விஜய் பதவியேற்பு விழாவில்.. த்ரிஷா, சஞ்சய் முதல் ஜனநாயகன் தயாரிப்பாளர் வரை.. பங்கேற்ற நட்சத்திரங்கள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெக தலைவர் விஜய் தமிழ்நாடு முதல்வராகப் பதவியேற்கிறார். நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்வில் பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். குறிப்பாக சினிமா துறையில் இருந்து நடிகை த்ரிஷா, நடிகர் சஞ்சய் உள்ளிட்ட பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.

கடந்த ஒரு வாரமாக மாநில அரசியலில் இருந்த குழப்பம் ஒரு வழியாக முடிவுக்கு வந்துள்ளது. காங்கிரஸ், இடதுசாரிகள், விசிக, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைக்கிறார். தவெக தலைவர் விஜய் இன்று தமிழ்நாடு முதல்வராக பதவியேற்கிறார்.

TVK Vijay Tamil Nadu Cabinet Ministers

நேரு உள்விளையாட்டு அரங்கில் இந்த நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்த நிகழ்வில் பங்கேற்க 9.30 மணியளவில் விஜய் கோட் சூட் அணிந்தபடி வருகை தந்தார். இந்த நிகழ்வில் அவரது நண்பர்கள், உறவினர்கள் பலரும் கூட நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மேலும், இந்த பதவியேற்பு விழாவில் சினிமா நட்சத்திரங்களும் பலரும் பங்கேற்றுள்ளனர்.

முதலில் நடிகை த்ரிஷா நீல கலர் புடவையில் நிகழ்ச்சியில் பங்கேற்றார். பதவியேற்பு விழாவிற்கு வந்த நடிகை திரிஷா, நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா ஆரத்தழுவி மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். மேலும், அவர் கூட்டத்தினரையும் நோக்கி கை அசைத்தார்.

அதேபோல ஜனநாயகன் திரைப்படத்தின் தயாரிப்பாளரான வெங்கட் நாராயாணாவும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார். மேலும், நடிகர் மன்சூர் அலி கானும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

விஜய்யின் நெருங்கிய நண்பரும் சின்னதிரை நடிகருமான சஞ்சய், அவரது மனைவி ப்ரீத்தி சீனிவாசன் ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், தூத்துக்குடி எம்எல்ஏவும் விஜய்யின் நண்பரும் ஸ்ரீநாத்தும் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+