கிரிக்கெட்டில் கூட தமிழ்நாட்டை டெல்லி ஜெயிக்காது! CSK-ஐ குறிப்பிட்டுப் பேசிய விஜய்! அதிர்ந்த அரங்கம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சங்கீதா விவகாரத்துக்குப் பிறகு முதன்முறையாக பொதுவெளிக்கு வந்திருக்கும் விஜய், தஞ்சையில் இன்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சியில் பேசினார். தனது பேச்சில் கிரிக்கெட்டில் கூட தமிழகத்தை டெல்லி ஜெயிக்கமுடியாது என சொன்ன விஜய், சிஎஸ்கே ஜெயிக்கும், தவெகவும் ஜெயிக்கும் என கூறியுள்ளார்.

தமிழக அரசியல் தற்போது நான்கு முனைப் போட்டி நிலைக்கு சென்றுள்ளது. M. K. Stalin தலைமையிலான திமுக கூட்டணி, அதிமுக-பாஜக அணிமுகம், நாம் தமிழர் கட்சி, மற்றும் தமிழக வெற்றிக் கழகம் ஆகியவை தனித்தனி அணிகளாக களமிறங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இதனால் தேர்தல் களம் நாளுக்கு நாள் சூடு பிடித்து வருகிறது. இந்த சூழலில், கட்சியின் நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து ஆலோசனை நடத்துவதற்காக தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டி அருகே அய்யாசாமிபட்டி பிரிவு சாலையில் 10 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் தற்காலிக திடல் அமைக்கப்பட்டது.

TVK Vijay tamilaga vettri kazhagam

காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை கூட்டம் நடைபெறும் வகையில் திட்டமிடப்பட்டது. தஞ்சாவூர் மாவட்டத்திற்குட்பட்ட 8 சட்டப்பேரவைத் தொகுதிகளைச் சேர்ந்த நிர்வாகிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். மொத்தம் 4,900 பேருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. பொதுமக்கள் பங்கேற்பு இல்லாமல், இது முழுக்க நிர்வாகிகள் சந்திப்பாகவே நடத்தப்பட்டது.

ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, திடலுக்குள் நுழையும்போது க்யூஆர் கோடு ஸ்கேன் செய்யப்பட்டு அனுமதி வழங்கப்பட்டது. பாதுகாப்பு காரணங்களால் போலீசார் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியிருந்தனர்.

தொடர்ந்து சாலை மார்க்கமாக நிகழ்ச்சி நடைபெறும் இடத்துக்கு வந்த விஜய்க்கு வழிநடிகளும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நின்று வரவேற்பு கொடுத்தனர். அவரை புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, செங்கோட்டையன் உள்ளிட்ட நிர்வாகிகள் விஜயை வரவேற்றனர். தனது பிரச்சார வாகனத்தின் மீது ஏரியா விஜய் பச்சை துண்டு அணிந்து பேச்சை தொடங்கினார்.

நிகழ்ச்சியில் பேசிய அவர்," ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி என அதிரடியாக பேசினார். தொடர்ந்து பேசிய அவர்," தற்போது டெல்லி அணி தமிழ்நாடு அணி என பேசுகிறார்கள். வெள்ளை குடை பிடித்து டெல்லி அணிக்கு ஆதரவாக நின்றவர்கள் யார்? அரசியலில் மட்டுமல்ல கிரிக்கெட்டில் கூட தமிழ்நாடு அணியை டெல்லி அணியும் வெல்ல முடியாது.

சிஎஸ்கே.. சிஎஸ்கே 2026-ல் வெல்லும். தமிழக வெற்றிக் கழகமும் அப்படித்தான். கிரிக்கெட்டுல விசில் போடுறது நம்ம CSK.. வர போற தேர்தல்ல விசில் போட போறது நம்ம TVK மற்றவர்களுக்கு தான் இது ஒரு எலக்சன்.. தமிழக மக்களுக்கு இது ஒரு எமோஷன். அடுத்த ஜென்மத்தில் விவசாய குடும்பத்தில் பிறக்க ஆசை டெல்டாக்காரன் என டால்டா ஊத்த விரும்பவில்லை" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+