளிக்கப்படும் என அறிவித்து புயலைக் கிளப்பினார். தொடர்ந்து, விசிக உடன் கூட்டணி அமைக்கும் திட்டத்தோடு விஜய் காய்நகர்த்தி வருவதாகச் சொல்லப்படுகிறது.

விசிகவுக்கு குறி வைத்த விஜய்: அதற்கேற்றார்போல, தவெக தலைவர் விஜய்யும், விசிக தலைவர் திருமாவளவனும் ஒரு புத்தக வெளியீட்டு விழா மேடையை பகிர்ந்து கொள்வதாக இருந்தது. இந்த விழாவை ஒருங்கிணைத்தவர் விசிக துணைப் பொதுச் செயலாளரும், வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனருமான ஆதவ் அர்ஜுனா. ஆனால், விஜய்யுடன் ஒரே மேடையில் கலந்துகொள்வது தனக்கு உவப்பில்லை எனக் கூறி அந்த நிகழ்ச்சியை தவிர்த்தார் திருமாவளவன்.
தவகெ தலைவர் விஜய், தமிழ்நாட்டில் முக்கிய வாக்கு வங்கியாக உள்ள தலித் வாக்குகளை குறி வைத்திருப்பதாகவும், அதன் காரணமாகவே, தலித் வாக்குகளை முழுமையாக கைப்பற்ற வேண்டுமென்றால் விசிக திருமாவளவன் தன்னுடன் கூட்டணியில் இருக்க வேண்டும் என விரும்புவதாகவும், அதற்கான காய் நகர்த்தல்களில் விஜய் ஈடுபட்டு வருவதாகவும் பேசப்படுகிறது.
திருமாவளவன் - விஜய்: அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கூட, விசிக தலைவர் திருமாவளவனால் இன்று வரமுடியாமல் போனது. அம்பேத்கரின் புத்தக வெளியீட்டு விழாவிற்குக் கூட அவரால் கலந்துகொள்ள முடியாத அளவிற்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு பிரஷர் இருக்கும் என்று என்னால் யூகிக்க முடிந்தாலும், நான் இப்போது சொல்கிறேன். அவரோட மனசு முழுக்க இன்று நம்மோடுதான் இருக்கும் என்று பேசினார் விஜய்.
விசிக ஓட்டு வங்கியில் 40%க்கு மேல் கரையும்: இந்நிலையில் இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறுகையில், "திருமாவளவனின் வாக்கு வங்கியை விஜய் உடைக்கிறார். விஜய்யின் வருகை விசிகவின் வாக்கு வங்கியில் பெரியளவில் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. விசிகவின் வாக்குகளில் 40% - 50% வாக்குகள் கரையும். அதுதான் திருமாவளவனுக்கு முன்பு இருக்கும் மிகப்பெரிய சவால். எனவே, திருமாவளவன் கவலைப்பட வேண்டியது விஜய்யை பார்த்து தான்.
இதுபோன்ற சூழலில், விஜய்யுடன் சேர்ந்து மேடையில் பேசியுள்ளார் விசிக துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா. இதுபோன்ற சூழலில் ஆதவ் அர்ஜுனாவை நீக்கினால் இன்னும் டபுள் பாதிப்பு ஏற்படும். ஆதவ் அர்ஜுனாவின் செயல்பாடுகள் விசிக நிர்வாகிகளுக்கு பிடிக்காவிட்டாலும், தொண்டர்கள் பலர் அதனை ரசிக்கிறார்கள். ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பது விசிகவை முன்னகர்த்தும் செயல்பாடு எனப் பார்க்கிறார்கள். இப்போது திருமாவளவனை நெருக்கடி வளையத்திற்குள் நகர்த்திவிட்டார் ஆதவ் அர்ஜுனா.
திருமாவுக்கு நஷ்டம்: இது முழுக்க முழுக்க திருமாவளவன் தனக்குத்தானே வைத்துக்கொண்ட சூனியம். யானை தன் தலை மீது தானே மண்ணை அள்ளிப் போட்டுக்கொள்ளும். இப்போது திருமா டன் டன்னாக தலையில் மண்ணை வாரிப் போட்டுக்கொண்டுள்ளார். ஏற்கனவே விசிக ஓட்டு விஜய்யை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது ஆதவ் அர்ஜுனா மீது நடவடிக்கை எடுத்தால் இன்னும் கூடுதலாக வாக்குகள் பாதிக்கும். எப்படி பார்த்தாலும், நஷ்டம் திருமாவளவனுக்குத்தான்.
திமுக ஆட்சியில் தவறுகள் நடக்கின்றன. போதைப் பொருட்கள் அதிகமாக புழங்குகின்றன, சட்டம் ஒழுங்கு சீர்க்கெட்டு விட்டது எனப் பேசிவிட்டு திமுகவுடன் கூட்டணியில் தொடரலாம். அது எல்லாம் மக்கள் நலன் சார்ந்த விமர்சனங்கள். ஆனால், குடும்ப அரசியல், மன்னராட்சி நடக்கிறது, ஒரு குடும்பம் தான் மொத்தத்தையும் கட்டுப்பாட்டில் வைத்துள்ளது, 2026ல் மன்னராட்சி தொடரக்கூடாது எனப் பேசிவிட்டு அந்தக் கூட்டணியில் எப்படி இருக்க முடியும்?
இப்போது ஆதவ் அர்ஜுனாவை நீக்கினால், திருமாவளவன் திமுகவிடம் கட்டுண்டு கிடக்கிறார் என அவர் பிரச்சாரம் செய்வார். ஆதவ் அர்ஜுனாவை நீக்குவதும் விசிகவுக்கு சிக்கலாகவே முடியும். விஜய்யின் வருகை திருமாவளவனுக்கு அரசியல் ரீதியாக மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது" எனத் தெரிவித்துள்ளார்.
-
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
வருகிறது சென்னை டூ கன்னியாகுமரி HSR ரயில்.. விஜய் பிடித்த பாயிண்ட்.. மோடி மீட்டிங்கில் செம சம்பவம்! -
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
ஸ்லீப்லெஸ் நைட் யாருக்குனு தெரியுமா.. மின்வெட்டு பரிதாபங்கள்.. தவெகவை வெளுக்கும் மீம்ஸ்! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
ஜான் ஆரோக்கியசாமியின் டெல்லி லாபி.. திமுகவுக்கு தூதுவிட்ட சுனில்.. சபரீசனுக்கு வந்துச்சே கோபம் -
Singappen Force: சிங்கப் பெண் அதிரடி படை எப்படி செயல்படும்.. ஐஜி பவானீஸ்வரி விளக்கம் -
திடீரென போனை போட்டு பேசிய விஜய்.. பொருளாதார ஜாம்பவான்களுடன் ரகசிய ஆலோசனை.. என்ன காரணம்? -
தவெகவின் வியூகம்.. புஸ்ஸி ஆனந்துடன் பேச்சுவார்த்தை நிறைவு.. அடுத்த வாரத்தில் இணையும் விஜயபாஸ்கர்? -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு











Click it and Unblock the Notifications