எங்கே திமுக? அது விடுங்க, இங்க போட்டியே டிவிகே - டிடிவி இடையேதான்.. அரசியல் போக்கையே மாற்றிய தினகரன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு தவெக மற்றும் டிடிவி தினகரன் இடையேயான நேரடிப் போட்டியாக உருவெடுத்துள்ள நிலையில், திருமாவளவன் எடுக்கப்போகும் அதிரடி முடிவுகள் புதிய கூட்டணி மாற்றங்களுக்கு வித்திட்டுள்ளன.. இரவோடு இரவாக மாறியுள்ள இந்த அரசியல் சூழலில் டிடிவி தினகரன் மற்றும் தவெக தலைவர் இடையிலான பலப்பரீட்சை தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக அரசியல் களத்தில் கடந்த சில மணி நேரங்களாக அரங்கேறி வரும் சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.. குறிப்பாக, தவெக தரப்பில் இருந்து வெளியானதாக கூறப்படும் சில தகவல்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவை அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.

TVK TTV Dinakaran Tamil Nadu Politics Election 2026 Political Debate TVK vs TTV Alliance Politics PoliticalBuzz 2026

இந்த மாற்றங்கள் அனைத்தும் ஓவர்நைட்டில் நடந்துள்ளதாக கூறப்படும் நிலையில், தற்போது ஒட்டுமொத்த கவனமும் விசிக தலைவர் திருமாவளவன் பக்கமே திரும்பியுள்ளது.. இன்று அவர் தனது இறுதி முடிவை அறிவிப்பதாக கூறியுள்ளதால், தமிழக அரசியலில் புதிய கூட்டணி கணக்குகள் உருவாகுமா அல்லது இருக்கும் கூட்டணியில் மாற்றம் ஏற்படுமா என்கிற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது..

ரெண்டே ரெண்டு கட்சிக்கு போட்டி

விஜய் தனது கட்சியின் கொள்கை விளக்க மாநாட்டிலேயே, தங்களுக்கு இருக்கும் பிரதான எதிரி ஒரு கட்சிதான் என்று திமுகவை நேரடியாகச் சுட்டிக்காட்டி இருந்தார்.. இதன் மூலம் வரும் தேர்தலில் போட்டி என்பது தவெக மற்றும் திமுக ஆகிய 2 கட்சிகளுக்கும் இடையேதான் இருக்கும் என்கிற பிம்பம் உருவானது.. தவெக பிரச்சாரம் முதல் அனைத்து தேர்தல் பணிகளும் திமுகவை ஆட்சியிலிருந்து விரட்ட வேண்டும் என்ற நோக்கத்திலேயே இயங்கியது

ஆனால் இப்போதைய சூழலில், விஜய்யின் அந்த நேரடித் தாக்குதலுக்கு திமுக தரப்பு பெரிய அளவில் எதிர்வினையாற்றாமல் மிகவும் நிதானமாக காய் நகர்த்தி வருகிறது.. திமுகவின் இந்த மவுனத்தால், தேர்தல் களம் இப்போது தவெக மற்றும் டிடிவி தினகரன் ஆகிய 2 துருவங்களை நோக்கித் திரும்ப தொடங்கிவிட்டது..

அனுபவம் வாய்ந்த டிடிவி தினகரனின் அரசியல் நுணுக்கங்களும், தவெகவின் புதிய எழுச்சியும் நேருக்கு நேர் மோதும் ஒரு சூழல் உருவாகி இருப்பதால், போட்டி இப்போது தவெக - டிடிவி என்கிற ரீதியில் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது..

தவெக - டிடிவி

டிடிவி தினகரன் என்பவர் தமிழக அரசியலில் மிகவும் நிதானமாக செயல்படும் தலைவர்களில் ஒருவராக பார்க்கப்படுபவர்.. கடந்த காலங்களில் அவர் சந்தித்த சவால்களும், நெருக்கடிகளும் சாதாரணமானவை அல்ல..

குறிப்பாக வருமான வரித்துறை சோதனைகள் ஒருபுறம் தீவிரமாக நடந்து கொண்டிருந்த வேளையில், எந்த பதற்றமும் காட்டாமல் தனது தோட்டத்தில் மாடுகளுக்கு தீவனம் கொடுத்துக் கொண்டிருந்த அந்த காட்சிகள் இன்றும் பலரால் நினைவுகூரப்படுகிறது.. எவ்வளவு பெரிய அரசியல் நெருக்கடி வந்தாலும் அதை அமைதியாக கையாளுவதில் அவர் அனுபவம் வாய்ந்தவர்.

டிடிவி தினகரன் அரசியல்

ஜெயலலிதா காலத்திலிருந்தே அரசியலின் பல்வேறு சூழல்களை பார்த்தவர் என்பதால், தற்போதைய நெருக்கடியான சூழலையும் அவர் தனது பாணியிலேயே எதிர்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது..

இனி வரும் நாட்கள் தமிழக அரசியலில் முக்கியமான காலகட்டமாக அமையப்போகிறது.. தவெகவின் புதிய வரவு ஒருபுறம் இளைய தலைமுறையினரை ஈர்க்கும் நிலையில், டிடிவி தினகரன் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல்வாதிகள் தங்களது அடுத்தகட்ட நகர்வை கவனமாக திட்டமிட்டு வருகின்றார்கள்.

தென் மாவட்டங்கள் - டிடிவி செல்வாக்கு

குறிப்பாக தென் மாவட்டங்களில் டிடிவி தினகரனின் செல்வாக்கு மற்றும் மாநிலம் முழுவதும் தவெக பெற்று வரும் ஆதரவு ஆகியவற்றுக்கு இடையே நேரடி போட்டி உருவாகும் சூழல் காணப்படுகிறது.. இது வெறும் தேர்தல் போட்டி மட்டுமல்லாமல், தமிழக அரசியலில் எந்த அணி வலுவான மாற்று சக்தியாக உருவாகும் என்பதற்கான சோதனையாகவும் பார்க்கப்படுகிறது..

டிடிவி தினகரன் போன்ற அனுபவம் வாய்ந்த அரசியல் தலைவர்களும், தவெக போன்ற புதிய சக்திகளும் மோதுகின்ற இந்த களம், வாக்காளர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.. திருமாவளவனின் அடுத்தகட்ட நிலைப்பாடு எந்த கூட்டணிக்கு சாதகமாக அமையும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் அதிகரித்துள்ளது.. இனி என்ன நடக்கப்போகிறது? பொறுத்திருந்து பார்ப்போம்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+