இனி நான் போக போற பாதை..’பாண்டி’ மாடலை டிக் செய்த விஜய்! பனையூர் கூட்டம் இதற்குத் தான்..வெளியான தகவல்
சென்னை: புதுச்சேரி பிரச்சாரம் வெற்றிகரமாக முடிந்த நிலையில் திடீரென அவசரமாக அதிமுக தமிழக வெற்றி கழகத்தின் நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் இன்று நடைபெற்றது. புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் இதில் பங்கேற்று இருக்கின்றனர். விஜயின் அடுத்த கட்ட பயணம் குறித்து திட்டமிடுவதற்காகவே இந்த கூட்டம் நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மக்கள் சந்திப்பு கூட்டங்களை தீவிர படுத்த தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார். இந்த நிலையில் கரூர் சம்பவத்தால் ஏற்பட்ட சிக்கலால் தமிழகத்தில் விஜயின் கூட்டத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரத்தில் உள்ள அரங்கில் மக்கள் சந்திப்பு நடைபெற்ற நிலையில் குறைந்தபட்ச மக்கள் மட்டுமே பங்கேற்க முடிந்தது. இந்திரலையில் புதுச்சேரியில் அனைத்து தொகுதி மக்களையும் சந்திக்கும் வகையில் ரோட் ஷோவுக்கு விஜய் திட்டமிட்டார். ஆனால் பல்வேறு பிரச்சனைகளை காரணம் காட்டி புதுச்சேரி அரசு அதற்கு அனுமதி அளிக்கவில்லை.

விஜய் அரசியல்
அதே நேரத்தில் உப்பளம் துறைமுகம் மைதானத்தில் விஜயின் பொதுக்கூட்டத்துக்கு அனுமதி வழங்கப்பட்டது. திட்டமிட்டபடி வெற்றிகரமாக புதுச்சேரி கூட்டத்தை முடித்திருக்கிறார் விஜய். இந்த நிலையில் புதுச்சேரி மாடலை வைத்து தமிழகத்திலும் விஜயின் கூட்டங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சார பயணம் போல் அல்லாமல், மாவட்ட அளவில் பிரம்மாண்டமான கல்லூரிகள், பள்ளிகள் மற்றும் விளையாட்டு மைதானங்களை தேர்ந்தெடுத்து அங்கு மேடை, சேர் உள்ளிட்டவற்றை அமைக்காமல் விஜய் மக்களை சந்திக்க திட்டம் வகுத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
தமிழக வெற்றிக் கழகம்
இந்த நிலையில் இன்று பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் அலுவலகத்தில் மாவட்ட, மாநில நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விஜய் இதில் கலந்து கொள்ளாத நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த் மற்றும் நிர்வாகிகளான ஆதவ் அர்ஜுனா, அருண் ராஜ், சிடிஆர் நிர்மல் குமார், செங்கோட்டையன் நாஞ்சில் சம்பத் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
பனையூர் கூட்டம்
அதில் விஜய் மக்கள் சந்திப்பு பயணங்களை தீவிரப்படுத்துவது, அடுத்தடுத்து பயணங்கள் மேற்கொள்ள உள்ள மாவட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் திமுக அதிமுக போல தொடர்ந்து மாவட்ட அளவிலான கொள்கை விளக்கப் பிரச்சார பொதுக்கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் மாவட்ட ரீதியாக விஜயின் மக்கள் சந்திப்பு முடிவடைந்ததும் தொகுதி வாரியாக விஜய் பிரச்சாரம் மேற்கொள்ள இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
பாண்டி மாடல்
தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து தமிழக முழுவதும் விஜய் பிரச்சாரம் மேற்கொள்ளும் வகையில் இந்த பயணம் வடிவமைக்கப்பட உள்ளது. இதற்காகவே முக்கியமாக இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. மேலும் தமிழகத்தின் பிரதான கட்சிகள் அனைத்தும் விருப்ப மனு பெற்று வரும் நிலையில் 2026 தேர்தலை ஒட்டி தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகளிடம் விருப்ப மனு பெறவும் திட்டமிடப்பட்டிருக்கிறது.
கூட்டணி பேச்சு
அதிமுக அதிமுக கூட கூட்டணி பேச்சுவார்த்தைகளை துவக்கி வைத்த நிலையில் இதுவரை தமிழக வெற்றி கழகத்தில் எந்த கட்சியும் அதிகாரப்பூர்வமாக கூட்டணியில் சேரவில்லை. இதை அடுத்து எந்த கட்சிகளுடன் கூட்டணி சேரலாம் என்பது குறித்தும் விஜய் அறிவுறுத்தலின் பேரில் மாவட்ட நிர்வாகிகளிடம் கருத்துக்கள் கேட்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஜனவரி மாதத்தில் பிரச்சாரம் தொடர்பான முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும், பிப்ரவரிக்கு உள்ளாக கூட்டணி தொடர்பான அறிவிப்புகள் வெளியாகும் என்கின்றனர் இன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட தமிழக வெற்றிக் கழகத்தினர்.












Click it and Unblock the Notifications