நெயில் பாலிஷ் மாதிரி 'மை' போட்டிருக்காங்க.. நல்லா இருக்குல்ல.. விஜய் சேதுபதி கலகல
Recommended Video
சென்னை: "எனக்கு நெயில் பாலிஷ் மாதிரி மை போட்டுவிட்டிருக்காங்க.. நல்லா இருக்கு" என்று வாக்களித்துவிட்டு வெளியே வந்த நடிகர் விஜய் சேதுபதி தனது கை விரலை காட்டி சிரித்தபடியே கூறினார்.
இன்று காலை முதலே பல்வேறு அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாக்குகளை கியூவில் நின்று செலுத்தி வருகின்றனர். அதன்படி நடிகர் விஜய சேதுபதியும் கோடம்பாக்கத்தில் உள்ள பூத்தில் தனது வாக்கை பதிவு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "முதல்முறையாக வாக்களிக்கும் அனைத்து வாக்காளர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உண்மையிலேயே இது ஒரு பெருமையான விஷயம்.

உரிமை
ஏன்னா.. 18 வயசில நம் வீட்டில் ஒரு முடிவை எடுக்க நம்ம கிட்ட கேட்பாங்களா இல்லையான்னு தெரியாது. ஆனா இந்த நாட்டில் நம்மை யார் ஆட்சி செய்யணும் என்று முடிவு செய்கிற ஒரு உரிமையை உங்க கிட்ட தந்திருக்காங்க.

நல்லது நடக்கும்
நானும் வாக்களித்துவிட்டேன். மத்தவங்க போலவே நல்லது நடக்கும்-ன்னு நம்பிக்கையில் காத்துக்கிட்டு இருக்கேன். நல்லது நடக்கும்னு.

அரசியல்
எப்படியும் இந்த முறை நிறைய வாக்குகள் பதிவாகும்ன்னு நினைக்கிறேன். ஏன்னா, மக்கள் மத்தியில் அரசியல் குறித்த விழிப்புணர்வு அதிகமாகி வருகிறது. ஒருத்தருக்கொருத்தர் அரசியல் பற்றி பேசிக்கிறாங்க.. வாட்ஸ் ஆப், மீம்ஸ் இது மாதிரி அரசியல் அறிவை வளர்த்து கொண்டுள்ளனர். இந்த விஷயத்தை நான் ரொம்பவே பாராட்டறேன்.

வழி தெரியல
நான்கூட வாட்ஸ்அப்பில் வாக்குப்பதிவு இயந்திரம் சம்பந்தமாக வரும் விஷயங்களை பார்த்து கொண்டுதான் இருக்கேன். அதுக்கு என்ன வழி சொல்றதுன்னு தெரியல. ஆனா இது இல்லாமல் இருந்தால் ரொம்ப நல்லா இருக்கும்" என்றார். முன்னதாக, பூத்துக்குள் நுழைந்த விஜய்சேதுபதியிடம் ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு செல்பிக்களை ஆசை தீர எடுத்துகொண்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications