Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பல உயிர் போய் இருக்கு! விஜய் கைது? திட்டவட்டமாக ஸ்டாலின் எடுத்த முடிவு.. அதிரும் கோட்டை!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கரூர் தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் 41 பேர் பலியான சம்பவம் நாட்டையே உலுக்கி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக விஜய் மீது கடுமையான புகார்கள், விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தமிழக அரசின் நிலைப்பாடு தொடர்பாக சில தகவல்கள் வெளியாகி உள்ளன.

கரூர் கொடூரத்தை சில தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் அரசு பக்கம் திருப்ப தீவிரமாக முயன்று கொண்டு இருக்கிறார்கள். முக்கியமாக அரசு போதிய இடம் கொடுக்கவில்லை, கேட்ட இடத்தை தரவில்லை, போலீஸ் பாதுகாப்பை தரவில்லை, அரசு மின்சாரத்தை நிறுத்திவிட்டது என்றெல்லாம் பொய்யான செய்திகளை பரப்பினார்கள்.

இதை எல்லாம் போலீசாரை வைத்து உடனுக்குடன் தமிழக அரசு மறுத்து வருகிறது. டாப் போலீஸ் அதிகாரிகளை வைத்து தவெக பரப்பிய தவறான தகவல்களை ஆளும் திமுக மறுத்து வருகிறது.

Vijay Stalin s Major decision against Vijay on Karur Tamilaga Vetri Kazhagam stampede

டிஜிபி வெங்கட்ராமன் விளக்கம்

இந்த சம்பவத்தை தொடர்ந்து காவல்துறை சார்பில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. உடனடியாக சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தலைமையில் மூன்று ஐஜிகல் இரண்டு டிஐஜிக்கல் 10 எஸ்பிக்கள் உட்பட 2000 போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் கூட்டங்களை மனதில் வைத்துக் கொண்டுதான் அவர்கள் கூறியதை விட கூட்டம் அதிகமா வந்ததை மனதில் வைத்துக் கொண்டுதான் தற்போது கரூரில் பெரிய இடம் அவர்கள் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் ஒதுக்கப்பட்டது.

இதே இடத்தில் மாநில அளவில் ஒரு பெரிய கட்சி பரப்பரை செய்துள்ளது. பத்தாயிரம் பேர் வருவார்கள் என எதிர்பார்த்த நிலையில் 27 ஆயிரம் பேர் கூடி உள்ளனர். விஜய் பிரச்சாரம் நடத்திய இடத்தில் 500 காவல் துறையினர் பாதுகாப்பில் இருந்தனர்.

முக்கியமாக குறிப்பிட விஷயம் என்னவென்றால் மதியம் மூன்று, இரவு 10 மணி வரை மட்டுமே அனுமதி கோரப்பட்டது. ஆனால் காலை 11 மணியிலிருந்து சேர்ந்த கூட்டம் விஜய் இரவு 7:40க்கு தான் அந்த இடத்திற்கு வந்து சேர்ந்தார். அதுவரை அங்கு சேர்ந்த கூட்டத்திற்கு போதுமான தண்ணீர் உணவு வழங்கப்படவில்லை. இதுதான் உண்மை.

கூட்டம் அவரை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கிறது. விஜய் அவர்களே காவல்துறையை பாராட்டினார். கத்தி தொண்டர்கள் முறையாக கூட்டத்தை ஒழுங்கு படுத்த வேண்டும் என்று நாம் முன்னரே அவர்களுக்கு நிபந்தனை விதிக்கிறோம்.

ஆனால் 27 ஆயிரம் கூட்டத்திற்கு எதிர்பார்த்து காவல்துறையினரை நியமிக்க வேண்டும் என்ற அர்த்தம் கிடையாது. இந்த துயரமான சம்பவம் எதனால் நடந்தது என்பது விசாரணை கூறியது அதற்கான விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதால் அது பற்றி தற்போது பேச முடியாது என தெரிவித்தார்.

டேவிட்சன் விளக்கம்

சட்டம் ஒழுங்கு பொறுப்பு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் கொடுத்தார். அதில், தமிழக வெற்றிக் கழகம் தரப்பில் செப்டம்பர் 23ஆம் தேதி லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரம் மேற்கொள்ள அனுமதி கோரினர். அது மிகவும் ஆபத்தான இடம்.

ஏனென்றால் ஒரு பக்கம் பெரிய பெட்ரோல் பங்க், மற்றொரு பக்கம் அமராவதி ஆறு, பாலம் உள்ளது. அங்கு இவ்வளவு பெரிய கூட்டத்தை வைத்து நிகழ்ச்சி நடத்த முடியாது என்று தவெகவினரிடமே விளக்கினோம். இதன்பின் அவர்கள் கேட்ட உழவர் சந்தை பகுதியில் அனுமதி கோரினர். ஆனால் அது மிகவும் குறுகலான இடம்.

அதனால் தான், அண்மையில் மற்றொரு கட்சி 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் வரை கூட்டி கூட்டம் நடத்திய வேலுச்சாமிபுரத்தை பரிந்துரைத்தோம். அதனை ஏற்றுக் கொண்டு தவெகவினரும் மனு கொடுத்து அந்த இடத்தில் பரப்புரைக்கு அனுமதி பெற்றனர். அதேபோல் காவல்துறை எண்ணிக்கை குறைவாக இருந்ததா என்று கேள்விகள் எழுந்துள்ளது. அதாவது போலீஸ் பாதுகாப்பு அளிக்கையில் 3 வகையாக பிரிப்போம்.

கல்வீச்சு சம்பவம் இருந்ததாக கூறுகிறார்கள். ஆனால் விஜய் பரப்புரையின் போது கல்வீச்சு சம்பவம் எதுவும் நடைபெறவில்லை. தவெக தலைவர் விஜய் கரூர் ரவுண்டானா வருவதற்கு 2 மணி நேரம் தாமதம் ஏற்பட்டது. நாமக்கல்லிலேயே தாமதம் ஏற்பட்டிருக்கிறது. கரூர் மாவட்டத்திற்கு வரும் போது 6 மணியாகிவிட்டது. விஜய் கண்ணாடி திரையை இறக்கியதால், விஜய்யை பார்க்க மக்கள் ஆர்வமாகிவிட்டனர். அவருடன் செல்ல தொடங்கிவிட்டார்கள்.

இதனால் இரு பக்கங்களில் இருந்தும் மக்கள் கூட்டம் வந்துள்ளது. காயமடைந்தவர்களை ஆம்புலன்ஸில் இருந்து அழைத்து வரவே முடியவில்லை. ஒரு நிகழ்ச்சி நடக்கிறதென்றால், அவர்களின் ஒத்துழைப்பும் நமக்கு தேவை. கரூர் டிஎஸ்பி தான் விஜய் குழுவுடன் பேசி அழைத்து வந்துள்ளார். விஜய் பேசும் இடத்தை மாற்றக் கோரிய போதும், அவர்கள் ஏற்கவில்லை, என்று கூறி உள்ளார்.

கரூர் வழக்கு பதிவு

இந்த கரூர் விவகாரத்தில் புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. TNPPDL சட்டம் உட்பட பல்வேறு பிரிவுகள் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

கரூர் நகர காவல் நிலையத்தில் புஸ்ஸி ஆனந்த், சி.டி. நிர்மல் குமார் உள்ளிட்ட நால்வருக்கு (மற்றும் சிலர்) எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதன்மையான நபர்களாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் (A1), புஸ்ஸி ஆனந்த் (A2), நிர்மல் குமார் (A3) மற்றும் மற்ற நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீது இந்தியாவின் புதிய குற்றவியல் சட்டமான BNS (Bharatiya Nyaya Sanhita) பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொது சொத்துக்கள் சேதத்தை தடுக்கும் சட்டம் (TNPPDL Act) பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது:

BNS பிரிவு 105 - கொலைக்கு சமமல்லாத குற்றமற்ற கொலைக்கான தண்டனை

BNS பிரிவு 110 - குற்றமற்ற கொலை செய்ய முயற்சி

BNS பிரிவு 125(b) - மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அவசர அல்லது அலட்சிய செயல்கள்

BNS பிரிவு 223 - பொது அதிகாரியின் உத்தரவுக்குக் கீழ்ப்படியாமை

TNPPDL Act பிரிவு 3 - பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல்

இதனிடையே, சம்பவம் தொடர்பான உயர் அதிகாரிகள் விசாரணை போலீசால் மேற்கொள்ளப்படுகிறது.

ஸ்டாலின் உறுதி

இந்த விவகாரத்தில் ஸ்டாலின் உறுதியாக சில நிலைப்பாட்டை எடுத்துள்ளாராம். இந்த விவகாரத்தில் முறைப்படி பார்த்தால் விஜய் செய்த தவறுகளுக்காக அவரை கைது செய்திருக்க வேண்டும். ஆனால் அவரை கைது செய்தால் இதையே வைத்து அரசியல் செய்வார்கள். அதை ஏற்க முடியாது. அதனால் வழக்கு நடக்கட்டும்.

ஏற்கனவே மாநாட்டை நிறுத்த வேண்டும் என்று ஒரு வழக்கு நடக்கிறது. இன்னொரு பக்கம் விஜய் சார்பாகவே தனி விசாரணை கேட்டு வாழைக்கு போட்டுள்ளனர். அதில் உத்தரவு வரட்டும். மக்கள் பலியாகி உள்ளனர். கோர்ட் விஜயை கைது செய்ய சொன்னாலும் கூட சொல்லட்டும். நாம் நடவடிக்கை எடுப்போம்... என்று முதல்வர் ஸ்டாலின் முடிவெடுத்துள்ளாராம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+