முகத்தை மறைத்தபடி விஜய் வீட்டிற்கு சென்றது யார்? பட்டினம்பாக்கத்தில் பரபரப்பு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை பட்டினம்பாக்கத்தில் உள்ள தவெக தலைவர் விஜய்யின் வீட்டிற்கு காரில் வந்த நபர் ஒருவர் முகத்தை மறைத்து கொண்டு சென்ற சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது. இதனால் முகத்தை மறைத்து கொண்டு சென்ற நபர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இதனால் தமிழக அரசியல் சூழல் மீண்டும் பரபரப்பாகி இருக்கிறது.

தமிழக சட்டசபைத் தேர்தலில் 108 இடங்களில் வென்றுள்ள தவெக, தமிழ்நாட்டில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக கூட்டணியில் இருந்த காங்கிரஸ் கட்சியும் திடீரென தவெக பக்கம் தாவி இருக்கிறது. இதனால் தவெக கூட்டணியின் எம்எல்ஏ-க்கள் பலம் 112ஆக உயர்ந்துள்ளது. தவெக பெரும்பான்மையை நிரூபிக்க இன்னும் 6 எம்எல்ஏ-க்கள் ஆதரவு அவசியம் என்ற நிலை உருவாகி இருக்கிறது.

Vijay

இதற்காக விசிக, சிபிஐ மற்றும் சிபிஎம் உள்ளிட்ட கட்சிகளிடம் ஆதரவு கோரி இருக்கிறது. இருப்பினும் தவெக ஆட்சி அமைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. விஜய் ஆட்சி அமைக்க ஆளுநர் 10ஆம் தேதி வரை நேரம் கொடுத்திருக்கிறார். அதற்குள் தவெக கூட்டணி பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. இதற்காக விஜய் தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

பட்டினம்பாக்கத்தில் உள்ள விஜய்யின் வீட்டில் ஏராளமானோர் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர். இன்று காலை புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் பட்டினம்பாக்கம் வீட்டிற்கு அழைத்து வரப்பட்டனர். இப்படியான சூழலில் திடீரென விஜய்யின் பட்டினம்பாக்கம் வீட்டிற்கு இன்னோவா கார் ஒன்று வந்தது. அந்த காரில் இருந்த நபர் ஒருவர் முகத்தை மறைத்துக் கொண்டு வீட்டிற்குள் சென்றுள்ளார்.

இதனால் விஜய் வீட்டிற்குள் முகத்தை மறைத்துக் கொண்டு சென்ற நபர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. அவர் அப்படி செய்ததன் பின்னணி குறித்தும் விவாதங்கள் எழுந்துள்ளன. வழக்கமாக தவெகவில் எந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டாலும் பட்டினம்பாக்கம் வீட்டில் வைத்து தான் எடுக்கப்படும். ஜான் ஆரோக்கியசாமி உள்ளிட்டோரும் பட்டினம்பாக்கம் வீட்டில் தான் ஆலோசனை மேற்கொள்வார்கள்.

செங்கோட்டையன் தவெகவில் இணைவதற்கு முன்பாகவும் பட்டினம்பாக்கம் இல்லத்தில் வைத்து விஜய்யுடன் ஆலோசனை மேற்கொண்டார். இதனால் தவெக அடுத்தக் கட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்தி இருப்பதாக பார்க்கப்படுகிறது. இருப்பினும் விஜய் வீட்டிற்குள் முகத்தை மறைத்துக் கொண்டு சென்ற நபர் யார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+