இடதுசாரிகளை கூப்பிடாத விஜய்.. “கடிதம் எதுவும் வரவில்லையே!” ஓபனாக பேசிய சிபிஎம்!
சென்னை: விஜய்யிடமிருந்து ஆதரவு கேட்டு கடிதம் வந்திருப்பதாக திருமாவளவன் கூறியிருந்தார். இடதுசாரி கட்சிகளுக்கும் கடிதம் சென்றிருப்பதாக தெரிவித்திருந்தார். ஆனால், அப்படி எதுவும் வரவில்லை என தற்போது சிபிஎம் கூறியிருக்கிறது.
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் விஜய் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றிருந்தார். அவரது கட்சி 108 தொகுதிகளில் ஜெயித்திருந்தது. ஆனால், ஆட்சி அமைக்க 118 எம்எல்ஏக்கள் தேவை.

இந்நிலையில், கூட்டணியில் சேர காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகளுக்கு விஜய் அழைப்பு விடுத்திருந்தார். காங்கிரஸ் இந்த அழைப்பை ஏற்று நேற்று பரிசீலனை செய்திருந்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைமை, இந்த விவகாரம் குறித்து நீங்களே முடிவெடுத்துக்கொள்ளுங்கள் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டியிடம் ஒப்படைத்துவிட்டது.
இன்று காலை விஜய்யின் பனையூர் அலுவலகத்திற்கு சென்ற தமிழக காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள், விஜய்க்கு ஆதரவு தெரிவிப்பதாக அறிவித்தனர். காங்கிரஸின் 5 எம்எல்ஏக்களை சேர்த்தால், தவெகவின் பலம் 113 என உயர்ந்திருக்கிறது. இருப்பினும் விஜய் வெற்றி பெற்ற 2 தொகுதிகளில் ஒன்று ராஜினாமா செய்ய வேண்டும். எனவே 112 என பலம் இருக்கிறது.
இன்னும் 6 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. விசிக, சிபிஐ, சிபிஎம் ஆகிய கட்சிகள் தலா 2 எம்எல்ஏக்களை வைத்திருக்கின்றனர். இதை சேர்த்தால் தவெகவுக்கு தேவையான பலம் கிடைத்துவிடும். எனவே இந்த கட்சிகளை தவெக விரைவில் நாடும் என்று சொல்லப்பட்டது.
அதன்படி விசிகவுக்கு தவெக ஆதரவு கேட்டு கடிதம் எழுதியிருக்கிறது. அதை திருமாவளவன் உறுதி செய்திருக்கிறார். இடதுசாரி கட்சிகளுக்கும் கடிதம் எழுதப்பட்டிருப்பதாக அவர் கூறியிருந்தார். இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சிபிஎம் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், ஆதரவு கேட்டு விஜய் தரப்பிலிருந்து எந்த கடிதமும் வரவில்லை என்று கூறிவிட்டார்.
இது விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கிரஸை அழைத்த விஜய், பாமகவை கூப்பிட்டு ஆட்சி அமைக்கலாம் என்று கனவு காண்கிறாரோ? என்கிற கேள்வியையும் எழுப்பியிருந்தது. இது தவிர அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியையும் தவெக தரப்பு சந்தித்திருந்தது. அப்படியெனில் அதிமுக தவெக உடன் கூட்டணிக்கு போகிறதா? என்றும் கேள்வி எழுந்தது.
இடதுசாரிகளை சேர்த்துக்கொண்டால், அவர்கள் சொல்லும்படி ஆட்சி நடத்த வேண்டி இருக்கும். மக்கள் நலத்திட்டங்களை கறாராக அமல்படுத்த வேண்டி இருக்கும். இல்லையெனில் ஆதரவை வாபஸ் பெற்றுவிடுவார்கள். அவ்வளவு ரிஸ்க் எடுத்து இடதுசாரிகளை சேர்த்துக்கொள்ள வேண்டுமா? என்று தவெக யோசித்துதான், கடிதம் அனுப்பாமல் இருந்திருக்கலாம் என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
-
பல்கலைக்கழக வேந்தராக ஆளுநரா? அமைச்சர் விஸ்வநாதன் மீது பொன்முடி விமர்சனம் -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
விஜய்க்கு சிக்கல்? எம்எல்ஏக்கள் ராஜினாமாவை விசாரிக்கும் சிபிஐ- அமலாக்கத்துறை? அதிமுக எம்பி ஐடியா -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
அதிமுகவுக்கு ஆப்படித்த 4 பேர்.. தவெக காலத்தில் சான்ஸ் தரக் கூடாது! திடீரென குரல் கொடுத்த சரத்குமார்! -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
தவெகவுக்கு தாவிய இசக்கி சுப்பையா.. அம்பை தொகுதியில் எதிர்க்கட்சியே இல்லை! மக்கள் டென்ஷன்! -
திருமாவளவன் ஆர்எஸ்எஸின் பேரப்பிள்ளை.. தவெகவில் நடப்பது கழுதை பேரம்.. வளைத்து வளைத்து அடித்த பொன்னார் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்.. தவெகவில் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்.. 2016 -இல் திருச்சி கிழக்கில் வெற்றி பெற்றவர் -
தவெகவில் இணைய திட்டமா? ஆதரவாளர்களுடன் ஆலோசித்த பின் விஜயபாஸ்கர் சொன்ன பதில்











Click it and Unblock the Notifications