விஜய்க்கு ஆதரவாக களமிறங்கிய PR நிறுவனம்.. அதென்ன நடுவுல Chief.. Chiefனு? ப்ளூ சட்டை மாறன் கேள்வி!
சென்னை: விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு குறித்து சோஷியல் மீடியா முழுவதும் பேசப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவுக்கு எதிராகவும் பேச வேண்டும் என்று கூறி PR நிறுவனம், சோஷியல் மீடியா இன்புளூயுசர்களை கேட்டுக்கொண்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியிருக்கிறது. இது குறித்து ப்ளூ சட்டை மாறன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.
கடந்த 1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் விஜய்க்கும், இலங்கை தமிழரான சங்கீதாவுக்கும் திருமணம் நடந்தது. ஆனால், திருமண வாழ்க்கையை தாண்டி, நடிகை ஒருவருடன் விஜய் உறவில் இருப்பதாகவும், அவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் கூறி அவரது மனைவி விவாகரத்து கேட்டு செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருக்கிறார்.

விஜய்கு ஆதரவாக பேச வேண்டுமாம்
இந்த மனுவில் அவர் கூறியிருக்கும் விஷயங்கள், விஜய்கு எதிராக புயலை கிளப்பியிருக்கின்றன. இப்படி இருக்கையில் இந்த புயலை அமைதிப்படுத்த விஜய்க்கு ஆதரவாக PR நிறுவனம் இறங்கியிருப்பதாகவும், சோஷியல் மீடியா இன்புளூயுசர்களை விஜய்க்கு ஆதரவாகவும், திமுகவின் சதி செயல் இது என்று பேச வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டதாக ஆடியோ ஒன்று வெளியாகியுள்ளது.
விஷயத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டும்
இந்த ஆடியோவில், ஸ்ரீராம் என்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும் நபர், செய்தி பார்த்தீர்களா என்று கேள்வி எழுப்பி, விஷயம் கையை மீறி போவதை போல இருப்பதாக கூறியிருக்கிறார். மேலும், வழக்கமாக நமக்கு என ஒரு டூல் கிட் இருக்கும், அதை பின்பற்றி இந்த விஷயத்தை நீர்த்துப்போக செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
ஹாஷ் டேக்
மேலும்.. கரூர் வழக்கில் சிக்க வைக்க பார்த்தீர்கள், திமுகவும்-பாஜகவும் சேர்ந்து சிபிஐ விசாரணை என டெல்லியில் 2 நாட்கள் அலைய வைத்தீர்கள், மக்களை சந்திக்க முயன்றபோது, அதற்காக வழிமுறைகளை உருவாக்கி தடுத்தீர்கள், இதையெல்லாம் மக்கள் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை போல வீடியோவை போட்டு திமுகவுக்கு எதிராக ஒரு ஹாஷ் டேக் கிரியேட் செய்யப்போகிறோம். அதற்கு உங்கள் ஆதரவு வேண்டும் என்று அந்த நபர் கேட்டுக்கொண்டார்.
சங்கீதாவை விட்டுடுங்க
இதில் குறிப்பாக சங்கீதாவை அட்டாக் செய்ய வேண்டாம் என்று கேட்டுக்கொண்ட அந்த நபர், இந்த விவகாரத்திற்கு பின்னால் திமுகதான் இருக்கிறது என்பது போல தகவல்களை பரப்ப வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார்.
Chief, Chief னு யாரை சொல்றாங்க?
இந்த உரையாடலில் PR நிறுவனம் சார்பில் பேசும் நபர், விஜய்யை Chief.. Chief என்று குறிப்பிட்டிருந்தார். இதை விமர்சித்திருந்தார். "உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷ்ய ராணுவ தளபதியுடன்.. விமானப்படை தளபதி ஆலோசனை. நடுவுல Chief, Chief னு யாரை சொல்றாங்க?" என கலாய்த்து கேள்வி எழுப்பியிருக்கிறார். இது தொடர்பான ஆடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக ஷேராகி வருகிறது.
-
உயரும் கட்டணம் + தனியார்மயம் + வாக்குறுதிகள் தள்ளிவைப்பு? கஜானாவை காக்க விஜய்யின் 3 திட்டங்கள் -
2021ல் ஸ்டாலினின் திமுக வெள்ளை அறிக்கை vs 2026ல் விஜய்யின் தவெக வெள்ளை அறிக்கை.. ஒரு ஒப்பீடு -
விஜய் உடன் அமைச்சர் கீர்த்தனா சந்திப்பு.. கூட யாருன்னு பாருங்க..! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
திமுக செய்த சாதனை.. உண்மையை ஒப்புக்கொண்ட TVK.. அப்போ பெண்களுக்கான 'இந்த' திட்டம் வருமா? வரதா? -
பொள்ளாச்சிக்கு நிகரான கொடூரம்.. ஒரு பென்ட்ரைவ்.. 50+ பெண் வீடியோக்கள்.. தவெக நிர்வாகி அட்டூழியம்! -
நிலைமை மோசமாகுது! அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான கொடூரங்கள்! சிங்கப்பெண் சிறப்புப் படை ஏன் தோற்றது? -
தொடரும் மின்வெட்டு.. முதல்வர் விஜய் போட்ட அதிரடி உத்தரவு! 15,000 ஊழியர்களை நியமிக்க ஆர்டர் -
மின் கட்டணம் உயர்கிறதா? முதல்வர் விஜய் முடிவு செய்வார்.. சிடிஆர் நிர்மல்குமார் சொன்ன பதில்! -
மரிய வில்சன் கொடுத்த ஷாக்.. புதிய திட்டங்களுக்கு பிரேக் வருமா? அப்போ ரூ.2500 மகளிர் உரிமைத்தொகை? -
கரண்ட் கட் பற்றி நான் சொன்ன விஷயத்தில் பின்வாங்க மாட்டேன்.. ஏனென்றால்..? மாஸ்டர் மகேந்திரன் விளக்கம்












Click it and Unblock the Notifications