கேரளா முதல்வர் பதவியேற்பு விழா.. மே 18ல் நேரில் செல்லும் முதல்வர் விஜய்.. ராகுல் காந்தியும் வராரு!
சென்னை: கேரளா மாநில முதல்வராக சதீசன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில தலைமைச் செயலாளராக சார்பாக முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் விஜய் 18ஆம் தேதியன்று கேரளா பயணிப்பார் என்று பார்க்கப்படுகிறது.
கேரளாவில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களில் வெற்றி பெற்றது. 10 ஆண்டுகளுக்கு பின் கேரளாவில் காங்கிரஸ் கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ளது. மே 4ஆம் தேதியே தேர்தல் முடிவுகள் வெளியானாலும், முதல்வரை தேர்வு செய்வதில் நீண்ட இழுபறி நீடித்தது.

இறுதியாக விடி சதீசனை கேரளாவின் முதல்வராக காங்கிரஸ் கட்சியின் தலைமை முடிவு செய்தது. இதன்பின் நேற்று காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் சட்டமன்றக் குழு தலைவராக விடி சதீசன் தேர்வு செய்யப்பட்டார். இந்த நிலையில் கேரளா முதல்வராக விடி சதீசன் மே 18ஆம் தேதியன்று பதவியேற்க உள்ளார். பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த விழாவில் காங்கிரஸ் ஆளும் மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்க இருக்கின்றனர். தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, கர்நாடகா முதலவ்ர் சித்தராமையா, ஹிமாச்சல் பிரதேச முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் பங்கேற்க உள்ளார்.
இந்த நிலையில் கேரளா மாநில முதல்வராக சதீசன் பதவியேற்கும் விழாவில் பங்கேற்க தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மாநில தலைமைச் செயலாளராக சார்பாக முதல்வர் விஜய்க்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மே 18ஆம் தேதி முதல்வர் விஜய் கேரளா பயணிக்க உள்ளதாக தெரிகிறது.
ஏற்கனவே தமிழக முதல்வராக விஜய் பதவியேற்ற போது ராகுல் காந்தி பங்கேற்றார். இதனால் மீண்டும் ராகுல் காந்தியுடன் விஜய் மேடையை பகிர இருக்கிறார். கேரளாவில் விஜய்க்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கும் சூழலில், அவரை பயன்படுத்தி கொள்ள காங்கிரஸ் கட்சி இதன் மூலமாக திட்டமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications