"என்னையும் லிஸ்ட்ல சேர்த்துக்கோ மாமா".. ரஸ்ஸல் கிளப்பிய ரவுசு.. வச்சு செய்யும் "வாத்தி கம்மிங்"!
சென்னை: தற்போது கிரிக்கெட் உலகையே ஆக்கிரமித்துள்ள பாடல் என 'வாத்தி கம்மிங்' பாடலை சொல்லலாம். தினேஷ் கார்த்திக் முதல் ரஸ்ஸல் வரை அனைவரும் இந்தப் பாடலுக்குப் போட்டும் ஆட்டம் தான் இப்போது இணையத்தில் வைரல்!
இப்போது இணையத்தில் எங்கு பார்த்தாலும் டிரெடிங்கில் மாஸ் காட்டுவது விஜய்யின் வாத்தி கம்மிங் பாடல்தான். இந்தப் பாடல் வெளியாகி ஓர் ஆண்டை கடந்திருந்த போதும், பாடலின் மவுஸ் குறைந்ததாகத் தெரியவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரபலங்களின் வாத்தி கம்மிங் வெர்ஷன் இணையத்தில் புயலைக் கிளப்பி வருகிறது.
குறிப்பாக, அனைத்து கிரிக்கெட் பிரபலங்களின் ஹிட் லிஸ்டில் இடம்பிடித்துவிட்டது வாத்தி கம்மிங் பாடல். ஒவ்வொரு வீரரும் இந்த பாடலுக்கு குத்தாட்டம் போடும் வீடியோதான் இணையத்தில் இப்போது வைரல்

வாத்தி கம்மிங்
வாத்தி கம்மிங் பாடலுக்கு தோள்பட்டையை இறக்கி விஜய் ஆடும் ஆட்டம் தான் ஹைலெட். கடந்த ஆண்டு மாஸ்டர் பாடல் வெளியீட்டு விழாவில் தான் முதலில் விஜய் இந்த ஸ்டெப்பை போட்டார். அப்போது முதலே இணையத்தில் இது பற்றிக்கொண்டது. வெற்றி கொண்டாட்டம், விருது வழங்கும் விழாக்கள், அவ்வளவு ஏன் பட்டமளிப்பு விழாக்களுக்கும் சென்றது வாத்தி கம்மிங் பாடல்.
|
Array
இந்த பாடலை முதலில் கிரிக்கெட்டிற்கு எடுத்துச் சென்றவர் நம் தினேஷ் கார்த்திக் தான். சுமார் 10 ஆண்டுகளுக்குப் பின் தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி, சையது முஷ்டாக் அலி டிராபியை இந்த ஆண்டு வென்றது. இந்த வெற்றி கொண்டாட்டத்தை வெளிப்படும் விதமாக வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டனர் தினேஷ் கார்த்திக் & கோ. அப்போதே இது இணையத்தில் வைரலானது.
ரவி அஷ்வின்
உள்ளூர் கிரிக்கெட்டிற்கு தினேஷ் கார்த்திக் எடுத்துச் சென்றார் என்றால், சர்வதேச கிரிக்கெட்டிற்கு இந்தப் பாடலை எடுத்துச் சென்றவர் மற்றொரு தமிழக வீரரான அஷ்வின். இங்கிலாந்துக்கு எதிரான தொடரின்போது அஷ்வின், ஹர்திக் பாண்டியா மற்றும் குல்தீப் யாதவ் இணைந்து ஆடிய வாத்தி கம்மிங் சர்வதேச அளவில் ஹிட் அடித்தது. அப்போது முதலே பல சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் வாத்தி கம்மிங் பாடலுக்கு அடிமையாகிவிட்டனர்.
|
ரஸ்ஸல் அர்னால்ட்
இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் தற்போது பயிற்சியாளராக உள்ள ரஸ்ஸல் அர்னால்ட் தனது பங்கிற்கு வாத்தி கம்மிங் பாடலுக்கு ஆட்டம் போட்டுள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்ட அவர், "வாத்தி கம்மிங் லிஸ்டில் ரஸ்ஸல் அர்னால்ட் பெயர் சேர்த்து கொள்டா மாமா. இந்த பாடலை கேட்பதை நிறுத்த முடியாது. தளபதி பிரிச்சுட்டார் , அனிருத் மாஸ்" என ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீடும் இப்போது வழக்கம்போல வைரலாகியுள்ளது.
|
ஐபிஎல் தொடர்
சர்வதேச அரங்கில் இருந்து இப்போது அப்படியே ஐபிஎல் அரங்கிற்கும் வாத்தி கம்மிங் நுழைந்துவிட்டது. முதலில் நம்ம புட்ட பொம்மா புகழ் வார்னர், ரஷித் கான் மற்றும் புவனேஷ்வர் குமார் ஆகியோருடன் இணைந்து ஆட்டம் போட்டார். அதற்குள் மறுபுறம் அஷ்வினுடன் டெல்லி அணி வீரர்கள் தவான், பிருத்வி ஷாவும் இணைந்து கொள்ள அதகளமானது. இப்போதும்கூட இணையத்தில் எங்கு பார்த்தாலும் வாத்தி கம்மிங் பாடலே வைரல்!
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications