விஜய்க்கு வலை வீசும் அதிமுக! விஜய் பக்கம் சாயும் சீமான்! ரவீந்திரன் துரைசாமி தரும் எச்சரிக்கை
சென்னை: விஜய்யுடன் கூட்டணி வைப்பது சீமானுக்கு நல்லது அல்ல; நாம் தமிழர் கட்சி தனித்து 5ஆவது முறையும் போட்டியிடுவதே நல்லது என்று ரவீந்திரன் துரைசாமி தனது கணிப்பை முன்வைத்துள்ளார்.
விஜய் பக்கம் சாயப் பார்க்கிறார் சீமான். இதுதான் அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆகப் போய்க் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் விஜய் கட்சிக்கு எத்தனைச் சதவீதம் வாக்கு வங்கி இருக்கிறது என்பது நிரூபிக்கப்படவில்லை. இன்னும் சொல்லப் போனால் முறைப்படி கட்சியை அவர் பதிவு செய்யவே இல்லை.
கட்சியின் பெயரைப் பதிவு செய்வதற்காக மனு அளித்துவிட்டு, முடிவுக்காகக் காத்திருக்கிறது விஜய் தரப்பு. ஆனால், அதற்கு 2026 கூட்டணிக்கு அடிப் போட ஆரம்பித்திருக்கிறார் சீமான்.
ஏற்கெனவே விஜய்யை நம்பி சினிமா வாழ்க்கையை இழந்தவர் சீமான். அவர் விஜய்யை வைத்து எடுக்கப்போவதாகச் சொல்லப்பட்ட படத்திற்குக் கடைசி வரை கால்ஷீட் தரவே இல்லை விஜய்.
அப்போது அவருக்கு சினிமா ஆர்வம் இல்லை. எனவே சீமானின் தயவு தனக்குத் தேவைப்படாது என்று உறுதியாக நம்பினார் விஜய். இருந்தாலும் விஜய்யை பற்றிய கேள்வியை எதிர்கொள்ளும் போது எல்லாம் அவரை விட்டுக் கொடுக்காமல், 'தமிழன் ஆண்டால் என்ன? தமிழன் சினிமாவில் வென்றால் என்ன?' என்று விடாமல் முட்டுக் கொடுத்தார் சீமான்.
அப்போதும் கூட, தன்னை இந்தளவுக்கு ஆதரித்துவரும் சீமானைப் பற்றி வெளிப்படையாக அறிக்கைவிட்டு நன்றி சொன்னதில்லை விஜய். ஒருவேளை அந்தரங்கமாக அழைத்துப் பேசி இருக்கலாம்.
பொதுவெளியில் ஒரு பிரச்சினை வரும்போது, அதற்காகப் பொதுவெளியில் கருத்துகளைச் சொல்பவருக்கு விஜய் வெளிப்படையாகத்தானே ஆதரவு தந்திருக்க வேண்டும்.

ஆக, எப்படிப் பார்த்தாலும் விஜய் சாய்ஸில் சீமான் கடந்த காலங்களிலிருந்ததில்லை. ஆனால், 'கோட்' படத்தின் விளம்பரத்தில் மைக் படம் வெளியான பிறகு சீமான் திசை மாறி இருக்கிறது கவனம்.
இந்நிலையில் சீமான் மற்றும் விஜய் இடையே கூட்டணி உருவானால் எந்த மாற்றம் ஏற்படும் என்பது பற்றி ரவீந்திரன் துரைசாமி சில கருத்துகளை முன்வைத்து வருகிறார்.
ஆனால், அவரது பேச்சுக்கு சமூக வலைத்தளங்களில் கடுமையான எதிர்வினைகள் வருகின்றன.
சீமான், விஜய் கூட்டணி பற்றி ரவீந்திரன் துரைசாமி பேசுகையில், "சீமான் தனித்துப் போட்டியிடுவதுதான் அவருக்கு நல்லது. அதுதான் எனது ஆணித்தரமான கருத்தும் கூட. அவரை மக்கள் ஆதரிப்பதற்குக் காரணம், அவரது மேடைப் பேச்சுதான்.
அவர் பாஜக, அதிமுக, திமுகவை விமர்சிப்பதால்தான் வளர்க்கிறார். அதுதான் அவரது செல்வாக்கு. அவர் பேசும் தமிழ்த்தேசியம் தான் அவரை இந்தளவுக்கு உயரத்திற்குக் கொண்டுவந்துள்ளது.
எப்படி டெல்லியில் ஆம் ஆத்மி வளர்ந்ததோ அதேபோல் தமிழ்நாட்டில் சீமான் வளர்கிறார். பஞ்சாபில் 5 முறை தனித்துப் போட்டியிட்டதால்தான் அதை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். அதே மாதிரி சீமான் தனித்து வளர்ந்து வரும்பட்சத்தில் அவரும் ஆம் ஆத்மி போல ஒரு நாள் மக்களால் ஏற்றுக்கொள்ளப்படுவார்.
சீமான் தேர்தல் களத்திற்கு வரும்போதே, 'நாமே மாற்று; நாம் தமிழரே மாற்று' என்ற முழக்கத்தோடு வந்தவர். அவர் வேறு பக்கம் சாய்ந்தால் அது நல்லதல்ல.
விஜயகாந்த் 80 தொகுதிகள் கொடுத்தால் அதிமுகவுடன் கூட்டணிக்குப் போகத் தயார் என்று சொன்னவர். ரஜினிகாந்த்துடன் சேர்ந்து அரசியல் களத்தைச் சந்திக்கத் தயார் என்று கமல்ஹாசன் சொன்னார். அது எந்தளவுக்குப் பலனளித்தது என்பதை மக்களே அறிவார்கள்.

இப்போது மைக் சின்னத்தைத் தனது படத்தின் போஸ்டரில் விஜய் போட்டதால், சீமானிடம் ஒரு மாற்றம் தெரிகிறது. சொல்லப்போனால், விஜய் அரசியலில் அதிக ஆர்வம் உள்ளவரைப் போலத் தெரியவில்லை.
அவர் மாவட்டம் தோறும் நிர்வாகிகளைப் போட்டு, அதை முறைப்படுத்தி கட்சியை நிர்வகிக்கும் அளவுக்குச் செயல்படுவாரா என்பதே சந்தேகமாக உள்ளது. அதற்குச் சீமானே, 'கட்சி ஆரம்பிப்பது எளிது. தொடர்வது கடினம்' என்று பதில் சொல்லி இருக்கிறார்.
விஜய்யைச் சீமான் தனியாகச் சந்தித்ததாக ஒரு தகவல் பரவிவருகிறது. என்னிடம் கூட திரைத்துறையினர் அப்படி ஒரு சந்திப்பு நடந்ததா? எனக் கேட்கிறார்கள். விஜய்யுடன் சந்திப்பு நடக்காமல் சீமான், 'மாநாட்டுக்கு அழைப்பு வந்தால் கலந்துகொள்வோம்' என்று சொல்ல வாய்ப்பு இல்லை.
இந்த மக்களவைத் தேர்தல் களத்தில் வடசென்னையில் விஜய் ரசிகர்கள் கொடுத்த பேட்டியைப் பார்த்தேன். அவர்கள், 'நாங்கள் விஜய்க்கு ரசிகர்கள். ஆனால், முதல்வராகச் சீமான் தான் வர வேண்டும்' என்கிறார்கள். இந்தச் செய்தி எல்லாம் விஜய் பார்வைக்குப் போகாமல் இருக்க வாய்ப்பு இல்லை.
விஜய்க்கு ஆக்டிவ் பாலிடிக்ஸ் மீது ஆர்வம் இருப்பதாகத் தெரியவில்லை. அது பற்றி சந்தேகம் உள்ளது. அதை தெளிவுபடுத்த வேண்டிய கடமை அவருக்கு உள்ளது.
'கோட்' படத்தில் மைக் படம் விஜய்க்குத் தெரியாமல் வெளியாக வாய்ப்பு இல்லை. அவர் அனுமதியோடுதான் சீமானின் மைக் படம் அச்சிடப்பட்டுள்ளது. வரும் 2026 தேர்தலில் 2 வாய்ப்புகள் விஜய் முன்னதாக உள்ளன. ஒன்று அவர் 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடுவது. அல்லது சீமானுடன் சேர்ந்து நிற்பது.

ஆனால், சீமானை விஜய் ஆதரித்துவிடக் கூடாது என அதிமுக தரப்புக் காய் நகர்த்தி வருகிறது. கடைசிக் கட்டத்தில் அதிமுக இன்னும் பெரிய பெரிய ஆள்களை தூது விடும். அதற்கான வாய்ப்புகள் அதிகம்.
ஒருபோதும் திமுக விஜய்யை தன் பக்கம் இழுக்கப் பார்க்காது. அதை எந்த வழியில் சமாளிக்க வேண்டும் என்பதை திமுகவுக்கு அறியும்.
இந்த யூகங்களை எல்லாம் கடந்து சீமான் 5வது முறையாகவும் தனித்துப் போட்டியிடுவார் என்பது எனது நம்பிக்கை. அவரது தொண்டர்களும் அதையே விரும்புகிறார்கள்" என்கிறார்
-
“ ஹோட்டல் சாப்பாடு நடிகையைப் போல”.. சிவகுமார் சொன்ன உவமை.. பின்னணியில் இப்படி ஒரு சம்பவம் இருக்கா? -
25 டூ 15.. சர்ரென சரிந்த சப்போர்ட்.. விஜய் கோட்டையில் விரிசல்? தவெக சர்வே சொல்லும் ‘ஷாக்’ ரிப்போர்ட் -
திமுக கூட்டணியில் 3 சீட் கேட்டுள்ளோம்.. உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம்- எஸ்டிபிஐ தலைவர் தகவல் -
NDA கூட்டணியில் தவெக இணைவதை தடுத்தது ஆதவ் அர்ஜுனா தான் - ஜோஸ் சார்லஸ் மார்ட்டின் பகீர் குற்றச்சாட்டு -
புதுவையில் தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு.. மாஜி பாஜக அமைச்சருக்கு சீட் கொடுத்த விஜய்.. முழு லிஸ்ட் -
"எம்ஜிஆர் போல இன்னொருவர் வர வாய்ப்பில்லை.." சிவகுமார் திட்டவட்டம்.. பாய்ந்து வரும் விஜய் ரசிகர்கள் -
மும்பை பயணம் முடிந்த கையோடு விஜய் எடுத்த முடிவு! புதுவை தவெக வேட்பாளர்கள் பட்டியல் நாளை ரிலீஸ் -
நீங்க நம்பலைனாலும் அதான் நெசம்.. மும்பைக்கு பறந்த விஜய்! பைனான்ஸ் செய்யும் அரசியல் புள்ளியின் வாரிசு -
பச்சை துண்டு போட்டு விஜய் கத்துனா விவசாயி ஆயிடுவாரா? சூட்டிங் வைத்து 50 பேரை கொன்னுட்டாரு! ஜூலி வீடியோ -
“திமுக தீயசக்தி”! கோஷம் போட்ட சிறுவர்கள்! த.வெ.க ராமநாதபுரம் மாவட்டச் செயலாளர் மீது பாய்ந்தது வழக்கு -
Election Exclusive: பரபர பனையூர்..சைலண்டாய் லிஸ்டை ரெடி செய்த விஜய்! பாதித் தொகுதி வேட்பாளர்கள் ரெடி? யார் யருக்கு சீட்? -
விஜயால் மது குடிக்காமல் இருக்க முடியாதா? யாரு சொன்னது? கண்முன்னே நடந்த சம்பவம்! சர்ச்சைக்கு அனு மோகன் பதிலடி












Click it and Unblock the Notifications