Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“விஜய்க்கு பின்னால் பெரும் இளைஞர்கள் கூட்டம்.. 15% வாக்கு வாங்குவார்.. ஆனால்”.. துரை வைகோ ஓபன் டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய்க்கு பின்னால் பெரும் இளைஞர்கள் கூட்டம் இருப்பதாகவும், இந்த தேர்தலில் தவெக 15 சதவீதம் வாக்குகளை பெறும் எனவும் மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ தெரிவித்துள்ளார். துரை வைகோ, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் வரும் சட்டசபை தேர்தலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் குறித்துத் தனது கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தொகுதியில் போட்டியிடும் மதிமுக வேட்பாளரை ஆதரித்து துரை வைகோ பிரச்சாரம் மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய அவர், "திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு மக்கள் மத்தியில் பெரும் ஆதரவு உள்ளது. குறிப்பாக, விளிம்புநிலை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் திமுக அரசின் திட்டங்கள், சமூக நீதி நடவடிக்கைகள், தொழில் வளர்ச்சிக்கான முயற்சிகள் ஆகியவை இந்தத் தேர்தலிலும் எங்கள் கூட்டணிக்கு வெற்றியை தேடித் தரும்.

Vijay s TVK Will Capture 15 Votes Says MDMK Leader Durai Vaiko

மதிமுக போட்டியிடும் 4 தொகுதிகளில் சீர்காழி தொகுதியில் மட்டும் மதிமுக சின்னத்தில் போட்டியிட நாங்கள் முதலில் திட்டமிட்டிருந்தோம். ஆனால் அதிமுக - பாஜக கூட்டணி எந்தக் காரணத்தைக் கொண்டும் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்ற முன்னெச்சரிக்கையுடன், திமுகவின் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட மதிமுக தலைமை முடிவெடுத்தது. இது தோல்வி பயத்தால் எடுக்கப்பட்ட முடிவு அல்ல, மாறாக, மதவாத சக்திகளைத் தடுக்க எடுக்கப்பட்ட அரசியல் உத்தி.

மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள வக்ஃப் வாரியத் திருத்தச் சட்டம், FCRA திருத்தம், குடியுரிமைத் திருத்தச் சட்டம் போன்றவற்றால் சிறுபான்மையினர் அச்சத்தில் உள்ளனர். எனவே 90 சதவீத சிறுபான்மையினரின் வாக்குகள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கே கிடைக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து, விஜய் குறித்த கேள்விக்கு பதிலளித்த துரை வைகோ, "நடிகர் விஜய் ஒரு மிகப்பெரிய நட்சத்திரம். அவருக்கு பின்னால் பெரும் இளைஞர் கூட்டம் இருக்கிறது. அதே சமயத்தில், அந்த கூட்டம் வாக்குகளாக மாறுமா என்பது கேள்விக்குறிதான். தேர்தலை எதிர்கொள்ள வேண்டுமெனில், மக்களை விஜய் நேரடியாக சந்திக்க வேண்டும். பத்திரிகையாளர்களை அவர் சந்திக்க வேண்டும். அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க பழக வேண்டும்.

இந்த தேர்தலில் விஜய்யின் தவெக 15 சதவீத வாக்குகளை பெறும். ஒரு புதிய அரசியல் கட்சி தனது முதல் தேர்தலிலேயே 15 சதவீத வாக்குகளைப் பெறுவது என்பது மிகச்சிறந்த சாதனையாகக் கருதப்படும். ஆனால், இந்த வாக்குகள் அவருக்குத் தொகுதிகளில் வெற்றியைத் தேடித் தருமா என்பது சந்தேகமே. தவெக வாங்கும் வாக்குகள், அதிமுகவைத்தான் பாதிக்கும். திமுகவை பாதிக்காது. திமுக தலைமையிலான கூட்டணி வலுவாக உள்ளது" என துரை வைகோ கூறினார்.

பின்னர், தன் மீது சுமத்தப்படும் வாரிசு அரசியல் குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். அவர் கூறுகையில், "வாரிசு அரசியல் என்பது ஒருவரை கட்சியின் தலைமை பீடத்துக்கு கட்டாயமாக திணிப்பது ஆகும். ஆனால், கட்சியில் உள்ள அனைவருமே ஒருவரை தலைமை ஏற்கச் சொல்லும்போது அது வாரிசு அரசியல் ஆகாது" எனத் தெரிவித்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+