பேட் கேர்ள்..விஜய் சேதுபதி மகளை அப்படி செய்ய சொல்லுங்க! கமெண்டில் சைபர் அட்டாக்! பொங்கிய புரொடியூசர்
சென்னை: இயக்குனர் வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியாக இருக்கும் பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியாகி பலத்த விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் அந்த படத்தின் டீசரை பகிர்ந்த நடிகர் விஜய் சேதுபதியின் மகள் மீது சிலர் சைபர் அட்டாக் நடத்தியுள்ளனர். அவரது மகளின் புகைப்படத்தை வெளியிட்டு பேட் கேர்ள் படத்தில் வருவதைப் போல உங்கள் மகளையும் செய்ய சொல்லுங்கள் என நெட்டிசன்கள் சிலர் விமர்சித்து நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார் தயாரிப்பாளரான அருண் விஷ்வா.
அனுராக் காஷ்யாப், இயக்குனர் வெற்றிமாறன் இணைந்து கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி மூலம், பேட் கேர்ள் என்ற படத்தை தயாரித்துள்ளனர். வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய வர்ஷா பாரத் இப்படத்தை இயக்கியுள்ளார்.

அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டிஜே அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் ஆகியோ நடித்துள்ள இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. இயக்குனர் வெற்றிமாறன் உள்ளிட்டோர் நேற்று நடந்த விழாவில் வெளியிட்டனர்.
நடிகை அஞ்சலி சிவராமனை முதன்மை கதாபாத்திரமாக வைத்து இந்த படம் தயாரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இரண்டு நிமிடங்கள் இந்த டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. சுமார் ஒரு மில்லியன் பேர் இந்த டீசரை பார்த்திருக்கின்றனர். பள்ளிக் காலம் தொடங்கி இளமைக் காலம் வரை ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருக்கும், படிப்பு, தனிப்பட்ட வாழ்க்கை, பெற்றோர்களின் அழுத்தம் என பல்வேறு உணர்ச்சி குவியல்களுக்கு இடையே ஒரு பெண் எப்படி வாழ்கிறாள் என்பது குறித்து இந்த படம் விளக்கி இருப்பதாக கூறப்படுகிறது.
அதே நேரத்தில் சிறுவயதில் காதல் காமம் என குழப்பமான மன நிலையில் இருக்கும் பெண் அதனை கட்டுப்படுத்தாமல் சக மாணவ மாணவிகளுடன் வெளிப்படையாக பேசுவதாகவு,ம் நீ ப்ளூ ஃபிலிம் பார்ப்பாயா, மற்றும் செ*** வைத்துக் கொள்ள வேண்டும் என சக மாணவி பேசுவது போல காட்சி அமைப்புகள் இருக்கிறது. ஒருபுறம் பெண் சுதந்திரம் என பேசப் பட்டாலும், மறுபுறம் இந்த டீசர் கடும் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
இந்தப் படத்தின் டீசரை இயக்குனர் பா .ரஞ்சித், நடிகர் விஜய் சேதுபதி உள்ளிட்ட பலரும் பகிர்ந்திருந்தனர். அதே நேரத்தில் பிராமண பெண் குறித்து இழிவாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக பாஜக போர் கொடி தூக்கி இருக்கிறது. மேலும் படத்தை பாராட்டிய இயக்குனர் பா.ரஞ்சித்தை விமர்சித்திருக்கிறார் இயக்குனர் மோகன் ஜி.

இந்த நிலையில் படத்தின் டீசரால் சைபர் தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறார் நடிகர் விஜய் சேதுபதியின் மகள். பேட் கேர்ள் படத்தின் டீசரை விஜய் சேதுபதி பகிர்ந்திருந்தார். அந்த டீசரை பகிர்ந்துள்ள சிலர் "உங்கள் மகள் இதே மாதிரி செய்தால் புரியும்" என இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். மேலும் விஜய் சேதுபதி மற்றும் அவரது மகள் குறித்து ஆபாசமாகவும் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார் மாவீரன் படத்தின் தயாரிப்பாளரான அருண் விஷ்வா. இதுதொடர்பாக எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர்,"உங்களுக்கு டீசர் பிடிக்கவில்லை என்றால் அதைப்பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு எல்லா உரிமையும் இருக்கிறது. ஆனால் ஒருவரின் குடும்பத்தை பற்றி விமர்சனம் செய்ய உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை. அவர்களது குடும்ப புகைப்படத்தையும் பயன்படுத்தவும் உங்களுக்கு உரிமை இல்லை" என காட்டமாக விமர்சித்து இருக்கிறார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications