Vijay Sangeetha: ஏப்ரலில் ஏடாகூடமாகச் சிக்கப் போகும் விஜய்! காதல் மனைவி சங்கீதா வைத்த செக்! எலக்சன் நேரத்துல இது வேற!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயிடம் இருந்து விவாகரத்து கோரி அவரது மனைவி சங்கீதா வழக்கு தொடர்ந்து உள்ளார். செங்கல்பட்டு முதன்மை சிசன்ஸ் நீதிமன்றத்தில் சங்கீதா தனது வழக்கறிஞர் மஞ்சுளா மூலம் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஏப்.20ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இது தொடர்பாக நேரில் ஆஜராகுமாறு விஜய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்போது விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் மிகவும் பிசியாக இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் மற்றும் நடிகரான விஜய் மீது அவரது மனைவி சங்கீதா விஜய் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த மனு செங்கல்பட்டு முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், வழக்கு விசாரணை செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றம்க்கு மாற்றப்பட்டுள்ளது.
வழக்கு ஏப்ரல் 20ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளதாகவும், அதற்காக விஜய் நேரில் ஆஜராகுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 27 ஆண்டுகள் நீண்ட மணவாழ்க்கைக்கு பிறகு இந்த விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

விஜய் விவாகரத்து வழக்கு
லண்டனில் வசித்து வந்த தமிழ் பெண்ணான சங்கீதா, இலங்கை பூர்வீகத்தை கொண்டவர். நடிகர் விஜயின் தீவிர ரசிகையாக இருந்த அவர், பின்னர் அவரின் வாழ்க்கைத்துணையாக ஆனார். 1996ஆம் ஆண்டு வெளியான பூவே உனக்காக திரைப்பட வெற்றிக்குப் பிறகு விஜயை பாராட்டுவதற்காக லண்டனிலிருந்து சென்னை வந்தபோது இருவரும் சந்தித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இரு குடும்பங்களின் சம்மதத்துடன் 1999 ஆகஸ்ட் 25ஆம் தேதி இவர்களின் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். மகன் சஞ்சய் திரைப்படத் துறையை சார்ந்த படிப்பை முடித்து இயக்குநராக அறிமுகமாக உள்ளார்.
சங்கீதா மனு
மகள் திவ்யா சாஷா அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வருகிறார். நடிகர் விஜய் வளர்ந்துவரும் காலத்தில் குடும்ப பொறுப்புகளை கவனித்ததுடன், ஆரம்பகால திரைப்பட பணிகளிலும் சங்கீதா உதவி செய்ததாக கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக சங்கீதா பொது நிகழ்ச்சிகளில் காணப்படாததால் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின. இருப்பினும், குழந்தைகளின் கல்வி மற்றும் வெளிநாட்டு பணிகள் காரணமாக வெளிநாட்டிலேயே தங்கி இருந்ததாக குடும்பத்திற்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்தன.
சினிமா நடிகை
இந்த சூழ்நிலையில் தான் விவாகரத்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவாகரத்து மனுவில், திருமண நம்பிக்கையை மீறிய உறவு குறித்து சங்கீதா குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு முதல் மனஉளைச்சலுடன் தனித்தனியாக வாழ்ந்து வருவதாகவும், கணவரின் நடத்தை காரணமாக குடும்பத்தில் பாதிப்பு ஏற்பட்டதாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட பிரச்சனைகள் காரணமாக திருமண உறவு தொடர இயலாத நிலை ஏற்பட்டதாகவும் அவர் மனுவில் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
விஜய் அரசியல்
இந்த மனுவை கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி விசாரித்த நீதிமன்றம், வழக்கை குடும்பநல நீதிமன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டது. அதன்படி, ஏப்ரல் 20ஆம் தேதி நடைபெறும் விசாரணையில் இரு தரப்பினரும் ஆஜராக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் விஜய் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கதாக பார்க்கப்படுகிறது.
2026 தமிழக தேர்தல்
2026 தேர்தலை தனது முதன்மை இலக்காகக் கொண்டு விஜய் செயல் பட்டு வரும் நிலையில் தேர்தல் பிரச்சாரத்தை தமிழகம் முழுவதும் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே திட்டமிட்டிருந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை விஜயால் முழுமையாக மேற்கொள்ள முடியவில்லை. கரூர் சம்பவத்திற்கு பிறகு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட நிலையில் ஒன்றிரண்டு மாவட்டங்களில் மட்டுமே விஜய் பிரச்சாரம் மேற்கொண்டு இருக்கிறார்.
விஜய் தேர்தல் பிரச்சாரம்
இந்த நிலையில் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஏப்ரல் அல்லது மே மாதத்தில் வாக்குப்பதிவு நடைபெறலாம் என சொல்லப்படுகிறது. இந்த சூழலில் அப்போது தான் விஜய் விசாரணைக்கு ஆஜராக வேண்டிய சூழல் ஏற்படும் பிரச்சாரத்தை ஒருபுறம் நடத்திக் கொண்டே விவாகரத்து வழக்கையும் நடத்த வேண்டிய நிலை விஜய்க்கு ஏற்பட்டுள்ளது. இதனால் மனரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் விஜய் பெரும் நெருக்கடிக்கு ஆளாக வேண்டி இருக்கும் என்கின்றனர்.
-
தவெக பரப்புரைக்கு தடைபோடுவதா.. திடீர் பள்ளம், தடுப்பு எங்கிருந்து வந்துச்சு? கடுப்பில் விஜய் அறிக்கை -
விஜய் படங்களை ஹிட்டாக்க செய்த வில்லங்க வேலை.. அம்பலப்படுத்திய பிரபலம்.. கடுப்பில் ரசிகர்கள் -
விஜய் ஒரு பச்சைத் தமிழர் தான்.. ஆனால் தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.. வேல்முருகன் அறிவிப்பு! -
திமுகவுக்கு வார்னிங்.. ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. தமிழகத்தில் எந்த வயதினர் யாருக்கு ஆதரவு! சர்வே -
பெரம்பூர் தொகுதி பாமகவுக்கு ஒதுக்கப்பட்டது விஜய்க்கு சாதகமா? கள நிலவரம் என்ன? டேட்டாவை பாருங்க -
டிவில கூட விஜய் படத்தை போடக் கூடாது.. அவசர கடிதத்தை தேர்தல் அதிகாரிக்கு எழுதிய காங்கிரஸ் -
உங்க விஜய் நான் வறேன்.. களத்தில் இறங்கிட்டாரு விஜய்! ஒரே நாளில் 5 இடத்தில் பரப்புரை! எங்கே? எப்போது? -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தலைமை செயலகத்திற்கு திடீர் விசிட் வந்த செங்கோட்டையன்.. தேர்தல் அதிகாரியிடம் மனு -
வடக்கில் தொடங்கும் விஜய்.. பெரம்பூரில் மாஸ் காட்ட பலே ப்ளான்! 2026ல் கைகொடுக்குமா? திடீர் கோரிக்கை! -
விஜய்க்கு இனிமே தொல்லைகள் அதிகமாக வரும்.. அவங்க வீட்டுக்குள் நடந்த சம்பவம்! நடிகர் ராமராஜன் ஓபன் -
விஜய்க்கு பெண் இனத்தில் மன்னிப்பே கிடையாது.. பெற்றோர், மனைவிக்கு இப்படியா செய்வாங்க? நிர்மலா பெரியசாமி ஆதங்கம்












Click it and Unblock the Notifications