Vijay: வேணும்னே பண்றாங்க.. 10 குற்றச்சாட்டுகளுடன் தலைமை செயலகத்துக்கு நேரில் போன விஜய்!
சென்னை: சென்னை தலைமைச் செயலகத்திற்கு நேரில் வந்த விஜய் தேர்தல் அதிகாரியிடம் மனு அளித்துள்ளார். பெரம்பூர் தொகுதியில் விஜய்க்கு அனுமதி அளிக்கப்படாத நிலையில், 2 நாட்களுக்கு முன்பே அனுமதி கேட்டப்பட்டாலும், இறுதிக் கட்டத்தில் அனுமதி மறுக்கப்படுவதாகவும், திமுகவுக்கு ஆதரவாக சில அதிகாரிகள் செயல்படுவதாகவும், அவர்களை மாற்றக் கூறியும் தவெக தலைவர் விஜய் மனு அளித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
சென்னையில் இன்று பெரம்பூர் தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தை விஜய் தொடங்க இருந்தார். இதற்காக தேர்தல் ஆணையத்திடம் அனுமதி கேட்டிருந்த நிலையில், தவெக அனுமதி கேட்டிருந்த இடத்தில் 3 ஆயிரம் பேர் வரை நிற்க முடியாது என்று கூறி தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது.

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் சட்டசபை தேர்தலுக்கு பிறகு பிரச்சாரத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டு இருந்தார். ஆதவ் அர்ஜுனா உள்பட தவெக நிர்வாகிகள் பலரும் தேர்தல் விதி அமலுக்கு வந்ததும் விஜய் மக்களை சந்திக்க வருவார் என்று கூறி வந்தனர். ஆனால் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு ஒரு வாரத்தை தாண்டியும் வெளியில் வரவில்லை.
இந்த நிலையில் தான் விஜய் இன்று அவர் போட்டியிட உள்ளதாக கூறப்படும் பெரம்பூர் உள்பட சென்னையில் 5 தொகுதிகளில் பிரச்சார்த்தை தொடங்க உள்ளதாகவும் இதற்காக தேர்தல் ஆணையத்திடமும் அனுமதி கோரப்பட்டது. ஆனால் நேற்று திடீரென விஜய்யின் பெரம்பூர் பிரச்சாரத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டது. 3 ஆயிரம் பேர் கூடுவதற்கு அந்த இடம் சரிவராது என்று அனுமதி மறுக்கப்பட்டது.
இதற்கு விஜய்யும் கடும் கண்டனங்களை தெரிவித்து இருந்தார். இதற்கு பின்னால் திமுக இருப்பதாகவும், இதனால் தான் அனுமதி வேண்டும் என்றே மறுக்கப்படுவதாக கூறி இருந்தார். தவெக பிரசாரத்திற்கு தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்ததற்கு திமுக அரசு எப்படி பொறுப்பேற்க முடியும் என அமைச்சர் மா. சுப்பிரமணியன் கேள்வி எழுப்பி இருந்தார். தேர்தல் பரப்புரை அனுமதிக்கும் தமிழக அரசுக்கும் என்ன சம்பந்தம்? என கேள்வி எழுப்பி இருந்தார்.
இந்த நிலையில் தான் விஜய் நேரடியாக இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு வருகை தந்தார். அவர் தலைமை தேர்தல் அதிகாரியிடம் நேரடியாக மனு அளித்தார். அதில் திமுகவின் தூண்டுதலின் பேரிலேயே வேண்டும் என்றே எங்கள் பிரச்சாரத்துக்கு தடை விதிக்கப்படுகிறது என்றும், அந்த அதிகாரிகளை மாற்ற வேண்டும் என்று கூறியும் விஜய் 10 குற்றச்சாட்டுகளை சொல்லி மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
-
அப்பா விட்டதை பிடிக்கும் மகள்.. மதுரை அரசியலில் கால் பதிக்கும் கயல்விழி அழகிரி! தவெக தான் அடுத்து? -
நாளை மறுநாள் திருச்சி செல்லும் விஜய்.. முதல்வரான பிறகு பொதுவெளியில் முதல் நிகழ்ச்சி! பிளான் என்ன? -
’குதிரை பேரம்’ கலைஞர் பண்ணப்போ என்ன பண்ணீங்க! திடீரென டோனை மாற்றிய வைகோ! துரை வைகோவின் மீட்டிங்! -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
கமல் கோரிக்கையை நிராகரித்த விஜய்.. மேஜைக்கு வந்த 6 எச்சரிக்கை ரிப்போர்ட்.. உள்ளே இருந்தது என்ன? -
திருவள்ளுவருக்கு காவி பெயிண்ட்! முதல்வர் தயங்குவது ஏன்? விஜய்க்கு உதயநிதி ஸ்டாலின் கேள்வி -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
விஜய்யை வளைக்கிறதா தாமரை? காங்கிரஸை ஓரங்கட்ட தவெக மெகா பிளான்! அம்பலப்படுத்திய பாஜக -
குழந்தைகளை பயன்படுத்தி வாக்கு கேட்டதாக வழக்கு.. விஜய்யின் தவெகவுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
மகளிர் உரிமைத் தொகை ரூ 2500 எப்போது? பட்டென அப்டேட் கொடுத்த மரியவில்சன்! 2 வாரங்கள் கழித்தா? -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம்












Click it and Unblock the Notifications