“வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி மிரட்டி வருகின்றனர்”- விஜய் பரபரப்பு குற்றச்சாட்டு
சென்னை: விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர் என தவெக தலைவர் விஜய் காட்டமாகத் தெரிவித்துள்ளார். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும் என விஜய் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், "கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே, சகோதரி ஒருவரது வீட்டின் சுவரில் அவரது அனுமதியின்றித் தங்களது கட்சி ஸ்டிக்கரைச் சிலர் ஒட்டியுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த, கைக்குழந்தையுடன் உள்ள இன்னொரு சகோதரியையும் அவரது வீட்டில் இருந்தவர்களையும் சம்பந்தப்பட்டவர்கள் தாக்கியதாகவும் தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் சமூக வலைத்தளங்களில் காணொளிப் பரவி வருகிறது.

மகளிர் மீதான இத்தாக்குதல் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. வீட்டு உரிமையாளரின் அனுமதியின்றி, வீட்டுச் சுவரில் ஸ்டிக்கர் ஒட்டக் கூடாது என்ற நிபந்தனை உள்ளது. அதை மீறியதோடு, தட்டிக் கேட்ட உரிமையாளரைத் தாக்கியுள்ளனர். இந்த அடாத செயலில் ஈடுபட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விசில் புரட்சியால் வெற்று விளம்பர மாடல் ஆட்சி அவ்வளவுதான், இனி கல்லாப் பெட்டியை நிரப்ப முடியாது என்கிற கோபத்தில் சிலர் இருக்கின்றனர். வாக்குப் பதிவுக்கு இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் பொதுமக்களை அவர்கள் அச்சுறுத்தி வருகின்றனர். வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை அவதூறாகப் பேசி, மிரட்டி வருகின்றனர்.
இத்தகைய அராஜகப் போக்கைக் காவல் துறை தடுத்து நிறுத்த வேண்டும். மக்கள் சுதந்திரமாக வாக்களிக்கும் சூழலை ஏற்படுத்த வேண்டும். தேர்தல் ஆணையம் தனது கண்காணிப்புப் பணிகளை இன்னும் தீவிரப்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
-
“உங்க கட்சியிலேயே நீதி கிடைக்கல.. தமிழக பெண்களுக்கு எப்படி?” - விஜய்க்கு கீதா ஜீவன் சரமாரி கேள்வி! -
முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு.. ஜூன் 15ல் நீதிமன்றத்தில் விசாரணை.. அடுத்தது என்ன? -
தமிழக அரசியலில் அடுத்த அதிரடி! 5 தொகுதிகளுக்கு ஆகஸ்டில் இடைத்தேர்தல்? ஜூலை கடைசியில் தேதி அறிவிப்பு -
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு அப்போ பவரே இல்லையா.. வழக்கு போட முடியாது! விசாரிக்கவும் முடியாதாம்! -
இது லிஸ்ட்லயே நம்ம இல்லையே! மொத்தமாய் மாற்றும் விஜய்.. தனியார் கைக்கு போகும் டாஸ்மாக்! எப்போது? -
பெரிய பிரச்சனை.. முதல்வர் அலுவலகத்துக்கே வரும் ’ஜான்’.! விஜய் டேபிளுக்கே போகாத உளவுத்துறை தகவல்! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
தேர்தல் தோல்வியால் அதிர்ச்சியில் திமுக.. கட்சியை மீட்டெடுக்க தேசிய அரசியல் ஆலோசகரை அழைக்கிறது? -
அரகஜா டூ குங்குமம்.. டெல்லி சந்திப்புகளில் முதல்வர் விஜய்யின் நெற்றி பொட்டு மாற்றம்.. பின்னணி என்ன? -
அரசு பள்ளியில் தவெக எம்எல்ஏ மகளுக்கு அட்மிஷன்! இப்படித்தான் இருக்கனும்.. குவியும் பாராட்டு! -
எம்ஜிஆர் வழிபட்ட அதே கோவில்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்லும் விஜய்! அந்த தங்க வாள் ரகசியம் -
மோடி தலைமையில் நிதி ஆயோக் குழு கூட்டம் தொடங்கியது.. முதல்வர் விஜய் பங்கேற்றார்! அஜெண்டா என்ன?












Click it and Unblock the Notifications