கோடிகளில் சம்பளம் வாங்கிய விஜய்-க்கு இனி எவ்வளவு சம்பளம் தெரியுமா?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களின் ஏகோப்பித்த ஆதரவு உடன் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் அக்கட்சியின் தலைவர் விஜய் முதலமைச்சர் நாளை பொறுப்பேற்க உள்ளார்.

எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்து தவெக போட்டியிட்ட நிலையில், பிற கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபித்து விதய் தலைமையிலான அரசு ஆட்சி அமைக்க உள்ளது. இதற்காக பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

TVK Vijay CM Salary vijay tamil nadu cm salary vijay monthly salary as chief minister tamil nadu cm salary 2026 tvk vijay government perks vijay chief minister facilities vijay z plus security vijay assets nomination paper vijay movable assets 404 crore vijay immovable assets vijay last film jananayagan vijay full time politics tamil nadu chief minister helicopter vijay salary after movies tamil nadu cm salary details vijay chief minister income 404 Vijay CM Salary Tamil Nadu Chief Minister Salary Vijay Assets TVK Government Formation Vijay Last Movie

விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம், அவருடைய முதல் படமான வெற்றி திரைப்படத்திற்கு 500 ரூபாய் சம்பளமாக பெற்று, கடைசியாக அவர் நடித்த ஜன நாயகன் படத்திற்கு 220 -275 கோடி ரூபாய் வரையிலான தொகையை சம்பளமாக பெற்றுள்ளார். விஜய் வருடத்திற்கு ஒரு படம் மட்டுமே நடிக்கும் வழக்கம் கொண்டிருக்கும் காரணத்தால் வருடத்திற்கு குறைந்த பட்சம் 150 - 200 கோடி ரூபாயை கடந்த 5-6 வருடங்களாக பெற்று வருகிறார்.

இந்த நிலையில் சினிமா-வை முழுமையாக விட்டுவிட்டு அரசியலில் இறங்கியுள்ள விஜய் தற்போது முதலமைச்சர் என்ற பொறுப்பை பெற்றுள்ளார். இந்த மாபெரும் பொறுப்புக்கு விஜய் பெறும் சம்பளம் என்ன தெரியுமா?

தமிழக முதல்வரின் மாத சம்பளம்

தமிழ்நாடு முதலமைச்சருக்கு மாதம் ரூ.2,05,000 வழங்கப்படுகிறது. வருடத்திற்கு 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் விஜய்-க்கு 24.6 லட்சம் சம்பளம் வாங்க போகிறார்.

ஆனால் அவருக்கான பதவி, பொறுப்பு மிகப்பெரியது. முக்கியமாக விஜய் தனது தேர்தல் வாக்குறுதியில் 2036-ஆம் ஆண்டிற்குள் தமிழ்நாட்டை 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளார். இந்த இலக்கை அடையும் பொறுப்பும் விஜய்க்கு உள்ளது. இதுதவிர தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முக்கிய வசதிகளும் ஒவ்வொரு முதல்வருக்கு வழங்கப்படுகின்றன.

அரசு சார்பில் முதல்வர் தங்குவதற்கு வீடு, குண்டு துளைக்காத சிறப்பு வாகனங்கள், இசட் பிளஸ் அந்தஸ்து பாதுகாப்பு, முதல்வர் மற்றும் முதல்வர் குடும்பத்திற்கான மருத்துவக் காப்பீடு, முதல்வர் வீடு மற்றும் அலுவலங்களுக்கு தொலைத்தொடர்பு வசதிகள், முதல்வருக்கான பயணச் செலவுகளை முழுமையாக அரசு ஏற்கும், வீட்டிலும் அலுவலகத்திலும் பணியாற்றும் பணியாளர்கள் மற்றும் அவர்களுக்கான ஊதியம் ஆகியவற்றையும் தமிழக அரசே ஏற்றுக்கொள்கிறது.

மேலும், முதலமைச்சர் பயணம் செய்ய தனி ஹெலிகாப்டர் வசதி மற்றும் விமானப் பயண செலவுகளையும் அரசு முழுமையாக ஏற்கிறது. இந்த சலுகைகள் முதல்வரின் பணியை சுமுகமாக மேற்கொள்ள உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன.

சினிமாவில் இருந்து முழு விலகல்

விஜய் தனது கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தை அறிவித்திருந்தார். இப்போது முழு நேர அரசியலுக்கு வந்துள்ள அவர், சினிமாத் துறையில் இருந்து வரும் வருவாயை முற்றிலுமாக இழக்கும் நிலைக்கு வந்துள்ளார்.

தேர்தலில் தனித்துப் போட்டியிட்டு 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், அவர் விரைவில் முதலமைச்சராகப் பொறுப்பேற்க உள்ளார். இந்த மாற்றம் அவரது வாழ்க்கையில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும்.

விஜயின் சொத்துமதிப்பு

விஜய் தனது வேட்பு மனுவில் தாக்கல் செய்த சொத்து விவரங்களின்படி, அவரது பெயரில் அசையும் சொத்துகளின் மதிப்பு ரூ.404 கோடியாக உள்ளது. அசையா சொத்துகளின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.220.15 கோடியாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரூ.76 கோடிக்கு கடன் கொடுத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+