Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நீங்க ரூல்ஸ போடுங்க.. நாங்க பழி மேல பழி போட்டு தடுக்குறோம்! திமுக - அதிமுக மீது விஜய் நேரடி அட்டாக்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: என்னை தடுக்க திமுகவும், அதிமுகவும் மறைமுக டீலிங் போட்டு செயல்படுகின்றனர் எனவும், நீ விதிமுறைகள் விதிமுறைகள் எனப் போட்டு அவனை தடுத்து விடு, நானும் பழி மேல பழி போட்டு அவனை தடுக்குறேன் என பேசி வைத்துக் கொண்டு பிரச்னை கொடுக்கிறார்கள் என தஞ்சாவூர் செங்கிப்பட்டியில் நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பரபரப்பு புகார் கூறியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கலந்து கொண்ட தவெக நிர்வாகிகள் சந்திப்பு மற்றும் தேர்தல் பரப்புரை நிகழ்ச்சி இன்று தஞ்சாவூர் சிங்கம்பட்டியில் நடைபெற்றது. காவல் துறை அனுமதிக்கான வழிகாட்டு நெறிமுறைகளின் படி பின்பற்றி இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது.

குறிப்பாக அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்டனர். QR குறியீட்டுடன் கூடிய நுழைவுச் சீட்டு முன்னதாக தேர்ந்தெடுக்கப்பட்டு யார் யார் கலந்து கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்து 4900 பேருக்கு தவெக சார்பில் அனுமதி சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

TVK Vijay tamilaga vettri kazhagam

விஜய் தஞ்சாவூர் பேச்சு

தொடர்ந்து தவெக தொண்டர்களின் ஆரவாரத்துக்கிடையே விஜய் பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அவர்," தமிழ்நாடுதான் விஜய்.. விஜய்தான் தமிழ்நாடு; தமிழ்நாட்டு மக்களின் உண்மையான பிரதிநிதி நான்.தமிழ்நாடு VS ஸ்டாலின் என்பது தான் இந்த தேர்தல். டெல்லி, டெல்லி என பேசுகின்றனர் ED ரெய்டு வந்தால் வெள்ளைக்கொடி காட்டுகின்றனர். எனக்கும் தமிழ்நாட்டு மக்களுக்கும் இடையில் யாராலும் நுழைய முடியாது. மறுபிறவி, மறுஜென்மம் பத்தி எனக்கு பெருசா தெரியாது.

தமிழக வெற்றிக் கழகம்

ஒருவேளை அது உண்மையா இருந்தா, அடுத்த பிறவில விவசாயி மகனா பிறக்கணும்னு ஆசப்படுறேன். மதிப்பிற்குரிய மனிதர்கள் விவசாயிகள். விவசாயிகள் பார்க்க சாதாரணமாக இருக்கலாம், ஆனால் அவர்கள் சாதாரணமானவர்கள் கிடையாது. வருகிற சட்டமன்ற தேர்தலில் எல்லா அணியும் உடைந்து நொறுங்கும்; TVK அடித்து நொறுக்கும். நீங்கள் அனைவரும் எனக்கு ஒரு உறுதிமொழியை கொடுக்க வேண்டும்; ஊழலற்ற தவெக ஆட்சியை அமைப்பீர்களா? இந்த விஜய்க்கு ஒரு வாய்ப்பு தருவீர்கள் தானே?

திமுக அதிமுக ரகசிய டீலிங்

ஒவ்வொரு பூத்திலும் விசில் சத்தம் கேட்கும்தானே? விசில் சத்தம் ஓட்டாக மாறும்தானே? எனக்கு விவசாயத்தைப் பற்றி பெரிதாக தெரியாதுதான். அதை நான் ஒத்துக்குவேன். மத்தவங்களை போல நானும் டெல்டா காரன்தான் என உங்க காதில் டால்டா ஊற்ற மாட்டேன். மணல் மாஃபியா கும்பலுக்கு ஆதரவு கொடுப்பது திமுகதான் என்பதை மறுக்க முடியுமா? ஆட்சி முடியும் நேரத்தில் பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது ஏன்?

ஸ்டாலின் விஜய் அரசியல்

காவிரி பிரச்சினை, முல்லை பெரியாறு பிரச்சினை பற்றியெல்லாம் உனக்கு தெரியுமா எனக் கேட்கிறார்கள். ரிமோட்லி ஆபரேட்டட் வெஹிக்கிள் (ROV) மூலம் தண்ணீருக்கு உள்ளேயே போய் அணையை ஆராய்வது வரை எனக்கு எல்லாமே தெரியும். என்னை தடுக்க திமுகவும், அதிமுகவும் மறைமுக டீலிங் போட்டு செயல்படுகின்றனர்.

விஜய்

ஒண்ணு நீ... இல்லன்னா நான்... நம்மை தாண்டி யாரும் வந்துவிடக் கூடாது... நாம் மாறி மாறி ஆட்சிக்கு வந்துவிடலாம் என நினைத்தோம். விஜய் வந்ததால் நமக்கு தொல்லை. மக்கள் வேறு அவனைத்தான் நம்புகிறார்கள். அதனால், நீ விதிமுறைகள் விதிமுறைகள் எனப் போட்டு அவனை தடுத்துவிடு. நானும் பழி மேல பழி போட்டு அவனை தடுக்குறேன் என பேசி வைத்துக் கொண்டு பிரச்சனை கொடுக்கிறார்கள்" என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+