Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அண்ணன் வர்றார் வழி விடு..ப்ரீ-புக்கிங்கில் ‘தி கோட்’ மெகா சாதனை! கமல்ஹாசனை பின்னுக்குத் தள்ளிய விஜய்

Subscribe to Oneindia Tamil

சென்னை : பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்'' திரைப்படம் நாளை வெளியாகிறது படத்துக்கான முன்பதிவு தொடங்கிய நிலையிலேயே பெரும்பாலான டிக்கெட்டுகள் பெற்று தீர்ந்தது. குறிப்பாக கமல்ஹாசனின் சாதனையை கோட் படத்தின் புக்கிங் முறியடித்திருப்பதாக கூறுகின்றனர் கோலிவுட் வட்டாரத்தினர்.

மங்காத்தா, மாநாடு போட்ட வெற்றி படங்களை கொடுத்த வெங்கட் பிரபு முதன்முறையாக நடிகர் விஜயை வைத்து படம் எடுக்கிறார் என்ற தகவல் வெளியான உடனேயே கோலிவுட்டில் பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டது.

goat vijay venkat prabhu

விஜய் அரசியல் கட்சி ஆரம்பிக்கப் போகும் நிலையில் அவரது சினிமா பயணத்தின் இறுதிக் கட்டத்தில் வெளியாகும் படம் என்பதால் விஜய்யின் ரசிகர்கள் மிக்க ஆர்வத்துடன் அந்தப் படத்தை எதிர்நோக்கி காத்திருந்தனர்.

படம் தொடங்கிய வேகத்தில் முடிக்கப்பட்டு நாளை ரிலீஸ் ஆக இருக்கிறது. இடையிடையே படத்தின் பர்ஸ்ட் லுக், டீசர், ட்ரெய்லர் பாடல்கள் என வெளியிட்டு ரசிகர்களை வைப் மோடிலேயே வைத்திருந்தது படக்குழு. ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் வெங்கட் பிரபு இயக்கி இருக்கும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். விஜய் மட்டுமல்லாது நடிகர் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், சினேகா, லைலா, பிரேம்ஜி உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளமே இணைந்து இருப்பது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

யுவன் சங்கர் ராஜா இரண்டாவது முறையாக விஜய் படத்திற்கு இசையமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படம் நாளை வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் முன்பதிவு எப்படி இருக்கிறது என்பது குறித்து சில தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்களிடம் கேட்டபோது மிகவும் அருமையாக இருப்பதாகவே கூறுகின்றனர். சென்னையில் பொறுத்தவரை பிவிஆர், சத்யம், ஐநாக்ஸ் உள்ளிட்ட கம்பைண்ட் தியேட்டர்களிலும், மால்களில் உள்ள தியேட்டர்களிலும், ஒற்றைத் திரையரங்குகளிலும் பெரும்பாலும் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்பட்டதாகவே கூறுகின்றனர்.

செப்டம்பர் 7ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியும், அதனைத் தொடர்ந்து விடுமுறை நாட்களும் வருவதால் கும்பலாகவே டிக்கெட்டுகள் விற்று தீர்ந்து விட்டதாகவே கூறுகின்றனர். விஜய்க்கு ரசிகர்கள் மட்டுமல்லாது, பெண்கள், குழந்தைகளை ரசிகர் பட்டாளமும் பெரிய அளவில் இருக்கிறது. இதன் காரணமாக குடும்பம் குடும்பமாக சனி ஞாயிற்றுக்கிழமைகளில் டிக்கெட் புக்கிங் நடந்து இருப்பதாக கூறுகின்றனர்.

உரிமையாளர்கள் சென்னையில் மட்டுமல்லாது செங்கல்பட்டு உள்ளிட்ட புறநகர் பகுதிகளிலும், திருச்சி, கோவை, உள்ளிட்ட பி சென்டர்களிலும், ராமநாதபுரம், கன்னியாகுமரி, தேனி, திண்டுக்கல் உள்ளிட்ட சி சென்டர்களிலும் டிக்கெட் புக்கிங் அருமையாக இருப்பதாகவே கூறுகின்றனர். பெரும்பாலும் முதல் இரண்டு நாட்கள் ரசிகர்களே ஆக்கிரமித்து இருக்கும் நிலையில் அடுத்த அடுத்த நாட்களில் பொது ரசிகர்கள் குடும்ப ரசிகர்கள் வருவார்கள் என்கின்றனர் தியேட்டர் உரிமையாளர்கள்.

அதே நேரத்தில் சில தியேட்டர்களில் இன்னும் புக்கிங் தொடங்கவில்லை எனக் கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் மற்றும் விநியோகஸ்தர்கள் தரப்பில் இருந்து அதிக கண்டிஷன்கள் போடப்படுவதால் சில தியேட்டர் நிர்வாகங்கள் படத்தை வெளியிடவில்லை என கூறப்படுகிறது. புதுக்கோட்டையில் இரண்டு தியேட்டர்களில் மட்டுமே கோட் படம் வெளியாகும் நிலையில், திண்டுக்கல்லில் எந்த தியேட்டரில் படம் வெளியாகிறது என்ற தகவலே கிடைக்கவில்லை. இதே நிலைதான் சில மாவட்டங்களில் நிலவுவதாக புலம்புகின்றனர் விஜயின் ரசிகர்கள்.

400 கோடி பட்ஜெட்டில் தி கோட் படம் தயாராகி வரும் நிலையில் அதில் விஜய் மட்டுமே 200 கோடி ரூபாய் சம்பளத்தை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பட வெளியீட்டுக்கு முன்னதாகவே சத்தமில்லாமல் சாதனை படைத்திருக்கிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியான இந்தியன் 2 படம் வெளியாவதற்கு முன்னதாக பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. வெளியானதற்கு பிறகு விமர்சனங்களை சந்தித்தாலும் புக்கிங்கில் அந்த படம் சுமார் 11 கோடி ரூபாய் வரை பெற்றதாக கூறப்படுகிறது. இந்த சாதனையை கோட் படம் தகர்த்து விட்டது. இப்போதைய சூழலில் அந்த படம் சுமார் 16 50 லட்சம் ரூபாயை புக்கிங் தொகையாக மட்டும் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+