விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவால் இனி விஜய்க்கு எதிராக புது வழக்கு தொடர முடியுமா? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி தாக்கல் செய்த மனுவை இன்று அவரது மனைவி சங்கீதா வாபஸ் பெற்றார். இதனால் விவாகரத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது. இந்நிலையில் தான் எதிர்காலத்தில் விஜய்க்கு எதிராக சங்கீதா வழக்கு தொடர முடியுமா? என்பது பலருக்கும் கேள்வியாக உள்ள நிலையில் அதற்கு நீதிபதியே பதில் கொடுத்துள்ளார்.

vijay-sangeetha-divorce-case-can-sangeetha-file-a-new-case-against-vijay-after-the-withdrawn-det

முதல்வர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். நடிகை ஒருவருடன் விஜய்க்கு தொடர்பு இருப்பதாக கூறி இந்த மனுவை கடந்த பிப்ரவரி மாதம் 26ம் தேதி சங்கீதா தாக்கல் செய்தார்.

அதன்பிறகு கடந்த ஏப்ரல் 20, ஜூன் 15ம் தேதிகளல் விஜய், சங்கீதா தரப்பு வழக்கு விசாரணைக்கு ஆஜரானது. இருவரும் ஆன்லைனில் ஆஜராக அனுமதி கோரப்பட்டது. அதன்பிறகு வழக்கு இன்று ஒத்திவைக்கப்பட்டது. இன்று காலையில் குடும்ப நல நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு வந்தது.

சட்டசபை கூட்டத்தொடர் நடப்பதால் வழக்கை வேறு தேதிக்கு ஒத்திவைக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் தரப்பு வழக்கறிஞர்கள் கேட்டனர். ஆனால் அனுமதிக்கவில்லை. அதேவேளையில் சங்கீதாவை ஆன்லைனில் ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியதோடு, மதியத்துக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது. மதிய வேளையில் சங்கீதா ஆன்லைன் வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகி 15 நிமிடங்கள் வரை தன்தரப்பு வாதத்தை நீதிபதியிடம் தெரிவித்தார்.

இந்த சமயத்தில் சங்கீதா, ''விவாகரத்து வழக்கை வாபஸ் பெறுகிறேன். இந்த வழக்கை மேற்கொண்டு தொடர விரும்பவில்லை. வழக்கை வாபஸ் பெற்று கொள்ள அனுமதிக்க வேண்டும்'' என்று கூறினார். வழக்கை வாபஸ் பெறுவதாக சங்கீதா கூறிய நிலையில் எதிர்மனுதாரர் (விஜய்) தரப்பு வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதனால் வழக்கை வாபஸ் பெற சங்கீதாவிற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கு முடித்து வைத்தது. வழக்கு தொடர்பாக சங்கீதா தாக்கல் செய்ய இடைக்கால மனுக்களும் முடிவுக்கு வந்தது.

vijay-sangeetha-divorce-case-can-sangeetha-file-a-new-case-against-vijay-after-the-withdrawn-det

அதேசமயம் வழக்கை முடித்த வைத்தாலும் கூட நீதிபதி முக்கிய விஷயத்தை தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் தேவை என்றால் புதிதாக மனுதாக்கல் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதன்மூலம் சங்கீதா புதிதாக வழக்கு தொடர நீதிமன்றம் சுதந்திரம் வழங்கி உள்ளது.

விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு மட்டுமில்லை. பொதுவாக நம் நாட்டில் எந்த விவாகரத்து வழக்கிலும் சில சட்ட நடைமுறைகள் உள்ளன. அதாவது கருத்து வேறுபாட்டால் கணவன் - மனைவி விவாகரத்து மனுவை தாக்கல் செய்த பிறகு தீர்ப்பு ஆகும் முன்பு அதனை எப்போது வேண்டுமானாலும் வாபஸ் பெறலாம்.

இப்படி வாபஸ் பெற்றால் குறிப்பிட்ட அந்த மனுவும், அந்த மனுவில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளும் முடிவுக்கு வந்துவிடும். அதுபற்றி நீதிமன்றம் மேற்கொண்டு விசாரணை நடத்தாது. விவாகரத்து கோரிய தம்பதியின் திருமணம் சட்டப்படி செல்லும். அதன்பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தே வாழலாம்.

சட்டப்படி திருமணம் செல்லும் என்பதால் கணவன் சார்பில் ஜீவனாம்சம், பராமரிப்பு தொகை என்று எதுவும் வழங்க வேண்டிய தேவையில்லை. அதே சமயம் மீண்டும் மனக்கசப்பு உள்பட பிற பிரச்சனைகள் வந்தால் எதிர்காலத்திலும் தனியே விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம். அதற்கு இருவருக்கும் உரிமை உள்ளது. அந்த சமயத்தில் மனைவி சார்பில் ஜீவனாம்சம் கோர முடியும். மனைவி, மகன்களின் பாராமரிப்புக்கும் குறிப்பிட்ட தொகையை கோர முடியும் என்பது தான் நம் நாட்டின் சட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+