நம்ம டார்கெட் ‘அவங்க’ தான்.. சீமானை கண்டுக்காதீங்க! தவெக தலைகளுக்கு ’தளபதி’ விஜய் ஸ்ட்ரிக்ட் ஆர்டர்!
சென்னை: திமுக பாஜகவை விட தமிழக வெற்றிக்கழகத்தை அதிகமாக விமர்சித்து வருகிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான். விஜய் குறித்து தனிப்பட்ட முறையிலும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், சீமான் குறித்து பேசவே கூடாது என உறுதியாக இருக்கிறாராம் விஜய். மேலும் சீமான் குறித்தோ, நாம் தமிழர் கட்சி குறித்தோ இரண்டாம் கட்ட நிர்வாகிகளும் பேசக்கூடாது என ஸ்ட்ரிக்ட் உத்தரவு போட்டுள்ளார் என்கின்றனர்.
தமிழக அரசியலில் புதிய வரவான விஜய் 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி வருகிறார். நடிகராக இருந்தபோதே விஜய்க்கு அரசியல் ஆசை இருந்தது. அதனால் தான் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் இயக்கமாக மாற்றியதோடு, அதனை அரசியல் கட்சியாகவும் மாற்றி இருக்கிறார்.
ஒரே ஆண்டில் இரண்டு மாநில மாநாடுகளை நடத்தி இரு பெரும் கட்சிகளையும் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார். குறிப்பாக மதுரையில் நடைபெற்ற மாநாடு இதுவரை இல்லாத அளவு மிக பிரம்மாண்டமான முறையில் அரங்கேறியது.

விஜய் அரசியல்
அதிமுக திமுக போன்ற கட்சிகளே அந்த மாநாட்டை வியந்து பார்த்தன. இது ஒருபுறம் இருக்க மாநாட்டில் விஜயின் பேச்சு தமிழக அரசியலில் புயலைக் கிளப்பியது. திமுக, அதிமுக, பாஜக, நாம் தமிழர் என அனைத்துக் கட்சிகளும் விஜயின் பேச்சு குறித்து தான் ஒரு வாரமாகப் பேசி வந்தன. குறிப்பாக நாம் தமிழர் கட்சியினர் சமூக வலைத்தளங்களில் விஜயின் பேச்சைக் கடுமையாக ட்ரோல் செய்தனர். அதுமட்டுமல்லாமல் இடும்பவனம் கார்த்திக், சாட்டை துரைமுருகன் போன்றவர்களும் விஜயின் பேச்சைத் தொடர்ந்து விமர்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக வெற்றிக் கழகம்
எல்லாவற்றையும் விட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான், கடந்த ஓராண்டாகவே விஜய் குறித்து மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார். விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் 'என் தம்பி விஜய் அரசியலுக்கு வரட்டும்' என பேசிய சீமான், விஜய் கட்சி ஆரம்பித்த பிறகு அவரை மிகக் கடுமையாகச் சாடி வருவது கவனிக்கத்தக்கது. இது ஒருபுறம் இருக்க, கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சீமான் சந்தித்துப் பேசினார்.
சீமான் தாக்குதல்
அதற்குப் பிறகு விஜயின் மீதான அட்டாக் அதிகமாகி இருக்கிறது. மத்தியில் ஆளும் பாஜக, மாநிலத்தில் ஆளும் திமுகவை விட, இன்னும் ஒரு தேர்தலைக்கூட சந்திக்காத விஜயை, சீமான் ஏன் இவ்வளவு காட்டமாக விமர்சிக்கிறார் என்ற கேள்வியும் முன்வைக்கப்படுகிறது. அதே நேரத்தில் பெரியார் கொள்கைகளை முன்னெடுத்ததால் விஜய்யை சீமான் விமர்சிக்கிறார் என்றும் சொல்கின்றனர்.
அரசியல் மோதல்
இந்த நிலையில் இதுவரை பாஜக, திமுக, ஏன் அதிமுகவைக்கூட விமர்சித்து பேசிய விஜய் இதுவரை சீமான் குறித்து எதுவுமே பேசவில்லை. என்ன நடக்கிறது தமிழக வெற்றிக் கழகத்தில் என விசாரித்தபோது சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டனர் அக்கட்சியினர். மத்தியில் ஆளும் பாஜகவையும் மாநிலத்தில் ஆளும் திமுகவையும் தான் நான் எதிர்க்க வேண்டும். அப்போதுதான் வலுவான எதிர்க்கட்சி என்ற தோற்றம் ஏற்படும். ஆண்ட கட்சிகளையும் எதிர்க்கட்சிகளையும் விமர்சிப்பதால் தேவையில்லாமல் எதிரிகள்தான் கிடைப்பார்கள். மற்றபடி அரசியல் ரீதியாக ஒன்றும் கிடைக்கப் போவதில்லை.
விஜய் உத்தரவு
மேலும் நாம் தமிழர் போன்ற ஆட்சிக்கு வராத கட்சிகளையும் வாக்கு சதவீதம் இல்லாத கட்சிகளையும் விமர்சித்தால் தேவையில்லாமல் பிரச்சனை வரும் என்பதை விட நேரத்தை வீணடிக்க வேண்டாம். எனவே சீமான் குறித்து நானும் பேசமாட்டேன். கட்சியின் இரண்டாவது நிர்வாகிகளும் பேசக்கூடாது" என விஜய் உத்தரவு போட்டுள்ளார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.
-
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
4 குற்ற சம்பவங்களிலும் ஈடுபட்டவர்கள் தவெக நிர்வாகிகள்.. விஜய்யிடம் விளக்கம் கேட்கும் டிடிவி தினகரன் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
பரந்தூர்-க்கு சொன்ன நோ.. சென்னை மக்களுக்கு அடுத்த அதிர்ச்சி! சீட்டுக்கட்டுப்போல் சரியும் மெகா திட்டங்கள்! -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
"டிவிகேவால் தான் கரு கலைந்ததா?".. இதோடு உங்க நாடகத்தை நிறுத்திக்கோங்க!" ஜூலிக்கு நடிகர் வார்னிங் -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
போன முறை.. உலக நாடுகளே வியக்கும் வகையில் உதயநிதி நடத்தினாரே! உலக செஸ் சாம்பியன்ஷிப்.. கைவிட்ட தவெக? -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி!











Click it and Unblock the Notifications