Trisha: விஜய் பாட்டு பின்னணியில் ஓட.. காரில் இருந்து திரிஷா போட்ட பதிவு! இணையத்தில் தீயாய் பரவும் போட்டோ
சென்னை: நடிகை திரிஷா சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார். வாக்களித்த பிறகு தனது இன்ஸ்டாகிராமில் திரிஷா புகைப்படம் ஒன்றை வெளியிட்டார். அந்த புகைப்படத்திற்கு பின்னணியில் கில்லி படத்தின் அர்ஜுனரு வில்லு பாட்டின் பின்னணி இசையை ஒலிக்கவிட்டுள்ளார். திரிஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வந்து வாக்களித்து வருகிறார்கள்.

சென்னையில் வாக்களித்தார் திரிஷா
அந்த வகையில், நடிகை திரிஷா இன்று காலை 11 மணியளவில் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் பிரான்சிஸ் மேல்நிலைப் பள்ளி வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களித்தார். திரிஷா காரில் வந்து இறங்கியதும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டனர். இதனால் ரசிகர்கள் கூட்டத்தில் திரிஷா சிக்கினார். வாக்குச்சாவடி மையத்துக்குள் செல்ல வழி கிடைக்காமல் திரிஷா திணறினார்.
சிறிது நேரம் அவர் வெயிலிலேயே நின்று கொண்டிருந்தார். ரசிகர்கள் தங்களின் செல்போனில் திரிஷாவை படம் எடுத்துக்கொண்டிருந்தனர். திரிஷாவுடன் வந்த தனியார் பாதுகாவலர்கள், ரசிகர்களிடம் வழி விடுமாறு கூறி திரிஷாவை வாக்குச் சாவடி மையத்துக்குள் அழைத்து சென்றனர். வாக்களிக்க சென்ற திரிஷாவிடம், இந்த தேர்தலில் மாற்றம் இருக்குமா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
விஜய்யின் கில்லி பட பாடல்
அந்த கேள்விக்கு பதில் அளிக்காமல் திரிஷா வாக்குச்சாவடி மையத்துக்குள் சென்று வாக்களித்தார். பின்னர் அடையாள மை வைக்கப்பட்ட விரலை உயர்த்தி காண்பித்தார். பின்னர் திரிஷா வெளியே வந்தபோது, 'மாற்றத்தை எதிர்பார்த்து வாக்களித்தீர்களா?' என்று செய்தியாளர்கள் மீண்டும் கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதில் அளித்த திரிஷா, 'கண்டிப்பாக போய் ஓட்டு போடுங்கள். இன்றைக்கு அதை மட்டும் தான் சொல்வேன்' என்று கூறினார்.
பின்னர் அவர் அங்கிருந்து புறப்பட்டு சென்றார். இதற்கு பிறகு தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் வாக்களித்ததற்கு அடையாளமாக தனது ஆள்காட்டி விரலை காட்டியபடி இருக்கும் புகைப்படம் ஒன்றை திரிஷா பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்திற்கு பின்னணியில், கில்லி படத்தில் இடம் பெற்ற அர்ஜுனரு வில்லு படத்தின் பாடலின் ரிங்டோனை ஒலிக்க விட்டுள்ளார். இணையத்தில் திரிஷாவின் இந்த வீடியோ பதிவு வைரலாகி வருகிறது.
விஜய் சங்கீதா விவாகரத்து
விஜய்யிடம் இருந்து அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கோரியிருந்தார். அந்த விவாகரத்து மனுவில் விஜய்க்கு நடிகை ஒருவருடன் திருமணம் தாண்டிய உறவு இருப்பதாக குற்றம் சாட்டியிருந்தார். இதற்கு பிறகு நடைபெற்ற திருமண நிகழ்ச்சி ஒன்றில் விஜய் - தன்னுடன் பல படங்களில் ஒன்றாக நடித்த திரிஷாவை உடன் அழைத்து வந்து இருந்தார்.
விஜய் - திரிஷா திருமண நிகழ்ச்சியில் ஒரே காரில் வந்து பங்கேற்று இருந்தனர். விஜய் - திரிஷா ஒன்றாக திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றது இணையத்தில் தீயாய் பரவி பெரும் பேசுபொருளானது. இந்த சூழலில்தான், திரிஷா விஜய்யுடன் ஜோடி சேர்ந்து நடித்து இருந்த கில்லி பட பாடலை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்து இருப்பது கவனம் பெற்றுள்ளது.
-
1.5 டிரில்லியன் டாலர் இலக்கு.. ஸ்டாலின் வைத்த டார்கெட்டை உயர்த்திய விஜய்.. மோடியிடம் சொன்னது என்ன? -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
திருக்குறளை தேசிய நூலாக அறிவிக்க வேண்டும்.. நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வலியுறுத்தல்! -
கோவைக்கு எய்ம்ஸ் தேவை! நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் விஜய் வைத்த கோரிக்கைகள் என்ன? -
ராமதாஸின் விஸ்வாசிக்கு வலைவீசும் விஜய்.. தவெகவில் இணையும் அதிமுக மாஜி அமைச்சர் செல்லப்பாண்டியன்? -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
யாரு ஹீரோ? விஜய் Vs உதய்! பட்ஜெட் கூட்டத்தில் பட்டைய கிளப்புவது யார்? பரபரப்பாய் ரெடியாகும் லிஸ்ட்! -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை வழங்கப்படும்.. முதல்வர் விஜய் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications