விஜய் பேசியதை முழுமையாக கவனிச்சீங்களா.. தலைவா! இது அதுல்ல.. அன்று ரஜினி பேசியது இன்று அப்படியே!
சென்னை: அன்று நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசியதை இன்று அப்படியே நடிகர் விஜய் கல்வி உதவி தொகை வழங்கும் விழாவில் பேசி உள்ளார். அப்படி என்ன பேசினார் என்பதை இப்போது பார்ப்போம்.
தமிழகத்தில் 2023ஆம் ஆண்டு நடைபெற்ற 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களுக்கு நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் சார்பில் சான்றிதழ் மற்றும் ஊக்கப் பரிசு வழங்கும் நிகழ்வு சென்னை நீலாங்கரையில் நடந்தது.

நடிகர் விஜய் விழா மேடையில் பேசும் போது வழக்கம் போல் "என் நெஞ்சில் குடியிருக்கும்" என பேச்சைத் தொடங்கினார். அத்துடன் "நிறைய இசை வெளியீட்டு விழா மேடைகளில் நான் பேசியுள்ளேன். ஆனால், இந்த மாதிரியான மேடைகளில் நான் பேசியதில்லை. ஏதோ, மனதில் புதிய பொறுப்புணர்ச்சி வந்த மாதிரி இருக்குது.
வருங்கால இந்தியாவின் இளம் நட்சத்திரங்களாகிய உங்களை (மாணவர்கள்) சந்திப்பதில் எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கு. உங்களை பார்க்கும் போது எனக்கு என்னுடைய பள்ளிப் பருவ காலங்கள்தான் நியாபகத்தில் வந்து போகிறது. நான் ஒரு ஜஸ்ட் பாஸ் மாணவன் மட்டுமே. என்னுடைய கனவு சினிமாதான் என்றார்.
அத்துடன் அசுரன் படத்தில் தனுஷ் பேசுவாரே, "காடு இருந்தா எடுத்துகிடுவானுவ, ரூவா இருந்தா புடிங்கிடுவானுவ, ,ஆனா படிப்ப மட்டும் உன்கிட்ட இருந்து எடுத்துகிடவே முடியாது சிதம்பரம்!!" என்று அந்த வசனத்தை நடிகர் விஜய் மாணவர்கள் முன்னிலையில் பேசினார். இதனை பார்த்து மாணவர்கள் உற்சாகத்துடன் குரல் எழுப்பி ஆரவாரம் செய்தனர்.
தொடர்ந்து பல்வேறு விஷயங்களை பேசிய விஜய், அதோடு, அம்பேத்கர், பெரியார் மற்றும் காமராஜர் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் நீங்கள்தான் (மாணவர்கள்) நாளைய வாக்காளர்கள். அடுத்தடுத்து புதிய நல்ல நல்ல தலைவர்களை நீங்கள்தான் தேர்ந்தெடுக்க உள்ளீர்கள். பணம் வாங்கிவிட்டு வாக்களிப்பது என்பது, நமது கண்களை நாமே குத்திக் கொள்வது போன்றுதான் என்று எச்சரித்தார்.
ஒருவர் ஒரு வாக்குக்காக ஆயிரம் ரூபாய் கொடுக்கிறார் என வைத்துக்கொள்வோம். ஒரு தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவழித்தால், அந்த அரசியல்வாதி அதற்கு முன்னாள் எவ்வளவு சம்பாதித்திருக்க வேண்டும்? என்று விஜய் கேள்வி எழுப்பினார். மேலும் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவரும் தங்களது பெற்றோரிடத்தில், இனி பணம் வாங்கிக் கொண்டு வாக்கு அளிக்காதீர்கள் என கூறிப் பாருங்கள். நீங்கள் சொன்னால் அது நிச்சயமாக நடைபெறும் என்று அறிவுறுத்தினார்.
விஜய் மேடையில் பேசும் போது அன்று நடிகர் ரஜினிகாந்த் விழா ஒன்றில் பேசியதை இன்று அப்படியே எதார்த்தமாக பேசினார். ரஜினி ஒருமுறை மேடையில் பேசும் போது, ஒருவர் தான் சம்பாதித்த பணத்தை தொலைத்தால் அது பெரிய இழப்பு அல்ல. ஒருவர் உடல் நலத்தை தொலைத்தால் அது ஓரளவு இழப்பு தான், ஆனால் ஒருவர் கேரக்டரை (குணத்தை) தொலைத்தால் எல்லாம் போய்விடும் என்று ரஜினி ஆங்கிலத்தில் கூறியிருப்பார்,. அதை அப்படியே கொஞ்சம் கூட மாறாமல் விஜய் மாணவர்கள் முன்பு பேசினார். ரஜினி மற்றும் விஜய் பேசிய பேச்சுக்களை இணைத்து பலரும் சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications