மூச்சுக்கு 300 தடவை அம்மானு சொன்னீங்களே! முதன்முறையாக அதிமுகவை விளாசிய விஜய்! ஆர்ப்பரித்த நாமக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே மூன்றாவது வாரமாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ள தவெக விஜய், இன்று நாமக்கலில் பிரச்சாரம் செய்தார். வழக்கம் போலவே திமுகவை மிகக் கடுமையாக விமர்சித்தார். அதே நேரத்தில் முதன்முதலாக அதிமுகவை வெளிப்படையாக விமர்சனம் செய்திருக்கிறார். மூச்சுக்கு 300 தடவை ஜெயலலிதா பெயரைச் சொல்லிவிட்டு அதிமுக செய்தது என்ன? எனக் கேட்டதோடு அதிமுக பாஜக கூட்டணியையும் மிகக் கடுமையாகச் சாடி உள்ளார் விஜய்.

2026 சட்டமன்றத் தேர்தலுக்குத் தமிழ்நாடு தயாராகி வரும் நிலையில் அதிமுக, திமுக உள்ளிட்ட பிரதான கட்சிகள் தேர்தல் வேலைகளைத் துவக்கிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழக அரசியலில் புதிய வரவான விஜயும் தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்கி இருக்கிறார்.

அறிக்கை அரசியல், ஒர்க் ஃப்ரம் ஹோம் அரசியல் என விஜய் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் அதனைத் தவிடுபொடியாக்கும் வகையில் மக்கள் சந்திப்புப் பிரச்சாரத்தை முன்னெடுத்து இருக்கிறார்.

Vijay Targets AIADMK for First Time

விஜய்

இந்த மாதம் திருச்சியில் விஜய் முதன்முறையாகப் பிரச்சாரம் செய்த நிலையில் கடந்த வாரம் நாகை மற்றும் திருவாரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். விஜயின் பிரபலம் அவருக்கு அதிக அளவிலான கூட்டத்தைச் சேர்த்தது. அன்றைய நாள் முழுவதும் ஏன் ஒரு வாரத்திற்கு விஜய் குறித்த செய்திகள்தான் ஊடகங்களில் பேசுபொருளாக இருக்கின்றன. அந்த வகையில் இன்றைய தினம் நாமக்கல் மாவட்டத்தில் தனது தேர்தல் சுற்றுப்பயணத்தை விஜய் மேற்கொண்டார்.

அதிமுக விமர்சனம்

வழக்கமாக விஜய் தனது பிரச்சாரத்தில் பாஜகவையும் திமுகவையும் விமர்சிப்பார். குறிப்பாக திமுக குறித்துதான் 90 சதவீதப் பேச்சு இருக்கும். இந்த நிலையில் முதன்முறையாக அதிமுகவையும் பாஜக அதிமுக கூட்டணியையும் விமர்சித்திருக்கிறார் விஜய். அதிமுக பாஜகவுடன் நேரடியாகக் கூட்டணி வைத்து இருக்கிறது. திமுக பாஜகவுடன் மறைமுகமாகக் கூட்டணி வைத்துள்ளது. இருவருக்கும் வேறுபாடு எதுவும் இல்லை. எனக் கூறியிருந்தார்.

ஜெயலலிதா பாதை

அதுமட்டுமல்லாமல், "ஜெயலலிதா கூறிய அதிமுக பாதையை இன்று கட்சி முற்றிலும் மறந்துவிட்டது. பாஜகவுடன் அதிமுக வைத்திருக்கும் கூட்டணி பொருந்தாக் கூட்டணி" என்றதோடு, "மூச்சுக்கு முன்னூறு தடவை அம்மா அம்மா என சொல்லிவிட்டு ஜெயலலிதா சொன்னதை எல்லாம் மறந்துவிட்டு பொருந்தாக் கூட்டணியை அமைத்துள்ளீர்கள். தமிழ்நாட்டு நலனுக்காக கூட்டணி என சொல்லிக்கொண்டு அவர்களைப் போல் கூட்டணி அமைக்க மாட்டோம்" எனக் கூறி இருந்தார் விஜய்.

திமுக எதிர்ப்பு

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் கட்சி ஆரம்பித்ததிலிருந்து திமுகவை அரசியல் எதிரி என்றும் பாஜகவை கொள்கை எதிரி என்றும் விஜய் விமர்சித்து வந்தார். தொடர்ந்து நடந்த மாநாடு, அறிக்கை என அனைத்துமே திமுக, பாஜக எதிர்ப்பே பிரதானமாக இருந்தது. ஒரு வார்த்தை கூட விஜய் அதிமுக குறித்து பேசியதில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுகவுடன் விஜய் கூட்டணி அமைக்க திட்டமிட்டிருப்பதாகவும், அதன் காரணமாகவே தனது பேச்சு, அறிக்கைகளில் அதிமுகவை விமர்சிப்பதைத் தவிர்த்து வருகிறார் எனக் கூறி வந்தனர்.

விஜய் பேச்சு

இந்த நிலையில் முதன்முறையாக விஜய் அதிமுகவை விமர்சித்துப் பேசியிருப்பது அந்தக் கட்சித் தொண்டர்களையும் உற்சாகமடைய வைத்திருக்கிறது. திமுகவுக்கு மாற்று தமிழகத்தில் எதிர்க்கட்சி என்ற டார்கெட்டை நோக்கி விஜய் பயணித்து வருவதாகவும், அதனால்தான் தற்போது அதிமுகவையும் விஜய் விமர்சித்துள்ளார் என்கின்றனர் தமிழக வெற்றிக் கழகத்தினர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+