வேட்டையன் படம் பார்க்க தேவி தியேட்டருக்கு மாறுவேடத்தில் வந்த நடிகர் விஜய்! இது அந்த கெட்டப்பாச்சே!
சென்னை: சென்னை அண்ணா சாலையில் உள்ள தேவி திரையரங்கிற்கு நடிகர் விஜய் வேட்டையன் திரைப்படம் பார்ப்பதற்காக வந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் படம் இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ஞானவேல் இயக்கியுள்ள இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இந்த படத்தில் பகத் பாசில், அமிதாப் பச்சன், அபிராமி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் மனசிலாயோ பாடல் படம் ரிலீஸுக்கு முன்பே பட்டித்தொட்டி எங்கும் பரவியது. இந்த பாடல் இல்லாத ரீல்ஸே இல்லை எனலாம். அது போல் இந்த பாடல் இல்லாமல் இந்த ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டமும் முடிவடையாது.
இந்த நிலையில் இன்று உலகமெங்கும் படம் வெளியான நிலையில் தியேட்டரின் முன்பு ரசிகர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் ரஜினியின் கட் அவுட்டிற்கு பாலாபிஷேகம் செய்தும் மகிழ்ச்சி அடைந்தனர். ரசிகர்கள் மட்டுமில்லாமல் திரை பிரபலங்களும் படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
அந்த வகையில் காலை 9 மணிக்கு வேட்டையன் படத்தின் முதல் காட்சி சென்னையில் உள்ள ரோகிணி தியேட்டரில் தனுஷ் கண்டு களித்தார். அது போல் இசையமைப்பாளர் அனிருத்தும் தனுஷுடன் படம் பார்த்தார். இந்த நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் வேட்டையன் படத்தை பார்த்தார்.
அவர் அண்ணா சாலையில் உள்ள தேவி தியேட்டரில் வேட்டையன் படத்தை கண்டு மகிழ்ந்தார். விஜய் தலையில் தொப்பி அணிந்து கொண்டு, முகத்தில் முகமூடி போட்டுக் கொண்டு வந்திருந்தார். அவர் சினிமா பார்த்துவிட்டு காரில் ஏறிச் சென்ற காட்சிகள் வைரலாகி வருகிறது.
இதே போல் கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த ஜல்லிக்கட்டுவுக்கு ஆதரவான போராட்டத்தின் போதும் மெரினாவில் மக்களோடு மக்களாக கலந்து கொண்டு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். இதே போல் முகத்தை கைக்குட்டையால் மூடியவாறு அவர் வந்திருந்தார். ஆனால் அப்போது தொப்பி அணிந்திருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
இது மட்டும் நடந்தால்..அடுத்ததும் விஜய் தான் சிஎம்! மகளிருக்கு மாதம் ரூ.2,500.. கோட்டையில் பரபர ப்ளான் -
சிரிக்க கூட முடியாத அளவிற்கு.. அப்செட்டான விஜய்.. மனசை குடையும் 2 விஷயங்கள்! என்ன நடந்தது? -
ஒரு மாதத்தில் சிதைந்த விஜய்யின் 'ஒற்றை அதிகார மையம்' உறுதி? ஐஏஎஸ் அதிகாரிகளே புதிய பவர் சென்டர்? -
ரிப்போர்ட்டில் ஷாக் விஷயமே இதுதான்.. வெள்ளை அறிக்கையில் நிதியமைச்சர் வில்சன் அதிர்ச்சித் தகவல்! -
இவ்வளவு பெரிய விஷயமா! அதிமுக கூடாரத்தை விஜய் காலி செய்வதற்குப் பின்னால் இருக்கும் மாஸ்டர் பிளான்! -
விஜய் உடன் Cognizant அதிகாரிகள் திடீர் சந்திப்பு.. தலைமைச் செயலகத்தில் நடந்தது என்ன? -
தமிழ்நாட்டின் வருவாயில் 64.4% இந்த 3 விஷயத்திற்கு மட்டுமே செலவாகிறது.. அப்படி என்ன அது? -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய்.. எந்த வகையிலும் நியாயமற்ற அணுகுமுறை.. ஏன்? -
தமிழ்நாட்டுல இவ்வளவு பாலியல் வன்கொடுமை நடக்குது.. எங்கயா அந்த சிங்கப்பெண் படை.. தெறிக்கும் மீம்ஸ்! -
திமுக ஆட்சியில் தேவையில்லாத திட்டங்கள் எதுவுமில்லை.. அமைச்சர் மரிய வில்சன் சொன்ன வார்த்தை! -
2500 ரூபாய் மகளிர் உரிமை தொகை.. சட்டசபையில் விஜய் வெளியிடுவாரா.. அமைச்சர் வன்னியரசு பேட்டி -
4 சீட்டர் சோபா இல்லை.. இப்போது 5 சீட்டர் சோபா... விஜய் விஜய்பாஸ்கரை விமர்சித்த உதயநிதி












Click it and Unblock the Notifications