"சினிமா மோகத்தை விட்டு விஜய் அரசியல்வாதி ஆகணும்”.. பழ.கருப்பையா பேட்டி
சென்னை: "பெரும் கூட்டத்தைத் திரட்டவேண்டும் என சினிமா நடிகர்கள் நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பிம்பம் கட்டுகிற முயற்சி முக்கியம். சினிமா மோகத்தை விட்டுவிடு விஜய் அரசியல்வாதியாக வேண்டும்." என பழ.கருப்பையா நமது ஒன் இந்தியா தமிழுக்கு அளித்துள்ள பிரத்யேக பேட்டியில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கி, அரசியல் களத்தில் இறங்கிவிட்டார். வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடுகிறது. இதையொட்டி கடந்த சில வாரங்களாக மக்கள் சந்திப்புகளை நடத்தி வருகிறார். கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் தவெக பிரச்சாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகினர். இந்தச் சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

விஜய் பிரச்சாரக் கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் அரசியல் அரங்கில் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், இதுகுறித்து தமிழ்நாடு தன்னுரிமை கழகத்தின் தலைவர் பழ.கருப்பையா நமது ஒன் இந்தியா தமிழுக்கு பிரத்யேக பேட்டி அளித்துள்ளார்.
பழ.கருப்பையா பேசுகையில், "கரூரில் சம்பவம் நடந்ததுமே, களத்தில் இருந்து காயம்பட்டவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது உள்ளிட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால் அவர் மீதான பேச்சுகள் குறைந்திருக்கும். பலவீனம் என்னவென்றால் பெரும் கூட்டத்தைத் திரட்டவேண்டும் என சினிமா நடிகர்கள் நினைப்பார்கள். அவர்களுக்கு இந்த பிம்பம் கட்டுகிற முயற்சி முக்கியம். தங்களைப் பற்றி அதிகம் பேசப்பட வேண்டும், கூட்டம் திரள வேண்டும் என்று நினைப்பார்கள்.
70 எம்.எம் திரையில் பார்க்கிற மனிதன், நூறு பேரை அடிக்கிற மனிதனை நேரில் பார்க்க வேண்டும் என்கிற மோகம் மக்களிடையே இருக்கிறது. அறியாமையில் தான் மக்கள் 1 வயது குழந்தையை விஜய்யை பார்க்க கூட்டத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். அடித்தட்டு மக்களுக்கு அவர்களைப் பார்ப்பதெல்லாம் சாதனையாக இருக்கிறது.
விஜய் தான் மக்களிடம் பேச வேண்டும். விஜய் பேசும்போது விசில் அடித்துக் கொண்டே இருக்கிறார்கள். இதை அவரே சொல்ல வேண்டும். ஏன் தந்திக் கம்பத்தில் ஏறுகிறீர்கள்? மரத்தில் ஏறுகிறீர்கள் என தலைவனாக சொல்ல வேண்டும். சினிமா மோகத்தை விட்டுவிடு விஜய் அரசியல்வாதியாக வேண்டும்." எனத் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications