நம்முடைய ஒரே குறிக்கோள் அதுதான்! வாழ்த்து கூறிய பிரதமர் மோடிக்கு நன்றி சொல்லி விஜய் சொன்ன மெசேஜ்
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் இமாலய வெற்றி பெற்ற விஜய்க்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியிருந்தார். தற்போது விஜய் பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார். அதோடு, "மக்களின் நலனே நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில வளர்ச்சியின் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும்" என்றும் கூறியுள்ளார்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்ட தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் இமாலய வெற்றி பெற்றுள்ளார். மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற நிலையில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றது.

விஜய்க்கு வாழ்த்து கூறிய பிரதமர் மோடி
தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய், விரைவில் தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார். ஆட்சி அமைக்க உரிமை கோரி ஆளுநரிடம் மின்னஞ்சல் வாயிலாக கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு 108 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இருக்கும் நிலையில் பெரும்பான்மைக்கு இன்னும் 10 எம்எல்ஏக்கள் தேவை. அந்த ஆதரவை யார்-யார் அளிக்கப்போகிறார்கள் என்பது அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
காங்கிரஸ் தயவை விஜய் நாடியிருப்பதாகவும் வேறு சில கட்சிகளுடன் தவெக தரப்பில் பேச்சு நடப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே, தனிப்பெரும் கட்சியாக வென்ற விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருந்தார். பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், "சிறப்பான வெற்றியை பெற்றுள்ள தவெகவிற்கு எனது வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
மத்திய அரசு உதவி செய்யனும்
தமிழக வளர்ச்சிக்காகவும் நலனுக்காகவும் மத்திய அரசு எல்லா வகையிலும் ஆதரவு அளிக்கும் என்று பதிவிட்டு இருந்தார்." பிரதமர் மோடியின் இந்த பதிவுக்கு நன்றி தெரிவித்துள்ள விஜய், பதிவிட்டு இருப்பதாவது:- பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.
மக்களின் நலனே நமது ஒரே குறிக்கோளாக இருக்க வேண்டும். அரசியலுக்கு அப்பாற்பட்டு மாநில வளர்ச்சியின் முன்னேற்றத்தில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த முயற்சிக்கு மத்திய அரசின் உதவியை நாங்கள் தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
திமுகவில் இருந்து தூக்கலாம்! மோடியை பார்த்ததும் புது தெம்பில் விஜய்! ஆதவ் அர்ஜுனாவுடன் அவசர மீட்டிங் -
விஜய் வீட்டுக்கு பக்கத்தில் வீடு வாங்கணும்! பனையூரை வட்டமடிக்கும் ரியல் எஸ்டேட் முதலைகள்! என்ன விலை? -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்து இரவு முழுவதும் தங்கிய அமைச்சர் மதன் ராஜாவுக்குப் பாராட்டு -
அதிமுகவை நோக்கி தவெக போட்ட வலை.. எம்ஜிஆரை தூக்கும் போதே யோசிச்சுருக்கனும்! கோட்டை விட்ட எடப்பாடி! -
“PR பில்டப்லாம் போதும்.. முதல்ல மக்களோட பாதுகாப்பையும் கொஞ்சம் பாருங்க விஜய் சார்..” அதிமுக காட்டம்! -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
திருச்செந்தூர் கோயிலில் அமைச்சரிடமே லஞ்சம்.. அர்ச்சகர் பூஜை செய்ய தடை.. 2 காவலாளிகள் சஸ்பெண்ட்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
எடப்பாடியை சந்திக்காத இரு துருவங்கள்! தவெக தலைமையுடன் சிவி சண்முகம், விஜயபாஸ்கர் ரகசிய ஆலோசனை? -
“MLA-களை பிடிப்பதை விட்டுவிட்டு.. போலீஸை ஆக்கப்பூர்வமா செயல்பட வைக்கவும்!” விஜய்க்கு உதயநிதி அட்வைஸ்












Click it and Unblock the Notifications