விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால்.. வீட்டிலேயே அனுமதி இல்லை என்றார் விஜய்.. சங்கீதா குற்றச்சாட்டு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தன்னிடம் இருந்து விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டிற்குள் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாக சங்கீதா குற்றம்சாட்டியுள்ளார். விஜய்யின் வீட்டில் வசிக்க சங்கீதா நீதிமன்றத்தை நாடியுள்ள சூழலில், நீலாங்கரை வீட்டில் தனக்கும் சரி பாதி பங்கு உள்ளது என்றும் மனுவில் கூறியுள்ளார்.

கடந்த வாரம் தவெக தலைவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அதில் தவெக தலைவர் விஜய் நடிகை ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருப்பதாக குற்றம்சாட்டி இருந்தார். இதன்பின் கல்பாத்தி குடும்ப திருமண நிகழ்ச்சியில் விஜய் நடிகர் திரிஷாவுடன் ஒரே காரில் ஒரே டிசைனில் ஆடை அணிந்து ஒன்றாக தம்பதியை வாழ்த்தினர்.

Vijay Sangeetha Divorce

விஜய்யின் இந்த செயலால் அவரது சட்டப்பூர்வ மனைவி சங்கீதா மன உளைச்சலில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இதனிடையே இன்று மாலை தவெக சார்பாக தனியார் விடுதியில் மகளிர் தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதில் விஜய் மகளிருக்கான தேர்தல் வாக்குறுதிகள், பெண்களுக்கான திட்டங்களை அறிவிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்படியான சூழலில் சங்கீதா புதிய மனு ஒன்றை தாக்கல் செய்திருக்கிறார். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் சங்கீதா தாக்கல் செய்த மனுவில், விஜய் உடனான விவாகரத்திற்கு பிறகு வேறு வீட்டிற்கு செல்லும் வரை நீலாங்கரை வீட்டில் தங்க விஜய் தன்னை அனுமதிக்க உத்தரவிட வேண்டும். நான் பிரிட்டன் குடியுரிமையுடன் லண்டனில் வசித்து வருகிறேன்.

சென்னையில் எனக்கு தனியாக வீடு இல்லை.. விவாகரத்து கோரியுள்ளதால், தற்போது சென்னையில் வீடின்றி தவிக்கிறேன். எனக்கு வீட்டிற்குள் அனுமதிக்க விஜய் மறுக்கிறார். கோடி கோடியாக சம்பாதிக்கும் விஜய் எனக்கும் என் குழந்தைகளுக்கும் சேர வேண்டிய நியாயமான ஜீவனாம்சம் வழங்க வேண்டும். அதேபோல் விவாகரத்து வழக்கு முடியும் வரை அந்த வீட்டில் வசிக்க எனக்கு உரிமை உள்ளது.

அதனால் வழக்கு முடியும் வரை விஜய்யின் இல்லத்தில் அனைத்து உரிமைகள், வசதிகளுடன் வசிக்க உத்தரவிட வேண்டும். விஜய்யின் அரசியல் சூழல் கருதி பலமுறை சுமூகமாக விவாகரத்து பெற முயற்சி செய்தும், விஜய் பிரிந்து செல்ல மறுக்கிறார். அதுமட்டுமல்லாமல் சென்னை நீலாங்கரை வீட்டில் எனக்கு சரி பாதி பங்கு உள்ளது.

அதேபோல் விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்றால், வீட்டில் அனுமதிக்க மாட்டேன் என்று வழக்கறிஞர் மூலமாக விஜய் கூறியதாகவும் குற்றம்சாட்டி இருக்கிறார். இதனிடையே ஏப்ரல் 20ஆம் தேதி விவாகரத்து வழக்கில் விஜய் செங்கல்பட்டி நீதிமன்றத்தில் ஆஜராகுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+