முதல்வரின் தாயார் மறைவுக்கு விஜய் சேதுபதி நேரில் ஆறுதல்
சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் மறைவிற்கு விஜய் சேதுபதி நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தார்.
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தாயார் தவுசாயம்மாள் கடந்த சில தினங்களுக்கு முன் மாரடைப்பால் காலமானார். இவரது மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், ரஜினிகாந்த், தமிழக பாஜக தலைவர் எல் முருகன், தேமுதிக பொருளாளர் பிரேமலதா உள்ளிட்டோர் முதல்வரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினார்கள்.

தாயாரின் இறுதிச் சடங்குகள் சேலம் மாவட்டம் சிலுவம்பாளையத்தில் நடைபெற்றது. தாயார் மறைவுக்கு பிரதமர் மோடி, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உள்ளிட்டோரே இரங்கல் தெரிவித்தார்கள்.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக சேலத்தில் இருந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்றைய தினம் சென்னை திரும்பினார். இதையடுத்து கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்திற்கு சென்ற மு.க.ஸ்டாலின், நேரில் சந்தித்து முதல்வரின் தாயாரின் மறைவுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

இதையடுத்து நடிகர் விஜய் சேதுபதி 800 திரைப்படத்திலிருந்து விலகிய கையோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்திற்கு நேரில் சென்றார். அங்கு அவரது தாயின் உருவப்படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து முதல்வருடன் சற்று நேரம் அமர்ந்திருந்த விஜய் சேதுபதி அவருக்கு ஆறுதல் தெரிவித்துவிட்டு திரும்பினார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications